செவ்வாய், 31 மே, 2016

ஜூன் 12 (June 12)


ஜூன் 12 (June 12) கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1429 - நூறாண்டுகள் போர்: ஜோன் ஒஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.
1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
1830 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1899 - ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநீலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
1902 - ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
1934 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1935 - பொலீவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் ஜெர்மனியரிடம் சரணடைந்தனர்.
1943 - நாசி ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.
1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
1967 - சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1987 - மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
1990 - ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
1991 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1998 - லெப்டினண்ட் கேணல் திருவடி நினைவுநாள்.
1999 - நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
2005 - அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.
2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.
2006 - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1924 - ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர்
1932 - பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)
1942 - பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய உடற்றொழிலியலாளர்
1957 - ஜாவெட் மியன்டாட், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாளர்
இறப்புகள்[தொகு]
2014 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பி. 1925)
2014 - கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள் 
பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ரஷ்யா - ரஷ்ய நாள் (1990)

ஜூன் 11 (June 11)


ஜூன் 11 (June 11) கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.
1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1938 - இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.
1940 - இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
1981 - ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.
2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.
2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.
2007 - கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் 
1838 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)
1908 - சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)
1947 - லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி
1957 - சுகுமாரன், தமிழகக் கவிஞர்
இறப்புகள்
1994 - அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)
1995 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசியத்தந்தை(பி. 1933)
1993 - லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா (பி. 1960) 


ஜூன் 10 (June 10)


ஜூன் 10 (June 10) கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1190 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.
1786 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1801 - சிவகங்கையின் சின்னமருது "ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்" என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
1838 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1846 - கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1886 - நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.
1898 - அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1945 - ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
1956 - இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1967 - இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1984 - தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
1986 - யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 - இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
1996 - வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1998 - முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
1999 - கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள் 
1925 - வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி
1971 - பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்
இறப்புகள்
கிமு 323 - மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)
1836 - அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)
2004 - ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)
சிறப்பு நாள் 

போர்த்துக்கல் - தேசிய நாள்

ஜூன் 9 (June 9)


ஜூன் 9 (June 9) கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள் 
68 - ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
1873 - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.
1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
1923 - பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
1934 - வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.
1935 - வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.
1946 - பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.
1962 - தங்கனீக்கா குடியரசாகியது.
பிறப்புகள் 
1781 - ஜார்ஜ் ஸ்டீபென்சன் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை - இ (1848))
1945 - கிரண் பேடி, இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரி
1975 - ஆன்ட்ரூ சைமன்ஸ், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1977 - பேஜா ஸ்டொயாகொவிக், செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் 
68 - நீரோ, ரோமப் பேரரசன் (பி. 37)
1870 - சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1812)
1946 - ஆனந்தா மஹிடோல், (எட்டாவது ராமா), தாய்லாந்து மன்னர் (பி. 1925)
1974 - மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890)
1989 - ஜோர்ஜ் பீடில்ல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
1994 - ஜான் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903);

1834 - வில்லியம் கேரி, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. 1761)