வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 26 (February 26)

பெப்ரவரி 26 (February 26)
பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1606 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
1658 - வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
1748 - "ஜேக்கப் டி ஜொங்" (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான்.
1794 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.
1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.
1936 - இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.
1952 - ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
1972 - மேற்கு வேர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1991 - உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.
1991 - வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார்.
1993 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
2004 - மக்கெடோனியாவின் அதிபர் போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593)
1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)
1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925)
1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939)
1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேத்கியியலாளர் (இ. 1979)
1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014)
1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000)
1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர்
1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர்
1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை
1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்

இறப்புகள்

1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865)
1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883)
2008 – டிரோன் பெர்னாண்டோ, இலங்கை அரசியல்வாதி (பி. 1941)
2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (குவைத்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக