செவ்வாய், 31 மே, 2016

சூன் 2 (June 2)



சூன் 2 (June 2) கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.
 நிகழ்வுகள்
1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1924 - ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.
1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
1965 - வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது.
1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
2003 - வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது.
பிறப்புகள்
1942 - டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்.
1943 - இளையராஜா, இந்திய இசையமைப்பாளர்.
1956 - மணிரத்னம், தமிழ் இயக்குனர்.
1965 - ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா, ஆஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள்.
இறப்புகள்
1842 - பி. கந்தப்பிள்ளை, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை.
1882 - கரிபால்டி, நவீன இத்தாலியை உருவாக்கியவர். (பி. 1807)
1981 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத் தமிழறிஞர் (பி. 1907)
2014 - துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பி. 1924)
2015 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (பி. 1941)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக