வியாழன், 5 ஜனவரி, 2017

சனவரி 5 (January 5)

 சனவரி 5 (January 5)
சனவரி 5 (January 5) கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
    1477 - பேர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டான். பேர்கண்டி பிரான்சின் பகுதியானது.
    1554 - நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் சேதமாயின.
    1655 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
    1757 - பிரான்சின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
    1781 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
    1854 - சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
    1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
    1900 - ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
    1905 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
    1918 - ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.
    1933 - கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
    1940 - பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
    1945 - போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
    1967 - இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
    1971 - உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
    1972 - விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
    1974 - பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.
    1975 - தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
    1976 - கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
    1984 - ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
    1997 - ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
    2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
    2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிசு என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
    2007 - கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.

பிறப்புகள்

    1876 – கொன்ராடு அடேனார், மேற்கு செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1967)
    1902 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
    1917 – சி. டி. ராஜகாந்தம், நகைச்சுவை நடிகை
    1926 – ஆர். முத்துசாமி, இலங்கைத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1988)
    1926 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
    1927 – சிவாய சுப்ரமணியசுவாமி, இறைவன் கோவிய நிறுவிய அமெரிக்கர், யோக சுவாமிகளின் சீடர் (இ. 2001)
    1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (இ. 1979)
    1928 – தில்லைச் சிவன், இலங்கை எழுத்தாளர்
    1931 – சாருஹாசன், இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர்
    1932 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய மெய்யியலாளர் (இ. 2016)
    1932 – லலிதா, நாட்டிய நடிகை
    1937 – சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
    1938 – முதலாம் வான் கார்லோஸ்
    1938 – நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்
    1939 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியல்வாதி (இ. 1997)
    1941 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
    1953 – ஆனந்த் சர்மா, இந்திய அரசியல்வாதி
    1955 – மம்தா பானர்ஜி, மேற்கு வகாளத்தின் முதலமைச்சர்
    1969 – மர்லின் மேன்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர்
    1975 – பிராட்லி கூப்பர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
    1986 – தீபிகா படுகோண், இந்திய திரைப்பட ந‌டிகை
    1993 – லலித் பாபு, இந்திய சதுரங்க வீரர்

இறப்புகள்

    1762 – எலிசவேத்தா பெட்ரோவ்னா (பி. 1709)
    1913 – லூயி பால் கையேட்டே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1832)
    1933 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (பி. 1872)
    1943 – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1864)
    1952 – விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 46வது ஆளுநர் (பி. 1887)
    1970 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
    1973 – வெ. துரையனார், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட தென்னாப்பிரிக்கர் (பி. 1891)
    1975 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1905)
    1981 – அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)
    2000 – குமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1938)
    2014 – எய்சேபியோ, மொசாம்பிக்-போர்த்துக்கீச கால்பந்து வீரர் (பி. 1942)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக