ஜூன் 5 (June
5) கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1864 - அமெரிக்க
உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில்
அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பூப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
1900 - இரண்டாம்
போவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
1912 - ஐக்கிய
அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.
1946 - சிக்காகோவில்
உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61
பேர் கொல்லப்பட்டனர்.
1956 - இலங்கையில்
சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1959 - சிங்கப்பூரின்
முதலாவது அரசு பதவியேற்றது.
1967 - இஸ்ரேலிய
வான்படையினர் எகிப்து, ஜோர்தான்,
சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை
ஆரம்பித்தனர்.
1968 - ஐக்கிய
அமெரிக்காவின் அர்சுத் தலைவருக்கான வேட்பாளர் ரொபேர்ட் கென்னடி பாலஸ்தீனர்
ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
1969 - அனைத்துலக
கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
1974 - ஈழப்போர்:
சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி
மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
1977 - செஷெல்சில்
இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1977 - முதலாவது
தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு
விடப்பட்டது.
1979 - இலங்கையின்
சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
1984 - இந்தியப்
பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த
உத்தரவிட்டார்.
பிறப்புகள்
1898 - ஃவெடரிக்கோ
கார்சியா லோர்க்கா, ஸ்பானிய
எழுத்தாளர் (இ. 1936)
1925 - வ. அ.
இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர்.
1975 - சிட்ருனாஸ்
இல்கவுச்காஸ், லித்துவேனிய
கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1910 - ஓ ஹென்றி,
அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)
1958 - ரெங்கநாதன்
சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி
(பி. 1910)
1974 - சிவகுமாரன்,
சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது
ஈழப் போராளி (பி. 1950)
2002 - மு.
சிவசிதம்பரம், தமிழர் விடுதலைக்
கூட்டணித் தலைவர்
2004 - ரோனால்டு
ரேகன், அமெரிக்க முன்னாள் அதிபர்
(பி. 1911)
2004 - கே. கணேஷ்,
எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
உலக சுற்றுச்சூழல்
நாள்
டென்மார்க் - அரசியல்
நிர்ணய நாள்
சேஷெல்ஸ் - விடுதலை
நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக