வியாழன், 9 பிப்ரவரி, 2017

பெப்ரவரி 10 ( February 10 )


பெப்ரவரி 10 ( February 10 )

பெப்ரவரி 10 ( February 10 ) கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 ( நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1355 - இங்கிலாந்து , ஒக்ஸ்போர்டில்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1763 - பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை
ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.
1798 - லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர்
ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
1815 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர்
கண்டியினுள் நுழைந்தனர்.
1846 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில்
பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது ( நியூயோர்க் நகரம் ).
1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
1914 - யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1954 - வியட்நாம் போர் : அமெரிக்க அதிபர்
டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது
ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
1964 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
1991 - வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
2009 - தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33 ,
காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
பிறப்புகள்
1775 – சார்லஸ் லாம் , ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834 )
1805 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா , கேரள கத்தோலிக்கப் புனிதர் (இ.
1871 )
1824 – சாமுவேல் பிளிம்சால் , ஆங்கிலேய வணிகர், அரசியல்வாதி (இ.
1898 )
1848 – அன்னா பொச் , பெல்சிய ஓவியர் (இ.
1936 )
1890 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1960 )
1897 – ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ் ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1985 )
1898 – பெர்தோல்ட் பிரெக்ட் , செருமானிய இயக்குநர், கவிஞர் (இ. 1956 )
1916 – தர்பாரா சிங் , பஞ்சாபின் முதலமைச்சர் (இ. 1990 )
1919 – சு. ராஜம் , தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010 )
1929 – நாஞ்சில் கி. மனோகரன் , தமிழக அரசியல்வாதி (இ. 2000 )
1937 – தா. கிருட்டிணன் , தமிழக அரசியல்வாதி (இ. 2003 )
1952 – லீ சியன் லூங் , சிங்கப்பூரின் 3வது பிரதமர்
1982 – ஜஸ்டின் காட்லின் , அமெரிக்க விரைவு ஓட்ட வீரர்
1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
1985 – மஹதி , தமிழகக் கருநாடக இசைப் பாடகி
இறப்புகள்
1837 – அலெக்சாந்தர் பூஷ்கின் , உருசியக் கவிஞர் (பி. 1799 )
1865 – ஹைன்ரிக் லென்ஸ் , எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1804 )
1868 – டேவிட் புரூஸ்டர் , இசுக்கொட்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1781 )
1891 – சோஃபியா கோவலெவ்சுகாயா , சுருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850 )
1912 – ஜோசப் லிஸ்டர் , ஆங்கிலேய மருத்துவர் (பி. 1827 )
1923 – வில்லெம் ரோண்ட்கன் , நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1845 )
1944 – யூகி மைக்கேல் அந்தொனியாடி , கிரேக்க-பிரான்சிய வானியலாளர், சதுரங்க வீரர் (பி. 1870 )
2001 – கே. தவமணி தேவி , இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை
2005 – ஆர்தர் மில்லர், அமெரிக்க நடிகர், எழுத்தாளர் (பி. 1915 )
2010 – கிரீஷ் புத்தன்சேரி , மலையாளத் திரைப்பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் (பி. 1957 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக