செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஜனவரி 15 (January 15)

ஜனவரி 15 (January 15)

ஜனவரி 15 (January 15) கிரிகோரியன் ஆண்டின் 15 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.

நிகழ்வுகள்

    69 - ரோமின் ஆட்சியை ஓத்தோ கைப்பற்றித் தன்னை மன்னனாக அறிவித்தான். எனினும் மூன்று மாதங்களில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
    1559 - முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
    1582 - லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை ரஷ்யா போலந்திடம் கையளித்தது.
    1609 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
    1759 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
    1777 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.
    1799 - இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
    1892 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
    1908 - யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.
    1915 - மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
    1919 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் கொல்லப்பட்டனர்.
    1919 - ஜெர்மனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
    1936 - முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.
    1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் தீவான குவாடல்கனாலில் இருந்து விரட்டப்பட்டனர்.
    1943 - பென்டகன் திறக்கப்பட்டது.
    1944 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
    1966 - நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
    1969 - சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
    1970 - நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா சரணடைந்தது.
    1970 - முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1975 - போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
    1973 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
    1977 - சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
    2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
    2005 - ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
    2005 - செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    2007 - சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

பிறப்புகள்

    1622 - மொலியர், பிரெஞ்சு நடிகர், நாடகாசிரியர் (இ. 1673)
    1842 - மேரி மக்கிலொப், ஆத்திரேலியப் புனிதர் (இ. 1909)
    1850 - சோஃபியா கோவலெவ்சுகாயா, உருசிய-சுவீடியக் கணிதவியலர், இயற்பியலாளர் (இ. 1891)
    1908 - எட்வர்ட் டெல்லர், அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2003)
    1916 - இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1998)
    1918 - ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1970)
    1922 - ம. மு. உவைஸ், இலங்கையின் இசுலாமியத் தமிழறிஞர் (இ. 1922)
    1923 - ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (இ. 1978)
    1926 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
    1929 - மார்ட்டின் லூதர் கிங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1968)
    1934 - வி. எஸ். ரமாதேவி, இந்திய அரசியல்வாதி (இ. 2013)
    1938 - சுபிமல் கோஸ்வாமி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
    1941 - சங்கு. சண்முகம், மலேசிய எழுத்தாளர்
    1956 - மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி
    1962 - மு. அப்துல் சமது, இந்திய முசுலிம் எழுத்தாளர்.
    1965 - ஜேம்ஸ் நெஸ்பிட், ஐரிய நடிகர்
    1978 - ரயான் சைட்பொட்டம், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
    1982 - நீல் நிதின் முகேஷ், இந்திய நடிகர், பாடகர்
    1984 - விக்டோர் ரசுக், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

    1919 - ரோசா லக்சம்பேர்க், செருமானிய சோசலிச மெய்யியலாளர் (பி. 1870)
    1936 - ஹென்ரி ஃபோர்ஸ்டர், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர், ஆத்திரேலியாவின் 7வது ஆளுனர் (பி. 1866)
    1965 - சுப்பையா நடேசபிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1895)
    1965 - தஞ்சை இராமையாதாஸ், தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1914)
    1981 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
    1998 - குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர் (பி. 1898)
    2008 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)
    2012 - ஓமாயி வியாரவாலா, இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் (பி. 1913)

சிறப்பு நாள்

    மலாவி - யோன் சிலம்புவே நாள்
    விக்கிப்பீடியா நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக