மே 24 (May 24)
கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
• 1738 - மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.
• 1798 - அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.
• 1844 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில்இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
• 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியாநகரைக் கைப்பற்றினர்.
• 1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.
• 1901 - தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
• 1941 - இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் "பிஸ்மார்க்" என்ற ஜெர்மன்போர்க்கப்பல் "ஹூட்" என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
• 1956 - சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.
• 1962 - அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.
• 1991 - எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
• 1993 - எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
• 2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.
• 2000 - இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
• 2001 - எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.
• 2002 - ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.
• 2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.
• 2007 - ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள்தாக்கியளித்தனர்.
• 2007 - ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
• 1686 - கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1736)
• 1819 - விக்டோரியா மகாராணி, ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இ. 1901)
• 1905 - மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 1984)
• 1921 - சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்
• 1979 - ட்ரேசி மெக்ரேடி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
• 1543 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் (பி. 1473)
• 1981 - சி. பா. ஆதித்தனார் தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் (பி. 1905)
சிறப்பு நாள்
• எரித்திரியா: விடுதலை நாள் (1993)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக