ஜனவரி 11 (January 11)
ஜனவரி 11 (January 11) கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1055 - தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.
1569 - முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
1693 - சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
1779 - மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
1782 - பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1805 - மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.
1851 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1879 - ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.
1878 - பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
1911 - காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
1943 - ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.
1946 - என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
1957 - ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
1962 - பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1998 - அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 - செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
பிறப்புகள்
1755 = அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1804)
1786 - ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1869)
1859 - கர்சன் பிரபு, ஆங்கிலேய அரசியல்வாதி இந்தியத் தலைமை ஆளுநர் (இ. 1925)
1906 - ஆல்பர்ட் ஹாப்மன், சுவீடிய வேதியியலாளர் (இ. 2008)
1953 - ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)
1973 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1982 - சன் யி-ஜின் (நடிகை), தென்கொரிய நடிகை
இறப்புகள்
314 - மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)
1753 - ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய மருத்துவர் (பி. 1660)
1902 - ஜானி பிரிக்ஸ், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1862)
1928 - தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1840)
1932 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
1966 - லால் பகதூர் சாஸ்திரி, 2வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
1975 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
1976 - ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
2000 - பெட்டி ஆர்க்டேல், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1907)
2007 - எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்
2008 - எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)
2013 - ஏரன் சுவோற்சு, அமெரிக்கக் கணினியாளர் (பி. 1986)
2014 - ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)
சிறப்பு நாள்
அல்பேனியா - குடியரசு நாள் (1946)
நேபாளம் - ஐக்கிய நாள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக