செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

மார்ச் 1 ( March 1 )


மார்ச் 1 ( March 1 )

மார்ச் 1 ( March 1 ) கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1562 - பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள்
கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1565 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
1700 - சுவீடன் தனது புதிய
நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
1811 - எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
1815 - இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த
நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.
1873 - முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1896 - ஹென்றி பெக்கெரல்
கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1899 - இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு ( The Ceylon Penal Code ) நடைமுறைக்கு வந்தது.
1901 - இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல்
யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
1912 - முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர்
பாரசூட்டில் இருந்து குதித்தார்.
1936 - ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர் : பல்கேரியா
அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.
1943 - இரண்டாம் உலகப் போர் : பிஸ்மார்க் கடல் போர் ஆரம்பமானது.
1949 - டச்சுக்களிடம் இருந்து
யாக்யகர்த்தாவை இந்தோனீசியா கைப்பற்றியது.
1953 - ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1954 - ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
1966 - சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 - சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
1975 - ஆஸ்திரேலியாவில் வர்ணத்
தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1977 - சார்லி சாப்ளினின் உடல்
சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980 - சனி கோளின் ஜானுஸ் என்ற
சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1981 - ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை
உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1992 - பொசுனியா எர்செகோவினா
யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
2002 - ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2006 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு
மில்லியனை எட்டியது.
பிறப்புகள்
1647 – ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693 )
1810 – பிரடெரிக் சொப்பின் , போலந்து இசையமைப்பாளர் (இ. 1849 )
1870 – யூகி மைக்கேல் அந்தொனியாடி , கிரேக்க-பிரான்சிய வானியலாளர் (இ.
1944 )
1904 – ஆ. நா. சிவராமன் , தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2001 )
1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959 )
1917 – கே. பி. சிவானந்தம் , வீணை வாத்திய கலைஞர் (இ. 2003 )
1920 – சைமன் பிமேந்தா , இந்தியக் கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ.
2013 )
1921 – விவியன் நமசிவாயம் , இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998 )
1922 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995 )
1935 – மேஜர் சுந்தரராஜன் , தமிழக திரைப்பட, மேடை நடிகர் (இ. 2003 ),
1944 – புத்ததேவ் பட்டாசார்யா , மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர்
1953 – மு. க. ஸ்டாலின் , தமிழக அரசியல்வாதி, தி.மு.க. செயல் தலைவர்
1954 – ரான் ஹவர்டு , அமெரிக்க நடிகர், இயக்குநர்
1978 – ஜென்சென் அக்லஸ் , அமெரிக்க நடிகர்
1980 – சாகித் அஃபிரிடி , பாக்கித்தான் துடுப்பாளர்
இறப்புகள்
492 – மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)
1940 – அ. தா. பன்னீர்செல்வம் , சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி.
1888 )
1943 – அலெக்சாண்டர் எர்சின் , சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர் (பி. 1863 )
1992 – கே. பி. ஜானகி அம்மாள் , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், மேடை நாடகக் கலைஞர் (பி. 1917 )
2001 – ஆ. நா. சிவராமன் , தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1904 )
2003 – மேஜர் சுந்தரராஜன் , தமிழக திரைப்பட, மேடை நடிகர் (பி. 1935 )
2014 – பங்காரு லட்சுமண் , இந்திய அரசியல்வாதி (பி. 1939 )
2015 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926 )
சிறப்பு நாள்
விடு

பெப்ரவரி 29 ( February 29


பெப்ரவரி 29 ( February 29

பெப்ரவரி 29 ( February 29 அல்லது leap day, லீப் நாள் ) கிரிகோரியன் ஆண்டில்
நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. பெப்ரவரி 29 வரும் ஒரு ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான பெரும்பாலான ஆண்டுகளில் மட்டுமே (எடுத்துக்காட்டு: 2000 , 2004 , 2008 என்பன) வருகிறது. எனினும், நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளான 1900 , 2100 போன்றவை நெட்டாண்டுகளல்ல.
நெட்டாண்டுகள்
முதன்மை கட்டுரை: நெட்டாண்டு
அநேகமான இன்றைய நாட்காட்டிகள் 365 நாட்களைக் கொண்டிருந்தாலும், பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிவருவதற்கு ( சூரிய ஆண்டு ) கிட்டத்தட்ட 365 நாட்களும் 6 மணித்தியாலங்களும் எடுக்கின்றது. மேலதிகமான இந்த 24 மணித்தியாலங்கள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டு, மேலதிக ஒரு முழுமையான நாள் சூரியனின் தோற்றநிலைக்கு ஏதுவாக நாட்காட்டிகளில் சேர்க்கப்படுகிறது.
எனினும், சூரிய ஆண்டு உண்மையில் 365 நாட்கள் 6 மணித்தியாலங்களை விட சிறிது குறைவாகும். குறிப்பாக, அல்போன்சிய அட்டவணையின் படி, பூமி சூரியனை முழுமையாகச் சுற்றி வர 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் (365.2425 நாட்கள்) எடுக்கிறது. இதனால், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு மேலதிக நாளை சேர்ப்பதால் நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள் மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்களாகும். இந்தக் குறைபாட்டை சமப்படுத்த, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் மூன்று லீப் நாட்கள் கைவிடப்பட வேண்டும். பொது விதிக்கு விதிவிலக்காக கிரெகொரியின் நாட்காட்டி குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் படி, 100 ஆல் வகுக்கப்படும் ஒரு ஆண்டு நெட்டாண்டாக இராது. ஆனால் அந்த ஆண்டு 400 ஆல் வகுக்கப்பட்டால் அந்த ஆண்டு நெட்டாண்டாக இருக்கும். அதாவது, 1600, 2000, 2400, 2800 ஆகியவை நெட்டாண்டுகளாக இருக்கும். அதே வேளையில் நானூறால் வகுக்கப்படாத ஆனால் நூறால் வகுக்கப்படும் 1700, 1800, 1900, 2100, 2200, 2300 போன்றவை நெட்டாண்டுகளாக இராது.
நிகழ்வுகள்
1704 - பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர்கள் கொல்லப்பட்டனர்.
1712 - சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து ஜூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1940 - பின்லாந்து குளிர்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி முயற்சிகளில் இறங்கியது.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஆட்மிரால்ட்டி தீவுகள் ஐக்கிய அமெரிக்காவினால் முற்றுகைக்குள்ளாகியது.
1960 - மொரொக்கோவில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1972 - வியட்நாம் போர் : தென் கொரியா தனது மொத்தமுள்ள 48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
1988 - தென்னாபிரிக்காவின் ஆயர்
டெஸ்மண்ட் டூட்டு உட்பட 100 மதகுருமார்
கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.
1996 - பெரு விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1896 - மொரார்ஜி தேசாய், இந்தியப் பிரதமர் (இ. 1995 )
1904 - ருக்மிணி தேவி அருண்டேல் , பரத நாட்டியக் கலைஞர். (இ. 1986 )
இறப்புகள்
2004 - லோரி வில்மோட் , தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (பி. 1943)
அரிதான லீப் நாள் மைல்கற்கள்
உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில்
தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தா

பெப்ரவரி 28 ( February 28 )


பெப்ரவரி 28 ( February 28 )

பெப்ரவரி 28 ( February 28 ) கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 ( நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1710 - சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844 - USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு
ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
1854 - ஐக்கிய அமெரிக்காவின்
குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1897 - மடகஸ்காரின் கடைசி அரசியான
மூன்றாம் ரனவலோனா பிரெஞ்சுப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
1922 - எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1935 - வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால்
நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர் : ஐக்கிய அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில்
ஜப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.
1947 - தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1953 - ஜேம்ஸ் வாட்சன் , மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின்
வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1975 - லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1986 - சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே
ஸ்டொக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1991 - முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
1998 - கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது
செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
2002 - அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து -
முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில்
நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட
நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம்
வியாழனை அண்மித்தது.
பிறப்புகள்
1901 – லின்னஸ் பாலிங் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ.
1994 )
1904 – முறே பர்ன்சன் எமெனெயு , அமெரிக்க மொழியியலாளர் (இ. 2005 )
1921 – தி. ஜானகிராமன் , தமிழக எழுத்தாளர் (இ. 1982 )
1926 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011 )
1927 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (இ. 2010 )
1928 – டி. ஜெ. அம்பலவாணர் , தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் (இ. 1997 )
1929 – பிராங்க் கெரி , கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்
1929 – ரங்கசாமி சீனிவாசன், இந்திய-அமெரிக்க வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர்
1931 – துரை விஸ்வநாதன் , ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998 )
1931 – சி. நாகராஜா , யாழ்ப்பாண மாநகர முதல்வர் (இ. 2008 )
1933 – சிற்பி , ஈழத்து எழுத்தாளர் (இ. 2015 )
1953 – பால் கிரக்மேன் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1957 – ஜான் டர்டர்ரோ , அமெரிக்க நடிகர், இயக்குநர்
1969 – உ. ஸ்ரீநிவாஸ், தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014 )
1979 – ஸ்ரீகாந்த் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
468 – ஹிலாரியுஸ் (திருத்தந்தை)
1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி.
1790 )
1936 – கமலா நேரு , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1899 )
1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (பி. 1884 )
2010 – சுசிரோ அயாசி , சப்பானிய வானியற்பியலாளர் (பி. 1920 )
2016 – செங்கை ஆழியான் , ஈழத்து எழுத்தாளர் (பி. 1941 )
2016 – குமரிமுத்து , தமிழ்த் திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்
கலேவலா நாள் , ( பின்லாந்து )
தேசிய அறிவியல் நாள் ( இந்தியா )
ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)

பெப்ரவரி 27 ( February 27 )



பெப்ரவரி 27 ( February 27 )

பெப்ரவரி 27 ( February 27 ) கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 ( நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1560 - ஸ்கொட்லாந்தில் இருந்து
பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.
1594 - பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.
1700 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1801 - வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844 - டொமினிக்கன் குடியரசு
ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1861 - போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
1879 - சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
1900 - இரண்டாம் போவர் போர் :
தென்னாபிரிக்காவில் போவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றி சரணடைவதாக அறிவித்தார்.
1900 - பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1933 - பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1940 - ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர் : ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.
1951 - ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1967 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 - முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
1991 - வளைகுடாப் போர் : அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவெய்த் விடுதலையானதாக அறிவித்தார்.
2002 - குஜராத் வன்முறை 2002 :
அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2004 - பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க , இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
பிறப்புகள்
272 – முதலாம் கான்ஸ்டன்டைன் , உரோமைப் பேரரசர் (இ. 337 )
1807 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ , அமெரிக்கக் கவிஞர் (இ.
1882 )
1902 – லூசியோ கோஸ்தா, பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998 )
1912 – குசுமாகரசு , இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999 )
1932 – எலிசபெத் டெய்லர் , ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011 )
1934 – ரால்ஃப் நேடர் , அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்
1943 – பி. எஸ். எடியூரப்பா , இந்திய அரசியல்வாதி
1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்
1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன் , அமெரிக்க இயக்குநர்
1977 – ஜேம்ஸ் வான் , மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
1982 – புருனோ சோரெசு , பிரேசிலிய டென்னிசு வீரர்
1983 – முகமது நபௌசு , லிபிய ஊடகவியலாளர் (இ. 2011 )
இறப்புகள்
1712 – முதலாம் பகதூர் சா , முகலாயப் பேரரசர் (பி. 1643 )
1931 – சந்திரசேகர ஆசாத் , இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906 )
1936 – இவான் பாவ்லோவ் , நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849 )
1998 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905 )
2008 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி.
1935 )
2010 – நானாஜி தேஷ்முக் , இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916 )
2012 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1929 )
2014 – ந. பாலேஸ்வரி , ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929 )
2015 – போரிசு நெம்த்சோவ் , உருசிய அரசியல்வாதி (பி. 1959 )
சிறப்பு நாள்
பன்னாட்டு பனிக்கரடி நாள்
மராட்டி மொழி நாள் ( மகாராட்டிரம் )
விடுதலை நாள் ( டொமினிக்கன் குடியரசு , 1844)
பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 26 (February 26)

பெப்ரவரி 26 (February 26)
பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1606 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
1658 - வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
1748 - "ஜேக்கப் டி ஜொங்" (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான்.
1794 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.
1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.
1936 - இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.
1952 - ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
1972 - மேற்கு வேர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1991 - உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.
1991 - வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார்.
1993 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
2004 - மக்கெடோனியாவின் அதிபர் போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593)
1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)
1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925)
1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939)
1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேத்கியியலாளர் (இ. 1979)
1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014)
1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000)
1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர்
1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர்
1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை
1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்

இறப்புகள்

1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865)
1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883)
2008 – டிரோன் பெர்னாண்டோ, இலங்கை அரசியல்வாதி (பி. 1941)
2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (குவைத்)

பெப்ரவரி 25 (February 25)

பெப்ரவரி 25 (February 25)

பெப்ரவரி 25 (February 25)

பெப்ரவரி 25 (February 25) கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1797 - வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1837 - தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1921 - ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1925 - சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1948 - செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.
1980 - சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
1986 - பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார்.
1988 - மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.
1991 - வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவுதி அரேபியாவின் டாஹ்ரான் நரைல் அமெரிக்க இரணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1992 - அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
1994 - மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
2006 - உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.

பிறப்புகள்
1778 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850)
1869 – போபஸ் ஆரன் தியோடர் லெவினி, உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1940)
1901 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர், வழக்கறிஞர் (இ. 1979)
1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)
1925 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் (இ. 2014)
1971 – சீன் ஆஸ்டின், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1974 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (இ. 1993)

இறப்புகள்
1723 – கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
1932 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)
1936 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (பி. 1848)
1942 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)
1950 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)
1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நஞ்சுண்டு இறந்த போராளி (பி. 1943)
2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
2004 – நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)
2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
2015 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1922)
2016 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)

சிறப்பு நாள்
புரட்சி நாள் (சுரிநாம்)

வியாழன், 23 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 24 ( February 24 )

பெப்ரவரி 24 ( February 24 )

பெப்ரவரி 24 ( February 24 ) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 ( நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1387 - நேப்பில்ஸ் மற்றும் ஹங்கேரி மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கொல்லப்பட்டான்.
1582 - கிரெகொரியின் நாட்காட்டி
பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1739 - இந்தியாவின் முகலாய மன்னன்
முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.
1826 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து
முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
1875 - ஆஸ்திரேலியக் கிழக்குக் கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
1881 - சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1942 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1945 - எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
1969 - மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
1981 - கிரேக்கத்தில் ஏத்தன்ஸ் நகரில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் கொல்லப்பட்டனார்.
1999 - கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2009 - வாட்ஸ் ஏப் (WhatsApp) நிறுவனம், ஜான் கௌமால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
1304 – இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி
1886 – ஆர். முத்தையா , தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்
1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (இ. 1977 )
1944 – டேவிட். ஜே. வைன்லேண்டு ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1946 – டெர்ரி வினோகிராட் , அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளர், உளவியலாளர்
1948 – ஜெ. ஜெயலலிதா , கன்னட-தமிழக நடிகை, தமிழ்நாட்டின் 16வது
முதலமைச்சர் (இ. 2016 )
1950 – ஸ்டீவ் மெக்குரி , அமெரிக்க ஊடகவியலாளர்
1955 – ஸ்டீவ் ஜொப்ஸ் , ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 2011 )
1956 – ஜூடித் பட்லர் , அமெரிக்க மெய்யியலாளர்
1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்
இறப்புகள்
1810 – என்றி கேவண்டிசு , பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731 )
1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர் (பி. 1765 )
1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1885 )
1983 – ச. வெள்ளைச்சாமி , தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897 )
1986 – ருக்மிணி தேவி அருண்டேல் , தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904 )
1990 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917 )
1996 – அன்னா லாறினா, உருசியப் புரட்சியாளர், எழுத்தாளர் (பி. 1914 )
2001 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியாளர் (பி. 1916 )
2011 – அனந்து பை , இந்திய எழுத்தாளர் (பி. 1929 )
2015 – ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( எசுத்தோனியா , 1918)
பெண்கள் நாள் ( சரத்துஸ்திர சமயம் ஈரான் )

பெப்ரவரி 23 (February 23)

பெப்ரவரி 23 (February 23)
பெப்ரவரி 23 (February 23) கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் அம்ரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.
1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.
1887 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1893 - ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1903 - கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.
1904 - 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.
1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1917 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது.
1919 - இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.
1941 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.
1944 - செச்னிய மற்றும் இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1947 - அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது.
1966 - சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 - தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1997 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
1998 - மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி, அரசியல்வாதி (இ. 1703)
1685 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞர் (இ. 1759)
1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1963)
1903 – ஜுலியஸ் பூசிக், செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 143)
1954 – ராஜினி திராணகம, இலங்கை மருத்துவர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1989)
1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்
1981 – ஜோஷ் கட், அமெரிக்க நடிகர்
1983 – அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்
இறப்புகள்[தொகு]
1503 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1408)
1719 – சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682)
1821 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795)
1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (பி. 1767)
1855 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர்,. வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1777)
1969 – மதுபாலா, இந்திய நடிகை (பி. 1933)
1977 – ஈ. வெ. கி. சம்பத், தமிழக அரசியல்வாதி (பி. 1926)
2014 – ஜி. பூவராகவன், தமிழக அரசியல்வாதி (பி. 1927)
2015 – ஆர். சி. சக்தி, இந்தியத் திரைப்பட இயக்குநர்

சிறப்பு நாள்

குடியரசு நாள் (கயானா)

திங்கள், 20 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 22 ( February 22 )

பெப்ரவரி 22 ( February 22 )

பெப்ரவரி 22 ( February 22 ) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 ( நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1495 - பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்ல்ஸ்
நேப்பில்சை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.
1658 - டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.
1819 - ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன்
அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் :
புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000
அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.
1848 - பாரிசில் , லூயி பிலிப் மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
1853 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1862 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1882 - சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.
1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது.
1942 - இரண்டாம் உலகப் போர் :
பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர்
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.
1943 - நாசி ஜெர்மனியில் வைட் ரோஸ் இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர்.
1948 - செக்கோசிலவாக்கியா
கம்யூனிசப் புரட்சி இடம்பெற்றது.
1958 - எகிப்தும் சிரியாவும் இணைந்து
ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.
1961 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர்
பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
1969 - பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
1974 - சாமுவேல் பிக் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனைக் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1979 - சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2002 - அங்கோலாவின் அரசியல் தலைவர்
ஜொனாஸ் சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
2002 - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.
2006 - பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
பிறப்புகள்
1732 - ஜார்ஜ் வாஷிங்டன் , ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799 )
1824 - பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (இ. 1907 )
1857 - பேடன் பவல் , சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941 )
1879 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க்
வேதியியலாளர் (இ. 1947 )
1914 - ரெனாட்டோ டுல்பெக்கோ , உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின்
நோபல் பரிசைப் பெற்றவர்
1932 - எட்வர்ட் கென்னடி , அமெரிக்க
செனட்டர் (இ. 2009 )
1936 - மைக்கேல் பிஷப், உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்
1938 - கோவை மகேசன் , சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர், நாட்டுப்பற்றாளர் (இ.
1992 )
1962 - ஸ்டீவ் இர்வின் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர் (இ. 2006 )
1963 - விஜய் சிங் , கோல்ஃப் விளையாட்டு வீரர்
இறப்புகள்
1556 - ஹுமாயூன் , முகலாயப் பேரரசன் (பி. 1508 )
1944 - கஸ்தூரிபாய் காந்தி , மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869 )
1987 - அன்டி வார்ஹால் , அமெரிக்க ஓவியர் (பி. 1928 )
2006 - எஸ். ராஜரத்தினம் , சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி.
1915 )
சிறப்பு நாள்
சென் லூசியா - விடுதலை நாள் ( 1979 )
புனித பேதுரு திருவிழா.

பெப்ரவரி 21 ( February 21 )

பெப்ரவரி 21 ( February 21 )

பெப்ரவரி 21 ( February 21 ) கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 ( நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1440 - புரூசியக் கூட்டமைப்பு உருவானது.
1613 - முதலாம் மிக்கையில் ரஷ்யாவின் சார் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
1804 - நீராவியால் இயங்கிய முதல்
தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1848 - கார்ல் மார்க்ஸ் , பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
1907 - நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1918 - கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை
சின்சினாட்டியில் இறந்தது.
1937 - முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர் :
குவாடல்கனல் போர் முடிவுக்கு வந்தது.
1947 - எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
1952 - கிழக்கு பாகிஸ்தானின்
டாக்காவில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால்
அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1963 - லிபியாவில் இடம்பெற்ற
நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 - மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில்
இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1972 - சோவியத்தின் லூனா 20
சந்திரனில் இறங்கியது.
1973 - சினாய் பாலைவனத்தில் இஸ்ரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பெர் கொல்லப்பட்டனர்.
1974 - சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.
2013 - இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உரிரிழந்தனர்.
பிறப்புகள்
1728 – உருசியாவின் மூன்றாம் பீட்டர் (இ.
1762 )
1801 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890 )
1878 – மிரா அல்பாசா , பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973 )
1894 – சாந்தி சுவரூப் பட்நாகர் , இந்திய வேதியியலாளர் (இ. 1955 )
1896 – நிராலா , இந்தியக் கவிஞர் (இ. 1961 )
1907 – எம். ஆர். ராதா , தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 1979 )
1910 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (இ. 1982 )
1921 – மு. மு. இஸ்மாயில் , தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2005 )
1921 – ஜான் ரால்ஸ் , அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002 )
1924 – ராபர்ட் முகாபே , சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவர்
1964 – ஸ்காட் கெல்லி , அமெரிக்க விண்வெளி வீரர்
1970 – கருணாஸ் , தமிழக நடிகர், அரசியல்வாதி
1980 – ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், பூட்டான் மன்னர்
1987 – எலன் பேஜ் , கனடிய நடிகை
இறப்புகள்
1906 – வி. கனகசபைப் பிள்ளை , ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855 )
1926 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி.
1853 )
1965 – மல்கம் எக்ஸ் , அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925 )
1981 – ஏ. எஸ். ராஜா , இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்
1984 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905 )
2011 – திருச்சி பிரேமானந்தா , சர்ச்சைக்குரிய இந்திய மதகுரு (பி. 1951 )
2012 – முத்துராஜா , தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள்
பன்னாட்டுத் தாய்மொழி நாள் ( யுனெஸ்கோ )

சனி, 18 பிப்ரவரி, 2017

பிப்ரவரி 20 (February 20)

பிப்ரவரி 20 (February 20) 

பெப்ரவரி 20 (February 20) கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1547 - ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1627 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
1798 - பாப்பரசர் ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
1910 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டாக் தீவைக் கைப்பற்றியது.
1962 - மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
2002 - எகிப்தில் தொடருந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1876 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)
1937 - ரொபேர்ட் ஹியூபர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர்
1945 - ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
1963 - சார்ல்ஸ் பார்க்லி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1977 - ஸ்டெஃபான் மார்பெரி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1896 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)
1907 - ஹென்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர், (பி. 1852)
1916 - கிளாஸ் ஆர்னல்ட்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1844)
1972 - மரீயா கோப்பர்ட்-மேயெர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர், (பி. 1906)
1976 - ரெனே காசின், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1887)
2008 - டி. ஜி. எஸ். தினகரன், கிறித்துவ மறைபரப்புனர் (பி. 1935)
2011 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்

பிப்ரவரி 19 (February 19)

பிப்ரவரி 19 (February 19) 

பெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942 - இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
1986 - உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
2014 - இராஜிவ் காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

பிறப்புகள்

1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543)
1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680)
1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868)
1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)
1859 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (இ. 1927)
1906 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி (இ. 1973)
1930 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர்
1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், அர்ச்செந்தீனாவின் 52வது அரசுத்தலைவர்
1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்
1993 – விக்டோரியா ஜஸ்டிஸ், அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்[தொகு]
1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1815)
1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய மெய்யியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)
1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884)
1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் (பி. 1883)
1981 – ஜி. நாகராஜன், தமிழகச் சிறுகதை எழுத்தாளர் (பி. 1929)
1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913)
1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (பி. 1904)
2003 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி (பி. 1918)
2012 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (பி. 1930)
2014 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணிணி அறிவியலாளர் (பி. 1956)
2016 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலியப் புதின எழுத்தாளர் (பி. 1932)
2016 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)

சிறப்பு நாள்

சிவாஜி ஜெயந்தி (மகாராட்டிரம், இந்தியா

பிப்ரவரி 18 (February 18)

பிப்ரவரி 18 (February 18)

பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார்.
1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1637 – எண்பதாண்டுப் போர்: இங்கிலாந்தின் கோர்ன்வால் கரையில், எசுப்பானியக் கடற்படைக் கப்பல்கள் மிக முக்கியமான ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்கள் 44 ஐ வழிமறித்துத் தாக்கி அவற்றில் இருபதைக் கைப்பற்றின. ஏனையவை அழிக்கப்பட்டன.
1745 – மத்திய சாவகத்தில் சுராகார்த்தா நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.
1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ரால்ஃப் அபகுரொம்பி தலைமையில் 18 பிரித்தானியக் கப்பல்கள் திரினிடாடை ஊடுருவின.
1832 – இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது.
1861 – மான்ட்கமரியில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
1873 – பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார்.
1911 – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
1930 – சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
1932 – சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை சப்பான் மன்னர் அறிவித்தார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாத்சி செருமனிப் படையினர் வெள்ளை ரோசா இயக்கத்தினரைக் கைது செய்தனர்.
1947 – பிரான்சியப் படையினர் அனோய் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.
1957 – கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1991 – இலண்டனில் ஐஆர்ஏ போராளிகள் படிங்டன், விக்டோரியா தொடருந்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2001 – இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.
2003 – தென் கொரியாவில் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் விரைவுத் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
2013 – பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் $50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.
2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

பிறப்புகள்

கிமு 259 – சின் சி ஹுவாங், சீனப் பேரரசர் (இ. கிமு 210)
1201 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (இ. 1274)
1486 – சைதன்யர், இந்திய மதகுரு (இ. 1534)
1745 – வோல்ட்டா, மின்கலத்தைக் கண்டுபிடித்த இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)
1836 – இராமகிருஷ்ணர், இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 1886)
1860 – மா. சிங்காரவேலர், இந்தியப் பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1946)
1909 – சி. அருளம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1922 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (இ. 1984)
1926 – வ. ஐ. சுப்பிரமணியம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2009)
1931 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்
1974 – ஜூலியா பட்டர்பிளை ஹில், அமெரிக்க சூழலியலாளர்.

இறப்புகள்

1294 – குப்லாய் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1215)
1405 – தைமூர், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1336)
1546 – மார்ட்டின் லூதர், செருமானிய இறையியலாளர் (பி. 1483)
1564 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய சிற்பி, ஓவியர் (பி. 1475)
1938 – மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன், சோவியத் கோட்பாட்டு இயற்பியலாளர் (பி. 1906)
1967 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1904)
1990 – ரிச்சர்ட் டி சொய்சா, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)
2015 – டி. ராமா நாயுடு, தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (காம்பியா, 1965)

வியாழன், 16 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 17 ( February 17 )


பெப்ரவரி 17 ( February 17 )



பெப்ரவரி 17 ( February 17 ) கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 ( நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1753 - சுவீடன் கிரெகோரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளின் பின்னர் மார்ச் 1ற்கு மாறியது.
1788 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன்
சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
1854 - பிரித்தானியா ஒரேஞ்சு சுயாதீன நாட்டை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : தென் கரோலினாவின் கொலம்பியா நகரம்
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.
1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.
1881 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.
1890 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று
சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.
1933 - நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி
மாயாவி முதற்தடவையாக
வரைகதைகளில் தோன்றினார்.
1947 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.
1957 - மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.
1962 - மேற்கு ஜெர்மனியின் ஹம்பூர்க் நகரில் இடம்பெற்ர புயலில் 300 பேருக்கு எல் கொல்லப்பட்டனர்.
1979 - மக்கள் சீனக் குடியரசுக்கும்
வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
1990 - இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1996 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற
சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ்
ஐபிஎம்மின் டீப் புளூ கணினியை வென்றார்.
2000 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
2006 - பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.
பிறப்புகள்
1201 – நசீருத்தீன் அத்-தூசீ , பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274 )
1723 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762 )
1781 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் (இ. 1826 )
1888 – ஆட்டோ ஸ்டர்ன் , நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1969 )
1910 – கொத்தமங்கலம் சீனு , தமிழ் நாடகத், திரைப்பட நடிகர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2001 )
1918 – சான்-சார்லஸ் கான்டின் , கனடிய அரசியல்வாதி (இ. 2005 )
1927 – யுவான் அல்மெய்டா , கியூபப் புரட்சியாளர் (இ. 2009 )
1929 – அம்பி , ஈழத்து-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
1930 – பசவ பிரேமானந்த் , கேரள மெய்யியலாளர், இறைமறுப்பாளர் (இ. 2009 )
1938 – அறிவானந்தன் , மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000 )
1955 – மோ யான் , நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்
1965 – மைக்கேல் பே , அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
1981 – ஜோசப் கார்டன்-லெவிட் , அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
1981 – பாரிஸ் ஹில்டன் , அமெரிக்க நடிகை, பாடகி
1984 – ஏ பி டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
1984 – சதா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1985 – சிவகார்த்திகேயன், தமிழக நடிகர்
1991 – எட் சீரன் , ஆங்கிலேயப் பாடகர்
1991 – போனி ரைட் , ஆங்கிலேய நடிகை, இயக்குநர்
இறப்புகள்
1553 – மூன்றாம் சாமராச உடையார் , மைசூர் மன்னர் (பி. 1492 )
1600 – கியோர்டானோ புரூணோ , இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548 )
1673 – மொலியர் , பிரான்சிய நடிகர் (பி.
1622 )
1865 – ஜார்ஜ் பிலிப்சு பாண்டு , அமெரிக்க வானியலாளர் (பி. 1825 )
1874 – அடால்ப் குவெட்லெட் , பெல்ச்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1796 )
1907 – என்றி ஆல்காட் , அமெரிக்க இராணுவ அதிகாரி, பிரம்மஞான சபையின் நிறுவனர் (பி. 1832 )
1909 – யெரொனீமோ , அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1829 )
1956 – எஸ். வையாபுரிப்பிள்ளை , தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891 )
1986 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி , இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1895 )
1988 – கர்ப்பூரி தாக்கூர் , பீகாரின் 11வது முதலமைச்சர் (பி. 1924 )
1994 – நாவற்குழியூர் நடராஜன் , இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1910 )
1994 – சிமன்பாய் படேல் , இந்திய அரசியல்வாதி (பி. 1929 )
2010 – மணிமேகலை இராமநாதன் , ஈழத்துக் கலைஞர் (பி. 1946 )
2014 – ஆர். கே. ஸ்ரீகண்டன் , கருநாடக இ

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 15 ( February 15 )

பெப்ரவரி 15 ( February 15 )

பெப்ரவரி 15 ( February 15 ) கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 ( நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
590 - பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான்.
1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக
மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.
1898 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா
ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக
அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர் : சிங்கப்பூர்
ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000
இந்திய , ஐக்கிய இராச்சியம், மற்றும்
ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக்
கணினி அறிமுகமானது.
1950 - சோவியத் ஒன்றியம் , மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1961 - பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து
அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.
1970 - டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின்
ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து
சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு
உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1996 - சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
1999 - குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
2005 - யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
1564 – கலீலியோ கலிலி , இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642 )
1748 – ஜெரமி பெந்தாம் , ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1832 )
1861 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் , ஆங்கிலேய கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1947 )
1922 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் அரசுத்தலைவர்
1923 – சத்தியவாணி முத்து , தமிழக அரசியல்வாதி (இ. 1999 )
1931 – மேக்சின் சிங்கர் , அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்
1949 – அனுரா பண்டாரநாயக்கா , இலங்கை அரசியல்வாதி (இ. 2008 )
1952 – பிரதாப் போத்தன் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்
1984 – மீரா ஜாஸ்மின் , மலையாளத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1145 – இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை)
1965 – நாட் கிங் கோல் , அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1919 )
1966 – கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ, கொலம்பிய மதகுய்ரு, இறையியலாளர் (பி. 1929 )
1973 – டி. கே. சண்முகம், தமிழக நாடகத், திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1912 )
1973 – அழகு சுப்பிரமணியம் , இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர் (பி. 1915 )
1974 – கொத்தமங்கலம் சுப்பு , தமிழக எழுத்தாளர், நடிகர், பாடகர், இயக்குநர் (பி.
1910 )
1988 – ரிச்சர்டு பெயின்மான் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1918 )
2004 – மன்னவன் கந்தப்பு , ஈழத்து எழுத்தாளர் (பி. 1926 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( ஆப்கானித்தான் )
பரிநிர்வாண நாள் ( மகாயான பௌத்தம் )