செவ்வாய், 24 மே, 2016

மே 30 (May 30)



மே 30 (May 30) 

கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள் 
1431 - நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து.
1635 - முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1815 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.
1845 - திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.
1883 - நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
1966 - முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1972 - இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1987 - கோவா தனி மாநிலமாகியது.
1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
பிறப்புகள் 
1899 - மணிக்கொடி சீனிவாசன், தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர் (இ. 1975)
1931 - சுந்தர ராமசாமி, நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் (இ. 2005)
1934 - அலெக்சி லியோனொவ், சோவியத்/ரஷ்யாவின் விண்வெளி வீரர்
இறப்புகள் 
1431 - ஜோன் ஆஃப் ஆர்க், பிரெஞ்சு வீராங்கனை (பி. 1412)
1960 - போரிஸ் பாஸ்ரர்நாக், ரஷ்ய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)
1973 - மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி.1916)
1981 - சியாவுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1936)
சிறப்பு நாள் 
திரினிடாட் டொபாகோ - இந்தியர்களின் வருகை நாள் (1845)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக