ஜூலை 1 (July 1)
ஜூலை 1 (July
1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1798 - நெப்போலியனின்
படைகள் எகிப்தை அடைந்தன.
1825 - ஐக்கிய
இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
1851 - ஆஸ்திரேலியாவில்
விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.
1862 - ரஷ்யாவின் அரச
நூலகம் அமைக்கப்பட்டது.
1867 - பிரித்தானிய
வட அமெரிக்கச் சட்டம், 1867
கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
1873 - பிரின்ஸ்
எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.
1876 - சேர்பியா
துருக்கி மீது போரை அறிவித்தது.
1881 - உலகின்
முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும்
ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
1916 - முதலாம் உலகப்
போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்,
40,000 பேர் காயமடைந்தனர்.
1921 - சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1932 - ஏபிசி
(அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
1933 - சீனர்களின்
குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.
1947 - இந்தியாவுக்கு
முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம்
நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
1960 - இத்தாலியிடம்
இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.
1960 - கானா
குடியரசானது.
1962 - ருவாண்டா
விடுதலை அடைந்தது.
1962 - பெல்ஜியத்திடம்
இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.
1967 - தேய்வழிவுப்
போர் தொடங்கப்பட்டது.
1967 - ஐரோப்பிய
சமூகம் உருவாக்கப்பட்டது.
1970 - அதிபர் யாஹ்யா
கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.
1976 - மடெய்ரா
தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.
1978 - அவுஸ்திரேலியாவின்
வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
1979 - சோனி
நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
1990 - கிழக்கு
ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.
1991 - பிராக்கில்
இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக்
கலைக்கப்பட்டது.
1997 - மக்கள் சீனக்
குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
2002 - சர்வதேச
குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
2002 - தெற்கு
ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - காசினி-ஹியூஜென்ஸ்
விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
2006 - கொழும்பில்
சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
1924 - தி. ச.
வரதராசன், ஈழத்து மறுமலர்ச்சி
எழுத்தாளர் (இ. 2006)
1927 - சந்திரசேகர்,
11வது இந்தியப் பிரதமர்
1929 - ஏ. எம். ராஜா,
பின்னணிப் பாடகர் (இ. 1989)
1935 - டி. ஜி. எஸ்.
தினகரன், இந்தியாவின் முன்னணி
கிறிஸ்தவ மறைபரப்புனர்
1961 - கல்பனா சாவ்லா,
விண்வெளி வீராங்கனை (இ. 2003)
1961 - டயானா,
வேல்ஸ் இளவரசி (இ. 1997)
1961 - கார்ல் லூயிஸ்,
அமெரிக்க ஓட்ட வீரர்
இறப்புகள்
1965 - வால்ரர்
ஹமொண்ட் - ஆங்கில துடுப்பாளர் (பி. 1903)
2001 - நிக்கலாய்
பாசொவ், ரஷ்ய இயற்பியலாளர்,
நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
1971 - வில்லியம்
பிராக், நோபல் பரிசு பெற்ற
ஆங்கிலேயர் (பி. 1890)
சிறப்பு நாள்
கனடா - கனடா நாள்
கானா - குடியரசு நாள்
(1960)
சோமாலியா - விடுதலை
நாள் (1960)
ருவாண்டா - விடுதலை
நாள் (1962)
புருண்டி - விடுதலை
நாள் (1962)
தமிழ்நாட்டில் - திண்டுக்கல்
மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால்
கோடை பண்பலை வானொலி
என்ற நிலையம் தொடங்கிய நாள் (2000).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக