சூலை 03 (July0 3)
சூலை 3 (July
3) கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
324 - ஏட்றியனோப்பில்
நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான்.
987 - ஹியூ காப்பெட்
என்பவன் பிரான்சின் மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை
ஆண்டனர்.
1250 - பிரான்சின்
ஒன்பதாம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது பாய்பர்களால்
பிடிபட்டான்.
1608 - கியூபெக்
நகரம் உருவாக்கப்பட்டது.
1754 - ஏழாண்டுப்
போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம்
இழந்தனர்.
1775 - அமெரிக்கப்
புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவத்துக்குத் தலைமை
வகித்தார்.
1778 - அமெரிக்கப்
புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.
1778 - புருசியா
ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
1844 - ஐஸ்லாந்தில்
கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.
1848 - அமெரிக்கக்
கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள்
விடுவிக்கப்பட்டனர்.
1867 - தமிழ்நாடு
விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1866 - புருசியாவின்
வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
1872 - யாழ்ப்பாணக்
கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1890 - ஐடஹோ ஐக்கிய
அமெரிக்காவின் 43வது மாநிலமாக
இணைந்தது.
1944 - இரண்டாம்
உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜேர்மனியிடம்
இருந்து விடுவிக்கப்பட்டது.
1962 - பிரான்சுக்கு
எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.
1969 - சோவியத்தின்
என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே
வெடித்துச் சிதறியது.
1970 - பிரித்தானிய
விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1988 - அமெரிக்க
போர்க் கப்பல் பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு
வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
2006 - பூமியில்
இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004
XP14 என்ற சிறுகோள் பறந்தது
அவதானிக்கப்பட்டது.
பிறப்புகள்
1883 - பிரான்ஸ்
காஃவ்கா, எழுத்தாளர் (இ. 1924)
1918 - எஸ். வி.
ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (இ. ஜூலை 18
1974
1924 - எஸ். ஆர்.
நாதன், சிங்கப்பூர் அதிபர்
1928 - எம். எல்.
வசந்தகுமாரி, கருநாடக இசைப்
பாடகர் (இ. அக்டோபர் 31 1990)
1942 - அடூர்
கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட
இயக்குநர்
1962 - டாம் க்ரூஸ்,
அமெரிக்க நடிகர்
1980 - ஹர்பஜன் சிங்,
இந்தியக் கிரிக்கெட் வீரர்
சிறப்பு நாள்
பெலரஸ் - விடுதலை
நாள் (1944)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக