செவ்வாய், 24 மே, 2016

மே 25 (May 25)


மே 25 (May 25)
 கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1659 - ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 - கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 - அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 - ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 - ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1982 - போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 - சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1458 - மஹ்மூத் பேகடா, குஜராத் சுல்தான் (இ. 1511)
1865 - பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)
1878 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1918 - நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இ. 1995)
1933 - அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1954 - முரளி, மலையாள நடிகர் (இ. 2009)
இறப்புகள் 
19?? - சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
1988 - ஏர்ணஸ்ட் ருஸ்கா, ஜெர்மனிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 - சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1929)
2013 - டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)
சிறப்பு நாள் 
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
ஆர்ஜென்டீனா - மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் - விடுதலை நாள் (2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக