சூன் 3 (June
3) கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1539 - ஸ்பானிய
நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான்.
1864 - அமெரிக்க
உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க
மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர்.
1940 - இரண்டாம்
உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.
1940 - இரண்டாம்
உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி
பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.
1962 - பிரான்சின்
போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1965 - நாசாவின்
ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது.
எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள்
விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
1969 - தெற்கு
வியட்நாமில் ”மெல்பேர்ன்” என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப்
பிளந்தது.
1984 - அம்ரித்சரில்
சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.
1989 - சீனாவில்
தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க
அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1991 - ஜப்பானில்
உன்சென் மலை வெடித்ததில் 43 பேர்
கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும்
ஆவார்.
1998 - ஜெர்மனியில்
கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - 2001இல்
அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.
2006 - மொண்டெனேகுரோ
நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
2007 - கொழும்பில்
விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2007 - தெற்கு
சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
பிறப்புகள்
1808 - ஜெபர்சன்
டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின்
கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)
1924 - மு. கருணாநிதி,
தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்
1931 - ராவுல்
காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத்
தலைவர்
1961 - லோறன்ஸ்
லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர்
1966 - வசீம் அக்ரம்,
பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்
இறப்புகள்
1657 - வில்லியம்
ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி.
1578)
1924 - பிரான்ஸ்
காஃப்கா, செக் எழுத்தாளர் (பி. 1883)
1963 - இருபத்திமூன்றாம்
யோவான் (திருத்தந்தை) (பி. 1881)
1963 - நாசிம்
ஹிக்மட், கிரேக்க-துருக்கி
எழுத்தாளர் (பி. 1902)
1989 - ரூஃகூல்லா
மூசவி கொமெய்னி, இரானிய ஆன்மிகத்
தலைவர், அரசியல்வாதி (பி. 1902)
1990 - ராபர்ட்
நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர்
(பி. 1927)
2000 - ஜெய்சங்கர்,
திரைப்பட நடிகர்
2013 - ஜியா கான்,
அமெரிக்க-இந்திய நடிகை (பி. 1988)
2014 - கோபிநாத்
முண்டே, இந்திய அரசியல்வாதி,
அமைச்சர் (பி. 1949)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக