பெப்ரவரி 5 (February 5)
பெப்ரவரி 5 (February 5) கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
62 – இத்தாலியின் பொம்பெய் நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.
1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.
1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.
1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
பிறப்புகள்
1840 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டியத் தொழிலதிபர் (இ. 1921)
1908 – இல்டன் சகோதரிகள், ஆங்கிலேய ஒட்டிப் பிறந்த இரட்டையர் (இ. 1969)
1918 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)
1924 – துரைசாமி சைமன் லூர்துசாமி, இந்தியக் கத்தோலிக்கக் கருதினால் (இ. 2014)
1933 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1934 – வெ. யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
1943 – மைக்கேல் மண், அமெரிக்க இயக்குநர்
1948 – டாம் வில்கின்சன், ஆங்கிலேய நடிகர்
1976 – அபிஷேக் பச்சன், இந்திய நடிகர்
1985 – கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கீசக் கால்பந்து வீரர்
இறப்புகள்
1597 – கொன்சாலோ கார்சியா, இந்திய உரோமன் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1556)
1898 – எம். சி. சித்திலெப்பை, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1838)
1993 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்க இயக்குநர் (பி. 1909)
2000 – டி. ஜி. லிங்கப்பா, திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1927))
2008 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிக குரு (பி. 1918)
2012 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (பி. 1938)
2015 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)
சிறப்பு நாள்
காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)
விடுதலை நாள் (சான் மரீனோ)
ஒற்றுமை நாள் (புருண்டி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக