ஜூன் 11 (June 11) கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு
இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம்
மூண்டது.
1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின்
முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.
1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டது.
1938 - இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன
அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் இத்தாலியில் ஜெனோவா
மற்றும் டூரின் நகர்கள் மீது குண்டுகளை வீசின.
1940 - இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய
விமானங்கள் தாக்குதலை நடத்தின.
1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக்
என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
1981 - ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.
2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில்
கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.
2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி
துணைக்கோளை அண்டிச் சென்றது.
2007 - கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1838 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)
1908 - சோ. இளமுருகனார்,
ஈழத்துப் புலவர் (இ. 1975)
1947 - லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியல்வாதி
1957 - சுகுமாரன், தமிழகக் கவிஞர்
இறப்புகள்
1994 - அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர்,
யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)
1995 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசியத்தந்தை(பி. 1933)
1993 - லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத்
தளபதியான ஆனந்தராசா தவராஜா (பி. 1960)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக