செவ்வாய், 28 ஜூன், 2016

ஜூலை 04 (July 04)


ஜூலை 04 (July 04)
ஜூலை 4 (July 4) கிரிகோரியன் ஆண்டின் 185 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 186 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 180 நாட்கள் உள்ளன. 
நிகழ்வுகள்
1054 - சுப்பர்நோவா ஒன்று சீனர்களாலும், அரபுக்களாலும் அவதானிக்கப்பட்டது.
1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா ஒன்று சீன, அரேபியர்களால் the விண்மீன் Zeta டார்சு விண்மீன் கூட்டத்தில் சேட்டா விண்மீனுக்கு அருகில் அவதானிக்கப்பட்டது.
1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் யெரூசலம் நாட்டு மன்னன் லூசிக்னனின் கை எனபவனை வென்றான்.
1634 - நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது. இது பின்னர் கியூபெக் நகரமானது.
1636 – பிராவிடென்ஸ், றோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1776 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.
1803 - லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
1810 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாம் நகரைப் பிடித்தனர்.
1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார்.
1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
1865 - ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.
1879 - ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1886 – சுதந்திரச் சிலை பிரெஞ்சு மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தார்கள்.
1892 – சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, இவ்வாண்டு 367 நாட்களை அது கொண்டது. திங்கட்கிழமை, சூலை 4 இரண்டு நாட்களாக இருந்தது.
1918 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர் (யூலியின் நாட்காட்டி).
1941 - நாசி ஜெர்மனியினரால் போலந்தில் "லூவோவ்" என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
1946 - 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
1951 – வில்லியம் ஷாக்லி இருமுனை சந்தி திரிதடையம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
1976 - என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.
1988 - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.
1997 - நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பியது.
2006 - டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
2012 – இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
பிறப்புகள்
1790 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய புவியியலாளர் (இ. 1866)
1807 - கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (இ. 1882)
1868 – ஹென்ரியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (இ. 1921)
1872 - கால்வின் கூலிஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் (இ. 1933)
1898 - குல்சாரிலால் நந்தா, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1998)
1910 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை (இ. 2010)
1959 – விக்தோரியா அபுரீல், எசுப்பானிய நடிகை
இறப்புகள்
965 – ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
1826 - ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1735)
1826 - தாமஸ் ஜெஃவ்வர்சன், ஐக்கிய அமெரிக்காவின் 3வது குடியரசுத் தலைவர்(பி. 1743)
1831 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது குடியரசுத் தலைவர்(பி. 1758)
1850 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (பி. 1759)
1902 - சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் சமயத் தலைவர் (பி. 1863)
1910 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1835)
1918 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ், (பி. 1868)
1926 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய மதகுரு (பி. 1901)
1934 - மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (பி. 1867)
1992 - கோவை மகேசன், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1938)
சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள் (1776)

சூலை 03 (July 03)


சூலை 03 (July0 3)
சூலை 3 (July 3) கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
324 - ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான்.
987 - ஹியூ காப்பெட் என்பவன் பிரான்சின் மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
1250 - பிரான்சின் ஒன்பதாம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது பாய்பர்களால் பிடிபட்டான்.
1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
1754 - ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவத்துக்குத் தலைமை வகித்தார்.
1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.
1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
1844 - ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.
1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
1872 - யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1890 - ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜேர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1962 - பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.
1969 - சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
1970 - பிரித்தானிய விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1988 - அமெரிக்க போர்க் கப்பல் பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
2006 - பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.
பிறப்புகள்
1883 - பிரான்ஸ் காஃவ்கா, எழுத்தாளர் (இ. 1924)
1918 - எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (இ. ஜூலை 18 1974
1924 - எஸ். ஆர். நாதன், சிங்கப்பூர் அதிபர்
1928 - எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப் பாடகர் (இ. அக்டோபர் 31 1990)
1942 - அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட இயக்குநர்
1962 - டாம் க்ரூஸ், அமெரிக்க நடிகர்
1980 - ஹர்பஜன் சிங், இந்தியக் கிரிக்கெட் வீரர்

சிறப்பு நாள்

பெலரஸ் - விடுதலை நாள் (1944)

சூலை 02 (July 02)


சூலை 2 (July 2) 
சூலை 2 (July 2) கிரிகோரியன் ஆண்டின் 183 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 184 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
1698 - தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1823 - பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1853 - ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
1876 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19இல் மரணமானார்.
1917 - ஐக்கிய அமெரிக்கா, இலினொய் மாநிலத்தில் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்க்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1941 - உக்ரைனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் நாசி ஜெர்மனியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966 - பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
1976 - 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன.
1990 - மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது இடம்பெற்ற நெரிசலில் 1,426 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார்.
2004 - ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
பிறப்புகள்
1877 - ஹேர்மன் ஹெசே, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர் (இ. 1962)
1925 - பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் பிரதமர் (இ. 1961)
1941 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
இறப்புகள்
1566 - நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
1582 - அக்கெச்சி மிட்சுஹீடெ, ஜப்பானிய சாமுராய் (பி. 1528)

1961 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899.

ஜூலை 01 July 01


ஜூலை 1 (July 1)
ஜூலை 1 (July 1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.
1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.
1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.
1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.
1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.
1960 - கானா குடியரசானது.
1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.
1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.
1967 - தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.
1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.
1970 - அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.
1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.
1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.
1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
2002 - தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
1924 - தி. ச. வரதராசன், ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. 2006)
1927 - சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர்
1929 - ஏ. எம். ராஜா, பின்னணிப் பாடகர் (இ. 1989)
1935 - டி. ஜி. எஸ். தினகரன், இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ மறைபரப்புனர்
1961 - கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
1961 - டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
1961 - கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்ட வீரர்
இறப்புகள்
1965 - வால்ரர் ஹமொண்ட் - ஆங்கில துடுப்பாளர் (பி. 1903)
2001 - நிக்கலாய் பாசொவ், ரஷ்ய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
1971 - வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)
சிறப்பு நாள்
கனடா - கனடா நாள்
கானா - குடியரசு நாள் (1960)
சோமாலியா - விடுதலை நாள் (1960)
ருவாண்டா - விடுதலை நாள் (1962)
புருண்டி - விடுதலை நாள் (1962)
தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால்

கோடை பண்பலை வானொலி என்ற நிலையம் தொடங்கிய நாள் (2000).

வியாழன், 9 ஜூன், 2016

ஜூன் 30 (June 30)


ஜூன் 30 (June 30) கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.
 நிகழ்வுகள்
1737 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1882 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
1905 - சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
1910 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
1912 - கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
1917 - முதல் உலகப் போர்: கிரேக்கம் மைய சக்திகள் உடன் போரை அறிவித்தது.
1934 - இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை நீள் கத்திகளுடைய இரவு செருமனியில் நிகழ்ந்தது.
1937 - உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: செர்போர்க் சண்டை முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
1956 - அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
1985 - பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
1990 - கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
2002 - பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
பிறப்புகள்
1933 - எம். ஜே. கே. சிமித், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்
1941 - பீட்டர் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1960 - டேவிட் எட்லி, பாக்கித்தானிய அமெரிக்க தீவிரவாதி
1966 - மைக் டைசன், குத்துச் சண்டை வீரர்
1969 - சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
1983 - செரில் கோல், அமெரிக்க நடன அழகி
1985 - மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்
இறப்புகள்
1917 - தாதாபாய் நவுரோஜி, இந்திய அரசியல்வாதி (பி. 1825)
1969 - மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (பி. 1909)
சிறப்பு நாள்

கொங்கோ - விடுதலை நாள் (1960)

ஜூன் 29 (June 29)


ஜூன் 29 (June 29) கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1534 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1613 - லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது.
1786 - அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
1864 - கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.
1888 - ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
1895 - சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.
1904 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
1914 - கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார்.
1925 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.
1976 - சீசெல்சு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது.
1995 - அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.
1995 - தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.
2002 - தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
2007 - ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.
பிறப்புகள்
1945 - சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர்
1981 - ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1925 - ஜார்ஜியோ நபோலிடானோ, 11வது இத்தாலிய அரசுத்தலைவர்
1978 - நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகர், நடிகை
இறப்புகள்
2009 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)
சிறப்பு நாள்

சீசெல்சு - விடுதலை நாள் (1976)

ஜூன் 28 (June 28)


ஜூன் 28 (June 28) கிரிகோரியன் ஆண்டின் 179 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 180 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1389 - ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.
1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.
1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.
1880 - அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.
1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.
1904 - "நோர்ஜ்" என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1922 - ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.
1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1994 - ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
1995 - மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.
பிறப்புகள்
1703 - ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
1907 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)
1921 - பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
1937 - எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995
1940 - முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.
1940 - கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2014)
இறப்புகள்
1836 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)

1914 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863).

ஜூன் 27 (June 27)


ஜூன் 27 (June 27) கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1358 - துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.
1801 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.
1806 - புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1896 - ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.
1954 - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1954 - உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
1957 - லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1967 - உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.
1974 - அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
1977 - சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 - முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1991 - சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
1998 - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
2007 - டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
பிறப்புகள்
1880 - ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)
1922 - அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்
1927 - டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்
இறப்புகள்
1999 - ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர் (பி. 1919)
2007 - டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)

2009 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)

ஜூன் 26 (June 26)


ஜூன் 26 (June 26) கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன. 
நிகழ்வுகள்
363 - ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான்.
1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.
1690 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
1718 - தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.
1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
1948 - முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.
1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1976 - உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
பிறப்புகள்
1824 - வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)
1838 - பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)
1892 - பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
1924 - இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)
1906 - ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)
இறப்புகள்
1995 - ஏர்னெஸ்ட் வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
சிறப்பு நாள்
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
மடகஸ்கார் - விடுதலை நாள்
ருமேனியா: கொடி நாள்
சோமாலிலாந்து - விடுதலை நாள்

ஜூன் 25 (June 25)


ஜூன் 25 (June 25) கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1678 - எலேனா பிஸ்கோபியா தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
1940 - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
1950 - வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியாப் போர் ஆரம்பமானது.
1967 - உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1975 - போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
1983 - லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
1991 - குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.
1996 - சவுதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1997 - புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.
1998 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
2007 - கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1900 - மவுண்ட்பேட்டன் பிரபு, பர்மாவின் முதலாம் ஏர்ள் மவுண்ட்பேட்டன், இந்தியாவின் கடைசி வைசிராய் (இ. 1979)
1931 - வி. பி. சிங், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2008)
1925 - ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்
1962 - நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (இ. 2006)
1966 - டிகெம்பே முடம்போ, காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர்
1974 - கரிஸ்மா கபூர், இந்திய நடிகை
1981 - பூஜா, நடிகை
இறப்புகள்
1894 - மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சுக் குடியரசின் அரசுத் தலைவர் (பி. 1837)
1971 - ஜோன் ஓர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1880);
1984 - மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (பி. 1926)
2009 - மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)
சிறப்பு நாள்

மொசாம்பிக் - விடுதலை நாள் (1975)

ஜூன் 24 (June 24)


ஜூன் 24 (June 24) கிரிகோரியன் ஆண்டின் 175 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 176 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 190 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1314 - ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1340 - நூறாண்டுகள் போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.
1509 - எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1571 - மணிலா நகரம் அமைக்கப்பட்டது.
1597 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.
1662 - மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.
1664 - நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.
1812 - ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.
1849 - அமெரிக்கப் பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை 1849 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.
1859 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1860 - புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1894 - பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1932 - சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 - 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1940 - பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1945 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மொஸ்கோவில் இடம்பெற்றது.
1948 - சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1956 - சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
1963 - சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.
1975 - அமெரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1983 - அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.
1997 - ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2002 - தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்படட்து.
2007 - கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1883 - விக்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1964)
1907 - கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (இ. 1989)
1915 - ஃபிரெட் ஹாயில், அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்ந்த வானியல் அறிவியலாளர் (இ. 2001)
1921 - கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)
1928 - எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்திய இசையமைப்பாளர்
1938 - நீல. பத்மநாபன், எழுத்தாளர்
இறப்புகள்
1908 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பி. 1837)

2006 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)

ஜூன் 23 (June 23)


ஜூன் 23 (June 23) கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1565 - மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டான்.
1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
1758 - ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
1760 - ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.
1794 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தாள்.
1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1942 - இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போர் விமானம் ஒன்று தவறுதலாக வேல்சில் தரையிறங்கியபோது கைப்பற்றப்பட்டது.
1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது.
1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.
1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1968 - புவெனஸ் அயரசில் உதைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 74 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
பிறப்புகள்
1889 - அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசிய கவிஞர் (இ. 1966)
1912 - அலன் டூரிங், ஆங்கிலேயெ கணிதவியலர் (இ. 1954)
1916 - லென் அட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1990)
1924 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)
1937 - மார்ட்டி ஆட்டிசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1940 - வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)
1972 - ஜீனடின் ஜிதேன், பிரெஞ்சு காற்பந்து வீரர்
1980 - ராம்நரேஷ் சர்வான், கயானா துடுப்பாளர்
1980 - பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய தென்னிசு வீரர்
இறப்புகள்
1925 - சர் பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர், (பி. 1852)
1980 - வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1894
1980 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (பி. 1946)
1995 - யோனாசு சால்க், அமெரிக்க அறிவியலாளர் (பி. 1914)
சிறப்பு நாள்
பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
எஸ்தோனியா - வெற்றி நாள்

போலந்து, நிக்கராகுவா, உகாண்டா - தந்தையர் நாள்.

ஜூன் 22 (June 22)


ஜூன் 22 (June 22) கிரிகோரியன் ஆண்டின் 173 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 174 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 192 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1593 - குரொவெசியர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் துருக்கியர்களை வென்றனர்.
1633 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1658 - போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
1783 - ஐஸ்லாந்தின் லாக்கி எரிமலையிலிருந்து வெளியேற்றிய நச்சு வளி பிரான்சின் ல ஹாவ்ரா நகரைத் தாக்கியது.
1812 - முதலாம் நெப்போலியன் ரஷ்யாவின் மீது போரை அறிவித்து முற்றுகையிட்டான்.
1815 - நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் அமர்ந்தான்.
1825 - பிரித்தானிய நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது.
1848 - பாரிசில் தொழிலாளர்களின் ஜூன் நாட்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1866 - ஆஸ்திரிய-புரூசிய போரில் ஆஸ்திரிய இராணுவம் இத்தாலிய இராணுவத்தைத் தோற்கடித்தனர்.
1893 - காம்பர்டவுன் என்ற ரோயல் கடற்படைக் கப்பல் ஒன்று விக்டோரியா என்ற பிரித்தானிய மத்தியதரைக்க் கடற்படைக் கப்பலுடன் மோதியதில் 358 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1898 - ஸ்பானிய-அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர்.
1911 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் கட்டாயமாக நாசி ஜெர்மனியுடன் அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது.
1941 - கிழக்குப் போர்முனை: ஜெர்மனிப் படையினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர்.
1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1962 - எயார் பிரான்சின் போயிங் விமானம் மேற்கிந்தியத் தீவுகளில் கௌதலூபே தீவில் விபத்துக்குள்ளாகியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1976 - கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது.
1978 - புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார்.
2002 - மேற்கு ஈரானில் இடம்பெற்ற 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1962 - க்ளைட் ட்ரெக்ஸ்லர், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1964 - டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர்
1974 - விஜய், தென்னிந்திய நடிகர்
இறப்புகள்

1990 - ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908).

ஜூன் 21 (June 21)


ஜூன் 21 (June 21) கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1621 - பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1734 - கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.
1788 - நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1798 - ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.
1898 - குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1942 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
1970 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
1990 - மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1999 - அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.
2002 - உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 - விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.
2006 - புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
பிறப்புகள்
1905 - ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)
1947 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
1953 - பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
இறப்புகள்
1970 - சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)
2001 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)
சிறப்பு நாள்
உலக இசை தினம்
கனடா - தேசிய பழங்குடிகள் நாள்
கிறீன்லாந்து - தேசிய நாள்

பன்னாட்டு யோகா நாள்