ஜூன் 21 (June
21) கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1621 - பிராக் நகரில்
27 உயர்குடி செக் இனத்தவர்கள்
தூக்கிலிடப்பட்டனர்.
1734 - கியூபெக்கில்
மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக்
கொழுத்தியமைக்காகவும், அதனால்
நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில்
சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.
1788 - நியூ ஹாம்சயர்
ஐக்கிய அமெரிக்காவின் 9வது
மாநிலமாக இணைந்தது.
1798 - ஐரியத்
தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.
1898 - குவாம் தீவை
ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1940 - இரண்டாம்
உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1942 - இரண்டாம்
உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.
1945 - இரண்டாம்
உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
1970 - பிரேசில்
இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில்
தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
1990 - மன்னாரில்
கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1999 - அப்பிள் கணினி
நிறுவனம் தனது முதல் iBook இனை
வெளியிட்டது.
2002 - உலக சுகாதார
நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 - விண்கப்பல்
ஒன்று (SpaceShipOne) தனது
முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.
2006 - புளூட்டோவின்
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப்
பெயரிடப்பட்டது.
பிறப்புகள்
1905 - ஜான் பவுல்
சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர்,
தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)
1947 - ஷிரின் எபாடி,
நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
1953 - பெனாசிர்
பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள்
பிரதமர்
இறப்புகள்
1970 - சுகர்னோ,
இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)
2001 - கே. வி.
மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)
சிறப்பு நாள்
உலக இசை தினம்
கனடா - தேசிய
பழங்குடிகள் நாள்
கிறீன்லாந்து - தேசிய
நாள்
பன்னாட்டு யோகா நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக