புதன், 25 ஜனவரி, 2017

ஜனவரி 25 .

ஜனவரி 25 .

சனவரி 25 (January 25) கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.
1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
1755 - மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1881 - தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
1918 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
1919 - நாடுகளின் அணி நிறுவப்பட்டது.
1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.
1942 - இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
1949 - சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.
1955 - சோவியத் ஒன்றியம் ஜேர்மனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.
1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
1993 - கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.
1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
2004 - ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.
2005 - இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 - முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

பிறப்புகள்

1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1813)
1759 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (இ. 1796)
1783 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1857)
1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (இ. 1941)
1920 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)
1920 – பால்ராஜ் மாதோக், இந்திய அரசியல்வாதி
1928 – எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2014)
1933 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நடிகர் (இ. 1995)
1933 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (இ. 2009)
1938 – எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (இ. 2012)
1938 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், இசைக்கலைஞர், நடிகர் (இ. 1980)
1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்
1957 – ஜெனிபர் லீவிஸ், அமெரிக்க நடிகை
1958 – கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி
1967 – ஊர்வசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1980 – சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் கால்பந்து வீரர்
1981 – அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி, நடிகை

இறப்புகள்

390 – நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329)
844 – நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795)
1947 – அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர் (பி. 1899)
1983 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய அரசியல்வாதி (பி. 1905)
2001 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (பி. 1921)
2005 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1906)
2014 – எம். உதயகுமார், இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1938)
2016 – கல்பனா, மலையாள நடிகை (பி. 1965)

சிறப்பு நாள்

தேசிய ஊட்டச்சத்து நாள் (இந்தோனேசியா)
தேசிய வாக்காளர் நாள் (இந்தியா)
புரட்சி நாள் (எகிப்து, 2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக