செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 8 ( February 8 )


பெப்ரவரி 8 ( February 8 )

பெப்ரவரி 8 ( February 8 ) கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 ( நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு
ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.
1622 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.
1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
1900 - போவர் போர் :
தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள்
போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.
1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை
நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில்
நேதாஜி ஜெர்மனியை விட்டுத்
தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம்
களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
1963 - கியூபாவுடனான
போக்குவரத்து , பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர்
ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.
1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
1974 - அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1989 - போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

பிறப்புகள்

1641 – ரொபர்ட் நொக்ஸ் , பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720 )
1700 – டேனியல் பெர்னூலி , டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1782 )
1825 – என்றி வால்டர் பேட்ஃசு , ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர், நாடுகாண் பயணி (இ. 1892 )
1828 – ழூல் வேர்ண் , பிரான்சியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1905 )
1834 – திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907 )
1850 – கேட் சோப்பின் , அமெரிக்க எழுத்தாளர் (இ. 1904 )
1897 – சாகீர் உசேன் , இந்தியாவின் 3வது
குடியரசுத் தலைவர் (இ. 1969 )
1903 – துங்கு அப்துல் ரகுமான் , மலேசியாவின் முதலாவது பிரதமர் (இ.
1990 )
1921 – மு. மு. இஸ்மாயில் , தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2005 )
1928 – லூசு மோகன் , தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2012 )
1928 – விச்சிசுலாவ் தீகனொவ் , சோவியத் உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2009 )
1937 – ஏ. எச். எம். அஸ்வர் , இலங்கை அரசியல்வாதி
1941 – ஜக்ஜீத் சிங் , இந்தியப் பாடகர் (இ.
2011 )
1955 – ஜான் கிரிஷாம் , அஎரிக்க எழுத்தாளர்
1960 – பெனிக்னோ அக்கீனோ III , பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவர்
1963 – முகமது அசாருதீன் , இந்தியத் துடுப்பாளர், அரசியல்வாதி
1968 – கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (இ. 2010 )

இறப்புகள்

1587 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542 )
1725 – உருசியாவின் முதலாம் பேதுரு , உருசியப் பேரரசர் (பி. 1672 )
1957 – வால்தெர் பொதே , நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி.
1891 )
1957 – ஜான் வான் நியுமேன் , அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1903 )
1971 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1887 )
1974 – பிரிட்சு சுவிக்கி, சுவீடன் வானியலாளர் (பி. 1898 )
1979 – டென்னிஸ் கபார் , நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1900 )
1993 – நா. சண்முகதாசன் , ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி.
1920 )
2005 – அரியநாயகம் சந்திரநேரு , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர்
2007 – ஆன்னா நிக்கோல் இசுமித் , அமெரிக்க நடிகை (பி. 1967 )
2007 – இயான் ஸ்டீவன்சன் , கனடிய-அமெரிக்க உளவியல் மருத்துவர் (பி. 1918 )
2014 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் (பி. 1930 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக