ஆகஸ்டு 24 (August 24)
ஆகஸ்டு 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1349 - ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1511 - மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.
1572 - புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின் கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப் புரொட்டெஸ்தாந்தர்கள் படுகொலைப் படலம் ஆரம்பமாயிற்று.
1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
1814 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.
1821 - மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1875 - கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.
1912 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1929 - பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1931 - பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
1939 - நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1949 - நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
1954 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1954 - பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1968 - பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.
1989 - வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.
1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.
1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.
1992 - மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
1995 - விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
2004 - மாஸ்கோவில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர்.
2006 - புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.
2006 - ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பான UNOPS அலுவலர் ஒருவர் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். சங்கதி
2008 - சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.
பிறப்புக்கள்
1817 - டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)
1906 - நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
1929 - யாசர் அரபாத், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2004)
1941 - இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்
1947 - பௌலோ கோலோ, பிரேசில் நாட்டு எழுத்தாளர்
1963 - தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்
1965 - ரெஜி மிலர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1979 - மைக்கல் ரெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1832 - சாடி கார்னோ, பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1796)
1972 - வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)
2014 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)
சிறப்பு நாள்
புனித பார்த்தெலோமேயு நாள்
உக்ரேன் - விடுதலை நாள் (1991)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக