ஜூன் 26 (June
26) கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
363 - ரோமப் பேரரசன்
ஜூலியன் கொல்லப்பட்டான்.
1483 - மூன்றாம்
ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1541 - இன்கா பேரரசை
முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.
1690 - தென்மேற்கு
இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
1718 - தனது தந்தை
மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட
ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.
1723 - அசர்பைஜான்
தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
1924 - அமெரிக்க
ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
1948 - முதலாவது
இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.
1960 - சோமாலிலாந்து
பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1975 - இந்திரா
காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1976 - உலகின் மிக
உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக
திறக்கப்பட்டது.
பிறப்புகள்
1824 - வில்லியம்
தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த
இயற்பியல் அறிஞர் (இ 1907)
1838 - பான்கீம்
சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)
1892 - பெர்ல் பக்,
அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
1924 - இளையபெருமாள்,
தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)
1906 - ம. பொ.
சிவஞானம், தமிழக அரசியல்வாதி,
தமிழறிஞர் (இ. 1995)
இறப்புகள்
1995 - ஏர்னெஸ்ட்
வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர்
(பி. 1903)
சிறப்பு நாள்
சித்திரவதைக்கு
ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
மடகஸ்கார் - விடுதலை
நாள்
ருமேனியா: கொடி நாள்
சோமாலிலாந்து -
விடுதலை நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக