வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜனவரி 22 (January 22)

ஜனவரி 22 (January 22) 

ஜனவரி 22 (January 22) கிரிகோரியன் ஆண்டின் 22 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 343 (நெட்டாண்டுகளில் 344) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1506 - 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.
1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
1899 - ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.
1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1927 - உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைப்பெற்ற ஷெப்பீல்ட் யுனைடெட் இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது
1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
1984 - ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.

பிறப்புகள்

1561 - பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1626)
1788 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)
1869 - கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு (இ. 1916)
1891 - அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1937)
1906 - ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1936)
1909 - ஊ தாண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலாளர் (இ. 1974)
1922 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)
1988 - கிரெக் ஓடென், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்.

இறப்புகள்

1666 - ஷாஜகான், முகலாலயப் பேரரசர் (பி. 1592)
1901 - விக்டோரியா மகாராணி, ஐக்கிய இராச்சியம் (பி. 1819)
1922 - பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 1854)
1947 - சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் பன்மொழிப் புலவர் (பி. 1875)
1978 - ஹெர்பட் சட்கிளிஃப், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1894)
2005 - வேந்தனார் இளங்கோ, ஆஸ்திரேலியத் தமிழறிஞர்
2008 - ஹீத் லெட்ஜர், ஹாலிவுட் நடிகர் (பி. 1979)
2014 - அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக