மே 31 (May 31)
கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1223 - செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர்.
1889 - பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.
1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகார்னஸ்பேக் நகரைக் கைப்பற்றின.
1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1921 - ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர்.
1931 - பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின.
1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1970 - பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.
1973 - சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.
1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
2004 - வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005 - இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.
பிறப்புகள்
1819 - வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர் (இ. 1892)
1852 - ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921)
1928 - பங்கஜ் ராய், இந்தியத் துடுப்பாளர் (இ. 2001)
1930 - கிளின்ட் ஈஸ்ட்வுட், அமெரிக்க நடிகர்
1931 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)
1945 - லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்
1966 - ரொசான் மகாநாம, இலங்கைத் துடுப்பாளர்
1976 - கோலின் பார்ரெல், ஐரிய நடிகர்
இறப்புகள்
1809 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (பி. 1732)
1832 - எவரிஸ்ட் கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1811)
1910 - எலிசபெத் பிளாக்வெல், ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821)
1962 - அடோல்வ் ஏச்மென், செருமானிய கேணல் (பி. 1906)
1976 - ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. 1910)
1987 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (பி. 1937)
2002 - சுபாஸ் குப்தே, இந்தியத் துடுப்பாளர் (பி. 1929)
2004 - ஐயாத்துரை நடேசன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்
2009 - மில்வினா டீன், மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கடைசியாக உயிருடன் இருக்கும் ஒரே ஒரு பயணி (பி. 1912)
சிறப்பு நாள்
புகையிலை எதிர்ப்பு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக