திங்கள், 6 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 7 (February 7)

பெப்ரவரி 7 (February 7)

பெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1238 - மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.
1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.
1845 - இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.
1962 - கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தாது.
1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.
1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.
1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.
1991 - ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)
1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)
1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)
1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)
1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)
1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)
1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்
1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)
1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்

இறப்புகள்

1878 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1792)
1937 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1864)
1986 – ஏ. ஜி. சுப்புராமன், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
2001 – பகீரதன், தமிழக எழுத்தாளர்
2008 – குணால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரெனடா, 1974)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக