புதன், 31 ஆகஸ்ட், 2016

செப்டம்பர் 02 (September02)

 செப்டம்பர் 02 (September 02)
செப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்


    கிமு 44 - எகிப்தின் பாரோ ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.
    கிமு 31 - கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.
    1642 - இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.
    1666 - இலண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
    1752 - கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    1792 - பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.
    1806 - சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட நிலசரிவில் 457 பேர் கொல்லப்பட்டனர்.
    1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.
    1870 - பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.
    1885 - வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.
    1898 - பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.
    1935 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.
    1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாசி செருமனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
    1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
    1945 - வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.
    1946 - பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
    1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
    1958 - அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
    1965 - பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.
    1967 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.
    1970 - சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.
    1990 - மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
    1992 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.
    1996 - பிலிப்பீன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
    1998 - நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் கொல்லப்பட்டனர்.
    2006 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

பிறப்புக்கள்

    1838 – லில்லியுகலானி, அவாய் ஆட்சியாளர் (இ. 1917)
    1866 – சாள்ஸ் வின்சன்ட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டாளர் (இ. 1943)
    1913 - இசுரேல் கெல்ஃபாண்ட், உருசிய கணிதவியலர் (இ. 2009)
    1952 – ஜிம்மி கான்னர்ஸ், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
    1964 – கேயானு ரீவ்ஸ், கனேடிய நடிகர்
    1966 – சல்மா ஹாயெக், மெக்சிக்க-அமெரிக்க நடிகை
    1969 – ஸ்டீபன் பியல், சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்
    1973 – இந்திக டி சேரம், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
    1988 – இஷாந்த் ஷர்மா, இந்துயத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

    1969 - ஹோ சி மின், வியட்நாம் தலைவர் (பி. 1890)
    1973 - ஜே. ஆர். ஆர். டோல்கீன், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892)
    1996 - பேடி கிளிஃப்ட், சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் (பி. 1953)
    2009 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைஇச்சர் (பி. 1949)

சிறப்பு நாள்

    சர்வதேச தேங்காய் தினம்
    வியட்நாம் - குடியரசு நாள் (1945)
    ஜேர்மனி - வெற்றி நாள் (1870, பிரான்சுடன் இடம்பெற்ற போரில்)
    திரான்ஸ்னிஸ்திரியா - விடுதலை நாள் (1990, எந்த நாட்டினாலும் இது அங்கீகரிக்கப்ப்படவில்லை)

செப்டம்பர் 1 (September 1)

செப்டம்பர் 1 (September 1)
செப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.
    1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.
    1798 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.
    1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.
    1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.
    1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
    1902 – முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) பிரான்சில் திரையிடப்பட்டது.
    1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
    1914 - கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.
    1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் கொல்லப்பட்டனர்.
    1928 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
    1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.
    1951 - ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.
    1961 - எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
    1969 - அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
    1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
    1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.
    1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.
    1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.
    1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
    1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
    1991 - உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.
    2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.
    2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

    1875 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 1950)
    1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)
    1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)
    1896 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, இந்திய ஆன்மிகவாதி, உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவர் (இ. 1977)
    1925 – ராய் கிளாபர், அமெரிக்க இயற்பியலாளர்
    1929 – ஜி. நாகராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 1981)
    1930 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடக்கலைஞர் (இ. 2015)
    1932 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 2006)
    1933 – தா. திருநாவுக்கரசு, இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1982)
    1947 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (இ. 2016)
    1957 – குளோரியா எஸ்தேபான், கியூபா-அமெரிக்க நடிகை
    1967 – கிரேக் கில்லெஸ்பி, ஆத்திரேலிய இயக்குனர்
    1970 – பத்மா லட்சுமி, இந்திய-அமெரிக்க நடிகை
    1980 – கரீனா கபூர், இந்திய நடிகை

இறப்புகள்

    1159 – நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100)
    1557 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491)
    1581 – குரு ராம் தாஸ், 4வது சீக்கிய குரு (பி. 1534)
    1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் (பி. 1638)
    1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910
    1980 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறினர் (பி. 1913)
    2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)

சிறப்பு நாள்

    விடுதலை நாள் (உசுபெக்கிசுத்தான், 1991)
    புரட்சி நாள் (லிபியா, 1969)

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஆகஸ்டு 31 (August 31)

ஆகஸ்டு 31 (August 31) 
ஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1422 - ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
1886 - தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1888 - கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 - தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
1919 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
1920 - போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1942 - மேற்கு உக்ரைன், டெர்னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 - ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.
1962 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.
1968 - கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
1978 - இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 - கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
1986 - சோவியத் பயணிகள் கப்பல் "அட்மிரல் நகீமொவ்" கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.
1994 - ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 - வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 - வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
1999 - புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார்.
பிறப்புக்கள்
1569 - ஜஹாங்கீர், முகலாயப் பேரரசின் மன்னன் (இ. 1627)
1870 - மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர் (இ. 1952)
1905 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
1944 - கிளைவ் லொயிட், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
1979 - யுவன் சங்கர் ராஜா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
1814 - ஆர்தர் பிலிப், பிரித்தானிய கடற்படை அட்மிரல், காலனித்துவ நிர்வாகி (பி. 1738)
1963 - ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (பி. 1882)
1997 - டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)

சிறப்பு நாள்
மலேசியா - விடுதலை நாள் (1957)
திரினிடாட் டொபாகோ - விடுதலை நாள் (1962)
கிர்கிஸ்தான் - விடுதலை நாள் (1991)

ஆகஸ்டு 30 (August 30)

ஆகஸ்டு 30 (August 30) 
ஆகஸ்டு 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1574 - குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
1791 - இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-ரஷ்யக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்காப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1897 - மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
1918 - விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.
1945 - பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது.
1984 - டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1990 - தத்தர்ஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 - மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
1999 - கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிறப்புகள்
1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)
1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)
1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
1903 – பகவதி சரண் வர்மாரிந்திய எழுத்தாளர் (இ. 1981)
1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்
1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி
1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்
1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை
1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
இறப்புகள்
1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)
1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)
1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)
1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])
2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)
2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)
2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])
2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)
2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)
2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)
சிறப்பு நாள்
தேசிய நாள் (தர்தாரிஸ்தான்)
அனைத்துலக காணாமற்போனோர் நாள்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆகஸ்டு 29 (August 29)

ஆகஸ்டு 29 (August 29)
ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
708 - செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
1498 - வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
1521 - ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
1541 - ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.
1655 - வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.
1658 - புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1756 - ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
1782 - திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
1825 - பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.
1831 - மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
1842 - நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
1885 - கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
1898 - குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1907 - கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1910 - ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
1930 - சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
1944 - 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1944 - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
1949 - சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.
1966 - பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
1991 - சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
1995 - முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
1996 - நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 - அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.
பிறப்புக்கள்
1632 - ஜான் லாக், ஆங்கிலேயத் தத்துவவியலாளர் (இ. 1704)
1923 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (இ. 2014)
1936 - ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்
1958 - மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், (இ. 2009)
1959 - அகினேனி நாகார்ஜூனா, இந்திய நடிகர்
1977 - விஷால், திரைப்பட நடிகர்
இறப்புகள்
1976 - காசி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர் (பி. 1899)
2008 - ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)
2009 - மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்
சிறப்பு நாள்
இந்தியா - தேசிய விளையாட்டு நாள்

ஆகஸ்டு 28 (August 28)

ஆகஸ்டு 28 (August 28)
ஆகஸ்டு 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1349 - கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1511 - போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.
1521 - ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர்.
1619 - ஜெர்மனியின் இரண்டாம் பேர்டினண்ட் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
1789 - வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1844 - பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845 - சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849 - ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.
1879 - சூளுக்களின் கடைசி மன்னன் செட்ஸ்வாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898 - காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913 - நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1916 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன.
1922 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
1924 - சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1931 - பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1943 - நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
1963 - மார்ட்டின் லூதர் கிங், 200,000 பேருடன் ‘என் கனவு யாதெனில்...’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964 - பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது.
1979 - ஐ.ஆர்.ஏயின் குண்டு ஒன்று பிரசல்சில் வெடித்தது.
1988 - ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1991 - சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.
1991 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.
1996 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
2006 - திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 - இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.
பிறப்புக்கள்
1749 - ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, ஜெர்மனிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1832)
1828 - லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910)
1855 - ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
1863 - அய்யன்காளி, தலித் தலைவர் (இ. 1914)
1957 - ஈவோ யொசிப்போவிச், குரோவாசியா அரசியல்வாதி
1965 - ஷானியா ட்வைன், கனடிய நாட்டுப்புற பாப் பாடகர்
1983 - லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்
இறப்புகள்
430 - புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354)
1891 - ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814)
1973 - முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)
சிறப்பு நாள்
புனித அகஸ்டீன் கிருத்தவத் திருவிழா

ஆகஸ்டு 27 (August 27)

ஆகஸ்டு 27 (August 27)
ஆகஸ்டு 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1689 – இரசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.
1776 - பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
1813 - ஆஸ்திரியா, ரஷ்யா, மற்றும் புரூசியா படைகளை நெப்போலியன் "டிறெஸ்டென்" என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1816 - அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
1828 - ரஷ்யப் படை "அக்கால்சிக்" என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
1828 - பிரேசிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
1859 - பென்சில்வேனியாவின் "டிட்டுஸ்வில்" என்ற இடத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
1881 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
1893 - ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1896 - ஆங்கிலோ-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
1916 - முதலாம் உலகப் போர்: ருமேனியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1921 – 1916 இல் ஓட்டோமான் பேரரசுடன் போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை பிரித்தானியர் ஈராக்கின் மன்னனாக ஈராக்கின் முதலாம் பைசல் என்ற பெயரில் அறிவித்தனர்.
1928 - போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
1939 - உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.
1952 - லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
1962 - நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.
1975 - போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
1979 - அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1982 - துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
1985 - நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.
2000 - மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
2006 - அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
1770 - ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (இ. 1831)
1876 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1954)
1908 - தண்டபாணி தேசிகர், கருநாடக இசைப் பாடகர்
1908 - டொன் பிறட்மன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001)
1942 - வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
1972 - தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர்
இறப்புகள்
1879 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
1963 - டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமையாளர் (பி. 1868)
1965 - லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து கட்டிடக் கலைஞர் (பி. 1887)
1975 - முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (பி. 1892)
1976 - முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923)
1979 - மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய அட்மிரல் (பி. 1900)
சிறப்பு நாள்
மால்டோவா - விடுதலை நாள் (1991)

ஆகஸ்டு 26 (August 26)

ஆகஸ்டு 26 (August 26)
ஆகஸ்டு 26 (August 26) கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1768 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான்.
1795 - திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.
1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.
1920 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1942 - உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.
1957 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
1972 - 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.
1978 - முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.
1978 - முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
1993 - யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
1997 - அல்ஜீரியாவில் 60க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 - திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.
பிறப்புகள்
1728 – லாம்பர்ட், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1777)
1743 – அந்துவான் இலவாசியே, பிரெஞ்சு வேதியியலாளர், உயிரியலாளர் (இ. 1794)
1880 – கியோம் அப்போலினேர், இத்தாலிய-பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)
1882 – ஜேம்ஸ் பிராங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1964)
1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)
1910 – அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்ற மக்கெடோனிய-இந்திய அருட்சகோதரி (இ. 1997)
1927 – அ. அமிர்தலிங்கம், ஈழத்து அரசியல்வாதி (இ. 1989)
1933 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)
1934 – ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)
1952 – பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் நஞ்சு அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)
1954 – ராஜ்கிரண், இந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர்
1956 – மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி
1980 – கிறிஸ் பைன், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1723 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632)
1865 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (பி. 1791)
1951 – அபலா போஸ், வங்காள சமூக சேவகி (பி. 1864)
1969 – எஸ். எஸ். வாசன், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1903)
1995 – என். பி. அப்துல் ஜப்பார், சிறுகதை எழுத்தாளர் (பி. 1919)
2012 – த. சரவணத் தமிழன், தனித்தமிழ் அறிஞர், நூலாசிரியர்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஆகஸ்டு 25 (August 25)

ஆகஸ்டு 25 (August 25)
ஆகஸ்டு 25 (August 25) கிரிகோரியன் ஆண்டின் 237 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 238 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1580 - ஸ்பெயின் அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் போர்த்துக்கலை வென்றது.
1609 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.
1732 - யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் நியமிக்கப்பட்டான்.
1758 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் மன்னன் சோண்டோர்ஃப் என்ற இடத்தில் ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடித்தான்.
1768 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
1803 - யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
1825 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது.
1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
2003 - மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2007 - கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1906 - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ 1993)
1929 - எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
1962 - தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
1952 - விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
1973 - நித்யஸ்ரீ மகாதேவன், பாடகி
இறப்புகள்
1822 - வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)
1867 - மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)
1908 - ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)
1976 - எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
2007 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
2008 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
2009 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
2012 - நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)
சிறப்பு நாள்
உருகுவே - விடுதலை நாள் (1825)
பிலிப்பீன்ஸ் - தேசிய வீரர்கள் நாள்

ஆகஸ்டு 24 (August 24)

ஆகஸ்டு 24 (August 24)
ஆகஸ்டு 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1349 - ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1511 - மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.
1572 - புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின் கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப் புரொட்டெஸ்தாந்தர்கள் படுகொலைப் படலம் ஆரம்பமாயிற்று.
1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
1814 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.
1821 - மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1875 - கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.
1912 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1929 - பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1931 - பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
1939 - நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1949 - நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
1954 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1954 - பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1968 - பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.
1989 - வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.
1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.
1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.
1992 - மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
1995 - விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
2004 - மாஸ்கோவில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர்.
2006 - புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.
2006 - ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பான UNOPS அலுவலர் ஒருவர் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். சங்கதி
2008 - சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.
பிறப்புக்கள்
1817 - டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)
1906 - நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
1929 - யாசர் அரபாத், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2004)
1941 - இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்
1947 - பௌலோ கோலோ, பிரேசில் நாட்டு எழுத்தாளர்
1963 - தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்
1965 - ரெஜி மிலர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1979 - மைக்கல் ரெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1832 - சாடி கார்னோ, பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1796)
1972 - வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)
2014 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)
சிறப்பு நாள்
புனித பார்த்தெலோமேயு நாள்
உக்ரேன் - விடுதலை நாள் (1991)

ஆகஸ்டு 23 (August 23)

ஆகஸ்டு 23 (August 23)
ஆகஸ்டு 23 (August 23) கிரிகோரியன் ஆண்டின் 235 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 236 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 130 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1305 - ஸ்கொட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் வில்லியம் வொலஸ், இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னனால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.
1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரைமைகள் வழங்கப்பட்டன.
1784 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.
1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.
1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது.
1929 - பாலஸ்தீனத்தில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 133 பேரைக் கொன்றனர்.
1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
1952 - அரபு லீக் அமைக்கப்பட்டது.
1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது.
1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.
1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன.
2000 - பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.
பிறப்புகள்
1754 – பிரான்சின் பதினாறாம் லூயி (இ. 1793)
1766 – ஒப்மான்செக், செருமானியத் தாவரவியலாளர் இ. 1849
1872 – த. பிரகாசம், ஆந்திராவின் 1வது முதலமைச்சர் (இ. 1957)
1896 – ம. இரா. சம்புநாதன், வடமொழி மறைகள் நான்கையும் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. 1974)
1914 – டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)
1918 – அன்னா மாணி, இந்திய இயற்பியலாளர் (இ. 2001)
1919 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)
1923 – பல்ராம் சாக்கர், இந்திய அரசியல்வாதி (இ. 2016)
1940 – தாமஸ் ஸ்டைட்ஸ், அமெரிக்க உயிரியற்பியலாளர்
1946 – இரா. வை. கனகரத்தினம், இலங்கைத் தமிழ் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 2016)
1950 – ரோசா ஒட்டுன்பாயெவா, கிர்கித்தான் அரசுத்தலைவர்
1956 – மோகன், இந்தியத் திரைப்பட நடிகர்
1963 – பார்க் சான்-வூக், தென்கொரிய இயக்குநர்
1974 – கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
1974 – ரே பார்க், இசுக்கொட்டிய நடிகர்
இறப்புகள்
634 – அபூபக்கர், அரேபியக் காலிபா (பி. 573)
1305 – வில்லியம் வேலசு, இசுக்கொட்டிய இராணுவத் தலைவர் (பி. 1272)
1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (பி. 1592)
1806 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1736)
1951 – வ. ரா., தமிழக எழுத்தாளர் (பி. 1889)
1976 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929)
1984 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1893)
2000 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (பி. 1952)
2010 – இரா. சாரங்கபாணி, தமிழறிஞர் (பி. 1925)
2011 – ஜே. சி. டேனியல், இந்திய இயற்கையியலாளர் (பி. 1927)
சிறப்பு நாள்
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்

சனி, 20 ஆகஸ்ட், 2016

ஆகஸ்டு 22 ( August 22 )

ஆகஸ்டு 22 ( August 22 ) கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 131 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1639 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள். 1642 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் ஆங்கில நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1717 - ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர். 1770 - ஜேம்ஸ் குக் தனது ஆட்களுடன் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான். 1780 - கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. ( ஹவாயில் குக் கொல்லப்பட்டான்). 1798 - ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர். 1831 - வேர்ஜீனியாவில் நாட் டர்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். 1848 - நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. 1860 - பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர். 1864 - 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள். 1875 - சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது. 1910 – கொரியா - ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1911 - பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. 1914 - முதலாம் உலகப் போர் : பெல்ஜியத்தில் , பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர். 1926 - தென்னாபிரிக்கா , ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1932 - தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது. 1941 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1942 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனி மீது பிரேசில் போரை அறிவித்தது. 1944 - இரண்டாம் உலகப் போர் : சோவியத் ஒன்றியம் ருமேனியாவைக் கைப்பற்றியது. 1949 - கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. 1962 - பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது. 1972 - ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது. 1978 - சண்டினீஸ்டா படைகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர். 1989 - நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது. 1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது. பிறப்புக்கள் 1877 - ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (இ. 1947 ) 1902 - லெனி ரீபென்ஸ்டால் , செருமானிய நடிகை (இ. 2003 ) 1904 - டங் சியாவுபிங் , சீன அரசியல்வாதி (இ. 1997 ) 1920 - ரே பிராட்பரி , அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012 ) 1975 - ரோட்ரிகோ சாண்டோரோ , பிரேசில் நடிகர் 1991 - பெட்ரிக்கோ மெக்கெடா, இத்தாலியக் காற்பந்து வீரர் இறப்புகள் 1485 - இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452 ) 1967 - கிரிகோரி குட்வின் பிங்கஸ் , அமெரிக்க உயிரியலாளர் (பி. 1903 ) 2011 - யக் லேற்ரன் , கனடிய அரசியல்வாதி (பி. 1950 ) 2014 - யூ. ஆர். அனந்தமூர்த்தி , கன்னட எழுத்தாளர் (பி. 1932 ) சிறப்பு நாள் சென்னை தினம்

ஆகஸ்டு 21 ( August 21 )

ஆகஸ்டு 21 ( August 21 ) கிரிகோரியன்
ஆண்டின் 233 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1770 - கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு
அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை
பெரிய பிரித்தானியாவுக்குச்
சொந்தமாக்கி அதற்கு நியூ
சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
1821 - ஜார்விஸ் தீவு
கண்டுபிடிக்கப்பட்டது.
1831 - கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை
தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத்
தொடங்கினார்.
1842 - டாஸ்மானியாவின் தலைநகர்
ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
கூட்டமைப்புத் தீவிரவாதிகளின்
தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில்
லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
1911 - லியனார்டோ டா வின்சியின்
ஓவியமான மோனா லிசா பாரிசின்
லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து
திருடப்பட்டது.
1920 - சேர் ஏ. கனகசபை இலங்கையின்
அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப்
பிரதிநிதியாகத் தெரிவானார்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.
1945 - இரண்டாம் உலகப் போர் :
சாலமன் தீவுகள் தொடர் சமர்
முடிவடைந்தது.
1959 - ஹவாய் ஐக்கிய
அமெரிக்காவின் 50வது
மாநிலமாக இணைக்கப்பட்டது.
1963 - தெற்கு வியட்நாமின் குடியரசு
இராணுவத்தினர் நாட்டின் பௌத்த
தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக்
கொன்றனர்.
1968 - சோவியத் தலைமையிலான வார்சா
ஒப்பந்த நாடுகளின் படையினர்
செக்கோஸ்லவாக்கியாவைக்
கைப்பற்றின.
1969 - ஆஸ்திரேலியனான மைக்கல்
டெனிஸ் ரொஹான்
என்பவன் ஜெருசலேமின் அல்
அக்சா மசூதிக்குத் தீ வைத்தான்.
1983 - பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர்
பெனீனோ அக்கீனோ மணிலாவில்
கொலை செய்யப்பட்டார்.
1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில்
காபனீரொட்சைட்டு வளிமம்
கசிந்ததில் 1,800 பேர் வரையில்
கொல்லப்பட்டனர்.
1991 - லாத்வியா சோவியத்
ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை
அறிவித்தது.
1991 - சோவியத் தலைவர் மிக்கைல்
கொர்பச்சோவ் மீதான ஆட்சிக்
கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
2007 - சூறாவளி டீன் மெக்சிகோவை 165
மைல்/மணி வேகத்தில் தாக்குதலை
ஆரம்பித்தது.
பிறப்புகள்
1567 – பிரான்சிசு டி சேலசு,
சுவிட்சர்லாந்துப் புனிதர் (இ. 1622)
1765 – ஐக்கிய இராச்சியத்தின்
நான்காம் வில்லியம் (இ. 1837 )
1907 – ப. ஜீவானந்தம் , இந்தியப்
பொதுவுடமைவாதி (இ. 1963 )
1917 – லியோனிடு ஹுர்விக்ஸ் , உருசியப்
பொருளியலாளர்,
கணிதவியலாளர் (இ. 2008 )
1961 – வ. பி. சந்திரசேகர் , இந்தியத்
துடுப்பாட்ட வீரர்
1963 – மொரோக்கோவின் ஆறாம்
முகம்மது
1973 – சேர்ஜி பிரின், கூகுள் நிறுவனர்
1978 – பூமிகா சாவ்லா , இந்திய நடிகை
1984 – நியல் டெக்ஸ்டர் ,
தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட
வீரர்
1984 – பருன் சொப்டி , இந்திய
நடிகர்
1985 – மேலீசா , பிரெஞ்சுப் பாடகி
1986 – உசேன் போல்ட், ஜமைக்கா ஓட்டவீரர்
இறப்புகள்
1940 – லியோன் திரொட்ஸ்கி ,
உருசியப் புரட்சியாளர் செஞ்சேனையைத்
தோற்றுவித்தவர் (பி. 1879 )
1995 – சுப்பிரமணியன் சந்திரசேகர் , நோபல்
பரிசு பெற்ற இந்திய
இயற்பியலாளர் (பி. 1910 )
2004 – சச்சிதானந்த ராவுத்ராய் ,
இந்திய ஒரியக் கவிஞர் (பி. 1916 )
2006 – பிசுமில்லா கான் , இந்திய
செனாய் இசைக்கலைஞர் (பி. 1916)

ஆகஸ்டு 20 ( August 20 )

ஆகஸ்டு 20 ( August 20 ) கிரிகோரியன்
ஆண்டின் 232 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
636 - அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம்
இருந்து சிரியா , பாலஸ்தீனம்
ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
1000 - ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன்
என்பவனால் உருவாக்கப்பட்டது.
1866 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ
ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர்
முடிவுக்கு வந்ததாக
அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1914 - முதலாம் உலகப் போர் :
பெல்ஜியத்தின் தலைநகர்
பிரசெல்சை ஜேர்மனியப் படைகள்
கைப்பற்றின.
1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள்
வழங்கப்பட்டது.
1940 - மெக்சிக்கோவில்
இடம்பெற்ற கொலை முயற்சி
ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன்
ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று
அடுத்த நாள் மரணமானார்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ருமேனியா மீது சோவியத் ஒன்றியம்
தாக்குதலை ஆரம்பித்தது.
1948 - "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை
நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டது. இதன்
மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத்
தொழிலாளர்களான இந்திய
வம்சாவளித் தமிழர்கள்
நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
1953 - ஐதரசன் குண்டைத் தாம்
சோதித்ததாக சோவியத் ஒன்றியம்
அறிவித்தது.
1960 - செனெகல் மாலிக்
கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக
அறிவித்தது.
1968 - பனிப்போர் : 200,000 வார்சா
ஒப்பந்த நாடுகளின் படைகள்
செக்கோஸ்லவாக்கியாவினுள்
புகுந்தன.
1975 - நாசா வைக்கிங் 1 விண்கலத்தை
செவ்வாயை நோக்கி ஏவியது.
1977 - நாசா வொயேஜர் 2
விண்கலத்தை ஏவியது.
1988 - ஈரான் – ஈராக் போர் : 8
ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம்
உடன்பாடாகியது.
1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில்
இருந்து விலகி மீண்டும் தனி
நாடாகியது.
1997 - அல்ஜீரியாவில் 60
பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டனர்.
2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண்
காணாமல் போனமை, 2006 : கத்தோலிக்க
அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது
உதவியாளர் விமலதாஸ் ஆகியோர்
அல்லைப்பிட்டியில் காணமால்
போனார்கள்.
2006 - நமது ஈழநாடு பணிப்பாளர்,
முன்னாள் யாழ்ப்பாணம்
பாராளுமன்ற உறுப்பினர் சி.
சிவமகராஜா சுட்டுக்கொலை
செய்யப்பட்டார்.
பிறப்புகள்
1890 – எச். பி. லவ்கிராஃப்ட்,
அமெரிக்க எழுத்தாளர், கவிஞர்
(இ. 1937 )
1910 – ஈரோ சாரினென் , கேட்வே ஆர்ச்சை
வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க
கட்டிடக்கலைஞர் (இ. 1961 )
1913 – ரோஜர் ஸ்பெர்ரி , நோபல் பரிசு
பெற்ற அமெரிக்க மருத்துவர்
(இ. 1994 )
1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின்
6வது பிரதமர் (இ. 1991 )
1946 – நா. ரா. நாராயணமூர்த்தி ,
இந்தியத் தொழிலதிபர்
1951 – முகம்மது முர்சி , எகிப்தின் 5வது
அரசுத்தலைவர்
1974 – ஏமி ஆடம்சு , அமெரிக்க நடிகை
1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட் ,
அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
1984 – மதுமிதா , இந்திய நடிகை
1992 – டெமி லோவாடோ ,
அமெரிக்கப் பாடகி, நடிகை
இறப்புகள்
984 – பதினான்காம் யோவான்
(திருத்தந்தை)
1572 – மிகுவெல் உலோபசு டி
லெகாசுபி , எசுப்பானிய
அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது
ஆளுநர் (பி. 1502)
1854 – பிரீடரிக் ஷெல்லிங்,
செருமானிய மெய்யியலாளர்
(பி. 1775 )
1912 – வில்லியம் பூத் , இரட்சணிய சேனையை
உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829 )
1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி.
1835 )
1915 – கார்லோஸ் பின்லே, கியூபா
மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833 )
1943 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை
ராஜா , தமிழக அரசியல்வாதி (பி.
1883 )
2006 – சி. சிவமகராஜா , இலங்கை
அரசியல்வாதி (பி. 1938]])
2011 – ராம் சரண் சர்மா, இந்திய
வரலாற்றாளர் (பி. 1919 )
2013 – நரேந்திர தபோல்கர், இந்திய
எழுத்தாளர் (பி. 1945 )
2014 – பி. கே. எஸ். அய்யங்கார் , யோகா
ஆசிரியர் (பி. 1918 )

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஆகஸ்டு 19 ( August 19 )

ஆகஸ்டு 19 ( August 19 ) கிரிகோரியன்
ஆண்டின் 231 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 232 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 134 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1862 - மினசோட்டாவில் லகோட்டா
பழங்குடியினர் நியூ ஊல்ம்
குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல
வெள்ள்ளையர்களைக்
கொன்றனர்.
1895 - கொழும்பு தலைமை அஞ்சல்
அலுவலகம் திறக்கப்பட்டது.
1915 - முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்
பேரரசுப்
படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள்
தாக்குதலைத் தொடுத்தனர்.
1919 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து
ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை
அடைந்தது.
1934 - ஜெர்மனியில் பியூரர் பதவியை
ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள்
ஆதரவாக வாக்களித்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர் : நாசி
ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு
எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன்
பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.
1945 - ஹோ ஷி மின் தலைமையில் வியெட்
மின் படைகள் வியெட்நாமின் ஹனோய்
நகரைக் கைப்பற்றினர்.
1946 - கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும்
இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற
கலகத்தில் 3000 பேர்
கொல்லப்பட்டனர்.
1953 - பனிப்போர் : அமெரிக்காவின்
சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது
மொசாடெக்கின் அரசு
கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா
பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம்
பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற
இரு நாய்களையும் , 40
சுண்டெலிகளையும், 2 எலிகளையும் , பல
வகைத் தாவரங்களையும் கொண்டு
சென்றது.
1980 - சவுதி அரேபியாவில் பயணிகள்
விமானம் ஒன்று தரையிறங்குகையில்
தீப்பிடித்ததில் 301 பேர்
கொல்லப்பட்டனர்.
1989 - போலந்தின் பிரதமராக
சொலிடாறிற்றி
தொழிற்சங்கவாதி டாடியூஸ்
மசவியேஸ்கி அதிபர்
ஜாருசெல்ஸ்கியினால்
தெரிவுசெய்யப்பட்டார். 42
ஆண்டுகளின் பின்னர் தெரிவு
செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட்
அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில்
சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா
என்ற சுற்றுலா மையத்தில்
ஓய்வெடுக்கும் போது கைது
செய்யப்பட்டு வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டார்.
2002 - ரஷ்யாவின் Mi-26 ரக உலங்கு
வானூர்தி செச்சினியத்
தீவிரவாதிகளின் ஏவுகணையால்
தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1869 – ஐசாக் தம்பையா , இலங்கைத்
தமிழ்க் கல்விமான், இறையியலாளர் (இ.
1941 )
1871 – ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும்
ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ.
1948 )
1878 – மானுவல் எல். குவிசோன் ,
பிலிப்பீன்சின் 2வது அரசுத்தலைவர் (இ. 1944 )
1887 – சத்தியமூர்த்தி , இந்திய
அரசியல்வாதி (இ. 1943 )
1895 – செ. சுந்தரலிங்கம், இலங்கைத்
தமிழ் அரசியல்வாதி (இ. 1985 )
1901 – லிம் லியான் கியோக், மலேசிய சமூக
நீதி செயல்பாட்டாளர் (இ. 1985 )
1906 – பைலோ பார்ன்சுவர்த் ,
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ.
1971 )
1918 – சங்கர் தயாள் சர்மா,
இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ.
1999 )
1924 – வில்லார்டு பாயில் , நோபல் பரிசு
பெற்ற கனடிய இயற்பியலாளர் (இ.
2011 )
1929 – ச. அகத்தியலிங்கம் , தமிழக
மொழியியலாளர் (இ. 2008 )
1931 – ஜி. கே. மூப்பனார் தமிழக
அரசியல்வாதி (இ. 2001 )
1937 – கா. கலியபெருமாள் ,
மலேசிய எழுத்தாளர் (இ. 2011)
1946 – பில் கிளின்டன்,
அமெரிக்காவின் 42வது அரசுத்தலைவர்
1950 – சுதா மூர்த்தி , இந்திய சமூக
சேவையாளர், எழுத்தாளர்
1953 – ஆ. பு. வள்ளிநாயகம் ,
வரலாற்று வரைவாளர், எழுத்தாளர் (இ.
2007 )
1967 – சத்ய நாடெல்லா ,
இந்திய-அமெரிக்கத்
தொழிலதிபர்
1977 – சுவலட்சுமி, வங்காளத் திரைப்பட
நடிகை
இறப்புகள்
14 – அகஸ்ட்டஸ் , உரோமைப் பேரரசர் (பி. கிமு
63 )
1662 – பிலைசு பாஸ்கல், பிரெஞ்சுக்
கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி.
1623 )
1822 – சான் பாப்திசுத்து யோசப்
டெலாம்பர், பிரெஞ்சுக்
கணிதவியலாளர், வானியலாளர் (பி.
1749 )
1905 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ,
பிரெஞ்சு ஓவியர் (பி. 1825 )
1927 – சுவாமி சாரதானந்தர் ,
சுவாமி இராமகிருட்டிணரின் நேரடிச் சீடர்
(பி. 1865]])
1936 – ஃவெடரிக்கோ கார்சியா
லோர்க்கா , எசுப்பானியக் கவிஞர்,
இயக்குநர் (பி. 1898 )
1962 – இலாய்சி பாஸ்கல்,
பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623 )
1968 – ஜார்ஜ் காமாவ் , உக்ரைனிய-
அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1904 )
1982 – வைணு பாப்பு, இந்திய
வானியலாளர் (பி. 1927 )
1994 – லின்னஸ் பாலிங் , நோபல் பரிசு
பெற்ற அமெரிக்க
வேதியியலாளர் (பி. 1901 )
2008 – லெவி முவனவாசா ,
சாம்பியாவின் 3வது அரசுத்தலைவர் (பி.
1948 )
2014 – அடையார் கே. லட்சுமணன்,
பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி.
1933 )
2014 – ஜேம்ஸ் ஃபோலி , அமெரிக்க
புகைப்படக் கலைஞர் (பி. 1973)
சிறப்பு நாள்
ஆகத்து புரட்சி நாள் ( வியட்நாம் )
விடுதலை நாள் ( ஆப்கானித்தான்,
1919)
உலகப் புகைப்பட நாள்