ஆகஸ்டு 18 ( August 18 ) கிரிகோரியன்
ஆண்டின் 230 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1201 - லாத்வியாவின் ரீகா நகரம்
அமைக்கப்பட்டது.
1868 - பிரெஞ்சு வானியல் நிபுணர்
பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை
ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக்
கண்டுபிடித்தார்.
1877 - செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ்
துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1891 - மார்டீனிக் தீவில் நிகழ்ந்த
பெரும் சூறாவளியினால் 700 பேர்
கொல்லப்பட்டனர்.
1917 - கிறீசில் தெசலோனிக்கி என்னும்
நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின்
பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர்
வீடுகளை இழந்தனர்.
1924 - பிரான்ஸ் ஜெர்மனியில்
இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க
ஆரம்பித்தது.
1928 - சென்னை மியூசிக் அகாதமி
அதிகாரப்பூர்வமாக தொடங்கி
வைக்கப்பட்டது.
1938 - நியூயோர்க்கையும் கனடாவின்
ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம்
தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர்
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
திறந்துவைத்தார்.
1950 - பெல்ஜியம் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட்
படுகொலை செய்யப்பட்டார்.
1958 - விளாடிமீர் நபகோவ் எழுதிய
லொலிட்டா ( Lolita ) என்ற புதினம்
அமெரிக்காவில்
வெளியிடப்பட்டது.
1971 - வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா ,
நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப
அழைக்க முடிவு செய்தன.
1983 - டெக்சாசைத் தாக்கிய
அலீசியா என்ற சூறாவளியினால் 22
பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1750 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய
இசையமைப்பாளர் (இ. 1825)
1870 – இலாவர் கோர்னிலோவ் , உருசிய
இராணுவத் தலைவர் (இ. 1918 )
1886 – ஆர். எஸ். சுபலட்சுமி , சமூக
சீர்திருத்தவாதி (இ. 1969 )
1933 – ரோமன் போலான்ஸ்கி,
பிரெஞ்சு-போலது இயக்குநர், நடிகர்
1934 – குல்சார், இந்திய இயக்குநர்
1945 – எஸ். எல். வி. மூர்த்தி , ஒரு தமிழக
எழுத்தாளர்
1962 – ஃபெலீப்பே
கால்டெரோன், மெக்சிக்கோவின்
56வது அரசுத்தலைவர்
1967 – தலேர் மெகந்தி, இந்தியப்
பாடகர், தயாரிப்பாளர்
1969 – எட்வர்டு நார்டன் ,
அமெரிக்க நடிகர்
1975 – பிள்ளையான், இலங்கை
அரசியல்வாதி, முன்னாள் போராளி
1996 – பிரியங்கா காந்தி, இந்தியப்
பொறியாளர்
இறப்புகள்
440 – மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)
1227 – செங்கிஸ் கான் , மங்கோலியப்
பேரரசர்
1850 – பல்சாக் , பிரெஞ்சு
எழுத்தாளர் (பி. 1799 )
1945 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய
அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர்
(பி. 1897 )
1992 – கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ் ,
அமெரிக்க சாகசக்காரர் (பி. 1968 )
2009 – கிம் டாய் ஜுங், தென்
கொரியாவின் 15வது
அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1925)
2011 – ஜான்சன், மலையாள
இசையமைப்பாளர் (பி. 1953 )
2012 – ரா. கி. ரங்கராஜன், இந்திய
ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1927 )
2015 – சுவ்ரா முகர்ஜி , இந்திய
எழுத்தாளர், ஓவியர் (பி. 1940)
சிறப்பு நாள்
மர நாள
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
ஆகஸ்டு 18 ( August 18 )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக