ஜூன் 24 (June
24) கிரிகோரியன் ஆண்டின் 175 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 176 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 190 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1314 - ஸ்கொட்லாந்துப்
படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர்.
ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1340 - நூறாண்டுகள்
போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக்
படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.
1509 - எட்டாம்
ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1571 - மணிலா நகரம்
அமைக்கப்பட்டது.
1597 - டச்சு
கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை
அடைந்தனர்.
1662 - மக்காவு
நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.
1664 - நியூ
ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.
1812 - ரஷ்யாவினுள்
ஊடுரும் முயற்சியில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தனர்.
1849 - அமெரிக்கப்
பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப்
பட்டம் பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை 1849 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.
1859 - சார்டீனிய
இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில்
ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1860 - புளோரன்ஸ்
நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம்
இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1894 - பிரெஞ்சு
அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1932 - சியாமில் (தாய்லாந்து)
இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 - 450 மெட்ரிக்
தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1940 - பிரான்சும்
இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1945 - இரண்டாம்
உலகப் போர்: நாசி ஜெர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு
மொஸ்கோவில் இடம்பெற்றது.
1948 - சோவியத்
ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன்
அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான
தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1956 - சே குவேரா,
ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
1963 - சான்சிபாருக்கு
உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.
1975 - அமெரிக்க
விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - 17 ஆண்டுகளாக
உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில்
அமைக்கப்பட்டது.
1983 - அமெரிக்காவின்
முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு
பூமி திரும்பினார்.
1997 - ஈழப்போர்:
பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப்
பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2002 - தான்சானியாவில்
இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - நியூயோர்க்கில்
மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்படட்து.
2007 - கராச்சியில்
இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1883 - விக்டர் ஹெஸ்,
நோபல் பரிசு பெற்றவர் (இ. 1964)
1907 - கா.
அப்பாத்துரை, தமிழறிஞர் (இ. 1989)
1915 - ஃபிரெட்
ஹாயில், அண்டவெளி உயிர் மூலவிகளை
ஆய்ந்த வானியல் அறிவியலாளர் (இ. 2001)
1921 - கண்ணதாசன்,
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்,
கவிஞர் (இ. 1981)
1928 - எம். எஸ்.
விஸ்வநாதன், தென்னிந்திய
இசையமைப்பாளர்
1938 - நீல.
பத்மநாபன், எழுத்தாளர்
இறப்புகள்
1908 - குரோவர்
கிளீவ்லாண்ட், ஐக்கிய
அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பி. 1837)
2006 - சிட்டி பெ.
கோ. சுந்தரராஜன், மணிக்கொடி
எழுத்தாளர், திரைப்பட விமர்சகர்
(பி. 1910)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக