ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஆகஸ்டு 2 (August 2)


ஆகஸ்டு 2 (August 2) கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.
1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.
1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.
1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.
1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).
1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.
1943 - போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1945 - இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.
1968 - பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
1973 - மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.
பிறப்புகள்
1859 - ஆபிரகாம் பண்டிதர், தமிழிசைக் கலைஞர் (இ. 1919)
1876 - பிங்கலி வெங்கையா, இந்திய நிலவியலாளர், இந்திய தேசியக் கொடியை வரைந்தவர் ரி. 1963)
1913 - சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர், கல்விமான் (இ. 1980)
1926 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2008)
1930 - ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)
1932 - பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (இ. 2013)
1941 - சூல்ஸ் ஹொஃப்மன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-லக்சம்பர்க் உயிரியலாளர்
1945 - பங்கர் ராய், இந்திய ஆர்வலர், கல்வியியலாளர்
1958 - அர்சாத் அயூப், இந்தியத் துடுப்பாளர்
1964 - மேரி லூயீஸ் பார்க்கர், அமெரிக்க நடிகை
1976 - சாம் வோர்திங்டன், ஆங்கில-ஆத்திரேலிய நடிகர்
1976 - முகம்மது சியாத், பாக்கித்தானியத் துடுப்பாளர்
இறப்புகள்
686 - ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) (பி. 635)
1860 - ஹென்றி வோர்ட், இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநர் (பி. 1796)
1922 - அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847)
1976 - பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க திரைப்பட இயக்குனர் (பி. 1890)
2000 - நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (பி. 1929
2013 - வெ. தட்சிணாமூர்த்தி, இந்தியப் பாடகர்-கவிஞர் (பி. 1919)


ஆகஸ்டு 1 (August 1)


ஆகஸ்டு 1 (August 1)
ஆகஸ்டு 1 (August 1) கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.
1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.
1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.
1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.
2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்
பிறப்புகள்
கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54)
1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861)
1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891)
1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930)
1876 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)
1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (இ. 1966)
1907 – மறை. திருநாவுக்கரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1983)
1910 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])
1910 – முகமது நிசார், இந்தியத் துடுப்பாளர் (இ. 1963)
1924 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (இ. 2015)
1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிய அரசியல்வாதி (இ. 1979)
1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972)
1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்
1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்
1952 – வி. எஸ். ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி.
1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்
1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயட் துடுப்பாளர்
1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்
1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை
இறப்புகள்
1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665)
1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696)
1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811)
1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)
1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878)
1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900)
1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908)
1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897)
2008 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய அரசியல்வாதி (பி. 1916)
2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (பி. 1933)
சிறப்பு நாள்
அங்கோலா - இராணுவ நாள்
பெனின் - தேசிய நாள் (1960)
கொங்கோ - பெற்றோர் நாள்
லெபனான் - இராணுவ நாள்
சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)

சூலை 31 (July 31)


சூலை 31 (July 31) 
சூலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
30 BC - மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.
1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1498 - தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.
1588 - ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1655 - உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.
1741 - புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.
1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1938 - கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.
1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
1964 - சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
1976 - வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.
1987 - ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
1988 - மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.
1992 - நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
2006 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007 - வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
பிறப்புகள்
1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
1880 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (இ. 1936)
1907 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
1912 – மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
1916 – மோகன் லால் சுகாதியா, இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
1919 – வே. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
1954 – மணிவண்ணன், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 2013)
1965 – ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர்
1989 – விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
1556 – லொயோலா இஞ்ஞாசி, இயேசு சபையை உருவாக்கிய இசுப்பானியர் (பி. 1491)
1805 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1756)
1886 – பிரான்சு லிசித்து, அங்கேரிய இசையமைப்பாளர் (பி. 1811)
1940 – உத்தம் சிங், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1899)
1944 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. 1900)
1980 – முகமது ரபி, இந்தியப் பாடகர் (பி. 1924)
1996 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
2000 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், டச்சு வானியலார், கணிதவியலார் (பி. 1918)
2014 – சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்


சூலை 30 (July 30)


சூலை 30 (July 30)
சூலை 30 (July 30)  கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.
1629 - இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1733 - ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.
1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
1825 - பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1930 - உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1932 - கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954 - எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.
1966 - உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.
1971 - அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.
1971 - ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.
1997 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் "திரெட்போ" என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)
1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)
1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)
1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)
1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்
1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர்
1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு மருத்துவர்
1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி
1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)
1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை
1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்
1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்
1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்
1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்
இறப்புகள்[தொகு]
1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)
1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழறிஞர் (பி. 1862)
1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் (பி. 1909)
1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்
2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)
2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)
சிறப்பு நாள்
பன்னாட்டு நட்பு நாள்
விடுதலை நாள் (வனுவாட்டு 1980).
மாவீரர் நாள் (தெற்கு சூடான்)
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்

செவ்வாய், 26 ஜூலை, 2016

ஜூலை 29 ,(July 29)


ஜூலை 29 ,(July 29) 
சூலை 29 (July 29) கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.
1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.
1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
1848 - அயர்லாந்தில் "டிப்பெரரி" என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
1900 - இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.
1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.
1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.
1967 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.
1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
1883 - முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)
1904 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)
1905 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)
இறப்புகள்
1913 - டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)
1974 - கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
1999 - நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி
2009 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
2009 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
2014 - ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
2014 - ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)
சிறப்பு நாள்
ருமேனியா - தேசிய கீத நாள்
சர்வதேச புலிகள் காப்பக தினம்
வெளி இணைப்புகள்[தொகு]
பிபிசி: இந்த நாளில்
நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
கனடா இந்த நாளில்

ஜூலை 28 (July 28)


ஜூலை 28 (July 28) 
சூலை 28 (July 28) கிரிகோரியன் ஆண்டின் 209 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 210 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1364 - பிசா குடியரசுப் படைகளும், ப்ளோரன்ஸ் குடியரசுப் படைகளும் இத்தாலியில் உள்ள காசினா என்ற இடத்தில் மோதிக்கொண்டன.
1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.
1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.
1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.
1794 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
1808 - இரண்டாம் மஹ்மூத் ஓட்டோமான் பேரரசின் சுல்தனாகவும், இஸ்லாமிய கலிபாவாகவும் ஆகினார்.
1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.
1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்.
1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
1976 - சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.
1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.
2005 - இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.
2006 - ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1936 - சோபர்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் துடுப்பாளர்
1951 - சந்தியாகோ கலத்ராவா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர்
1954 - குகொ சவெஸ், வெனிசுவேலா ஜனாதிபதி
1977 - மனு ஜினோபிலி, ஆர்ஜெண்டீனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
சிறப்பு நாள்[தொகு]
பெரு - விடுதலை நாள் (1821)

ஜூலை 27 (July 27)


ஜூலை 27 (July 27)
ஜூலை 27 (July 27) கிரிகோரியன் ஆண்டின் 208 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 209 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.
1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.
1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.
1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.
1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை
1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.
1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
1997 - அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.
2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.
பிறப்புகள்
1824 - அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)
1853 - விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)
1879 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)
1955 - அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்
இறப்புகள்
1953 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)
1987 - சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)
2015 - டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் 11 வது குடியரசுத்தலைவர், அறிவியலாளர் (பி. 1931)

ஜூலை 26. (July 26)


ஜூலை 26. (July 26)
சூலை 26 (July 26) கிரிகோரியன் ஆண்டின் 207 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 208 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
657 - அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.
811 - பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
1509 - விஜயநகரப் பேரரசின் மன்னனாக கிருஷ்ணதேவராயன் முடிசூடினார்.
1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
1847 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1891 - தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
1936 - அச்சு நாடுகள் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லிவீவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.
1945 - ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.
1945 - ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953 - கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.
1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 - மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971 - அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.
1974 - ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1994 - எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.
பிறப்புகள்
1822 – ராபர்ட் வில்லியம் தாம்சன், இசுக்கொட்லாந்துக் கண்டுபிடிப்பாளர் (இ. 1873)
1842 – ஆல்பிரடு மார்ஷல், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1924)
1856 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (இ. 1950)
1875 – கார்ல் யுங்கு, சுவிசு உளவியலாளர், மருத்துவர் (இ. 1961)
1878 – மு. இராகவையங்கார், தமிழறிஞர் (இ. 1960)
1910 – பி. ஆர். பந்துலு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் (இ. 1974)
1919 – ஜேம்ஸ் லவ்லாக், ஆங்கிலேய உயிரியலாளர், வேதியியலாளர்
1925 – சக்தி அ. பாலஐயா, இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2013)
1927 – ராம் ராம்சந்த், இந்தியத் துடுப்பாளர் (இ. 2003)
1928 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1999)
1933 – எட்மண்ட் ஃவெல்ப்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1933 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
1939 – ஜோன் ஹவார்ட், ஆத்திரேலியாவின் 25வது பிரதமர்
1941 – வாஸந்தி, தமிழக எழுத்தாளர்
1955 – ஆசிஃப் அலி சர்தாரி, பாக்கித்தானின் 11வது அரசுத்தலைவர்
1960 – சின்னி ஜெயந்த், தமிழ் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்
1964 – சாண்ட்ரா புல்லக், அமெரிக்க நடிகை
1967 – ஜேசன் ஸ்டேதம், ஆங்கிலேய நடிகர்
1968 – ஒலிவியா வில்லியம்ஸ், ஆங்கிலேய நடிகை
1971 – மேரி ஆன் மோகன்ராஜ், அமெரிக்க எழுத்தாளர்
1971 – காலிட் மஹ்முத், வங்காளதேசத் துடுப்பாளர்
1973 – கேட் பெக்கின்சேல், ஆங்கிலேய நடிகை
1983 – அபிராமி, இந்திய திரைப்பட நடிகை
1989 – இவியான் சார்கோசு, வெனிசுவேலாவின் உலக அழகி 2011
1993 – எலிசபெத் கில்லீஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்
432 – முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)
1684 – எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)
1934 – வின்சர் மெக்கே, அமெரிக்கத் தயாரிப்பாளர் (பி. 1871)
1952 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை, அரசியல்வாதி (பி. 1919)
1982 – க. சொர்ணலிங்கம், கலையரசு, ஈழத்தின் நாடகக் கலைஞர் (பி. 1889)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (லைபீரியா, 1847)
விடுதலை நாள் (மாலைத்தீவுகள், 1965)
கார்கில் போர் வெற்றி நாள் (இந்தியா)
வெளி இணைப்புக்கள்[தொகு]

புதன், 20 ஜூலை, 2016

ஜூலை 25 (July 25)


ஜூலை 25  (July 25)
சூலை 25 (July 25) கிரிகோரியன் ஆண்டின் 206 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 207 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 159 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1261 - கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.
1547 - இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.
1593 - பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினான்.
1603 - ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.
1799 - எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை சமரில் வென்றான்.
1868 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.
1898 - புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பமானது. முதலாவது அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.
1907 - கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.
1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
1925 - சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.
1934 - ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை செய்யப்பட்டார்.
1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நோர்மண்டி சண்டையில் 5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.
1973 - சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.
1983 - கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 - சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1993 - இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது.
1993 - மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.
1993 - தென்னாபிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
1994 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948ம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.
1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.
2000 - பிரான்சின் கொன்கோர்ட் சுப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.
பிறப்புகள்
1875 - ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)
இறப்புகள்
1980 - விளாடிமீர் விசோத்ஸ்கி, ரஷ்யப் பாடகர், கவிஞர், நடிகர் (பி. 1938)
சிறப்பு நாள்
புவேர்ட்டோ ரிக்கோ - அரசியலமைப்பு நாள் (1952)
துனீசியா - குடியரசு நாள் (1957)

ஜூலை 24 (July 24)


ஜூலை 24 (July 24) 
சூலை 24 (July 24) கிரிகோரியன் ஆண்டின் 205 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 206 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 160 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1505 - போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.
1567 - இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.
1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.
1915 - சிக்காகோவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 845 பேர் உயிரிழந்தனர்.
1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.
1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.
1931 - பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1974 - சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.
1977 - லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1982 - ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர்ர் கொல்லப்பட்டனர்.
1991 - இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
2001 - கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
2007 - லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.
பிறப்புகள்
1802 - அலெக்சாந்தர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870)
1932 - தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்
1963 - கார்ல் மலோன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
1953 - ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)
இறப்புகள்
1848 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (பி. 1782)
1974 - ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891).
சிறப்பு நாள்
வனுவாட்டு - சிறுவர் நாள்

ஜூலை 23 (July 23)


ஜூலை 23 (July 23)
சூலை 23 (July 23) கிரிகோரியன் ஆண்டின் 204 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 205 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.
1793 - புரூசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1840 - கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
1874 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.
1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.
1952 - எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார்.
1961 - நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
1962 - லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.
1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
1970 - ஓமானின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.
1983 - திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
1988 - பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.
1992 - ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.
1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
1999 - சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
1999 - மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
பிறப்புகள்
1856 - லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)
1892 - முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (இ. 1975)
1975 - சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர்
1984 - பிரான்டன் ராய், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1885 - யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்க அரசுத் தலைவர் (பி. 1822)
1916 - சேர் வில்லியம் ராம்சி, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி. 1852)
1925 - சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)
1989 - தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்
1957 - பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)
2014 - சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
சிறப்பு நாள்
எகிப்து - புரட்சி நாள் (1952)
லிபியா - புரட்சி நாள்
பப்புவா நியூ கினி - நினைவு நாள்

ஜூலை 22 (July 22)


ஜூலை 22 (July 22)
சூலை 22 (July 22) கிரிகோரியன் ஆண்டின் 203 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 204 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 162 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1499 - புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.
1587 - வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர்.
1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.
1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1933 - வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
1962 - நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
2009 - சூரிய கிரகணம், ஜூலை 22: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.
பிறப்புகள்
1923 - முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)
1983 - நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1832 - இரண்டாம் நெப்போலியன், பிரான்சின் பேரரசன் (பி. 1811)
1972 - டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1914)
சிறப்பு நாள்
π அண்ணளவு நாள்
மர்தலேன் மரியாள் திருவிழா நாள்

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஜூலை 21 (July 21)


ஜூலை 21  (July 21) 
சூலை 21 (July 21) கிரிகோரியன் ஆண்டின் 202 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 203 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 163 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.
1718 - ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
1774 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.
1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது).
1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.
1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
1972 - வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.
1977 - நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.
2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.
பிறப்புகள்
1899 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
1951 - ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 2014)
இறப்புகள்[தொகு]
1920 - அன்னை சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)
1926 - ஃபிரெடெரிக் ஹன்டர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1886)
1998 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (பி. 1923)
2001 - சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)
2009 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)
2010 - டேவிட் வாரன், கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர்.
சிறப்பு நாள்
பெல்ஜியம் - தேசிய நாள்
பொலீவியா - மாவீரர் நாள்
குவாம் - விடுதலை நாள் (1944)
சிங்கப்பூர் - இன சமத்துவ நாள்

செவ்வாய், 12 ஜூலை, 2016

ஜூலை 20 (July 20)


ஜூலை  20 (July 20) 
ஜூலை  20 (July 20) கிரிகோரியன் ஆண்டின் 201 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 202 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1304 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் ஸ்டேர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினான்.
1618 - புளூட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.
1656 - பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவ் மன்னனின் சுவீடனின் படைகள் வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து-லித்துவேனியப் படைகளை வென்றனர்.
1810 - நியூகிரனாடாவின் பகோட்டா (கொலம்பியாவின் தலைநகர்) நகர மக்கள் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
1871 - பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.
1917 - முதலாம் உலகப் போர்: யூகொஸ்லாவிய இராச்சியம் உருவாக்கப்பட்டது.
1922 - பன்னாட்டு அமைப்பு (League of Nations) ஆபிரிக்காவில் டோகோலாந்து பிரான்சுக்கும், தங்கனீக்கா ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.
1924 - அமெரிக்க உதவி தூதுவர் "ரொபேர்ட் இம்ரி" சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் தெஹ்ரான் நகரில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1935 - இந்தியாவில் லாகூரில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
1940 - டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஒருவனால் ஹிட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பித்தார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாம் தீவை அடைந்தன.
1947 - பர்மியப் பிரதமர் ஓங் சான் மற்றும் 7 அமைச்சர்கள் கொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஊ சோ கைது செய்யப்பட்டார்.
1948 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 தலைவர்கள் நியூயோர்க் நகரில் கைது செய்யப்பட்டனர்.
1949 - 19-மாத அரபு - இசுரேல் போரின் பின்னர் இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.
1951 - ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1953 - யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது.
1954 - வியட்நாமை இரண்டாகாப் பிரிக்கும் உடன்பாடு ஜெனீவாவில் எட்டப்பட்டது.
1960 -இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் தலைவராகத் தெரிவான முதற் பெண் ஆவார்.
1960 - கொங்கோவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த பெல்ஜியம் ஐநா பாதுகாப்பு அவையில் வாதாடியது. கொங்கோ அரசு சோவியத் உதவியை நாடியது.
1962 - கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் "காய் பே" நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 30 குடிமக்களையும் கொன்றனர்.
1969 - அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் காலடி வைத்தனர்.
1969 - உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கொந்துராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1974 - சைப்பிரசில் அதிபர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.
1976 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தாய்லாந்தில் இருந்து முற்றாக வெளியேறினர்.
1976 - வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.
1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1980 - இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
1982 - ஐரியக் குடியரசு இராணுவத்தினரினால் லண்டனில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொது மக்கள் படுகாயமடைந்தனர்.
1989 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1996 - ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
கிமு 356 - மகா அலெக்சாந்தர், கிரேக்க மன்னன் (இ. கிமு 323)
1822 - கிரிகோர் ஜோஹன் மெண்டல், ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் (இ. 1884)
1919 - சேர் எட்மண்ட் ஹில்லறி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர், நியூசிலாந்தின் மலையேறி
1923 - மு. சிவசிதம்பரம், ஈழத் தமிழ் அரசியல்வாதி (இ. 2002)
1929 - ராஜேந்திர குமார், இந்திய நடிகர் (இ. 1999)
1975 - ரே ஏலன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1937 - மார்க்கோனி, வானொலியைக் கண்டுபிடித்தவர் (பி. 1874
1973 - புரூஸ் லீ, தற்காப்புக்கலை வல்லுநர், ஹாலிவுட் நடிகர் (பி. 1940)
சிறப்பு நாள்
அனைத்துலக சதுரங்க நாள்
கொலம்பியா - விடுதலை நாள் (1810)
வடக்கு சைப்பிரஸ் - அமைதி மற்றும் விடுதலை நாள்

ஜூலை 19 (July 19)


ஜூலை  19 (July 19)
ஜூலை  19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1545 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.
1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
1985 - இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.
1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
பிறப்புகள்
1827 - மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)
1893 - விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)
1938 - ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்
1979 - தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்
1979 - மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை
இறப்புகள்
1947 - சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)
1947 - ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915)
1987 - ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)
2013 - சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)
சிறப்பு நாள்[தொகு]
மியான்மார் - பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)

ஜூலை18 (July 18)


ஜூலை18 (July 18)
ஜூலை18 (July 18) கிரிகோரியன் ஆண்டின் 199 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 200 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
1656 - போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்.
1872 - ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1916 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
1944 - இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1965 - சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 - நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1982 - குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 - கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.
1995 - கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்ததில் வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
1997 - மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
1998 - பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2007 - மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1909 - அந்திரே குரோமிக்கோ, சோவியத் அதிபர் (இ. 1989)
1918 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர். (இ. 2013)
1935 - ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து ஆன்மிகத் தலைவர்.
1950 - சேர் றிச்சர்ட் பிரான்சன், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்
1982 - பிரியங்கா சோப்ரா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1817 - ஜேன் ஆஸ்டின், ஆங்கில நாவலாசிரியை (பி. 1775)
1892 - தோமஸ் குக், ஆங்கிலேய பிரயாண முகவர் (பி. 1808)
1968 - கோர்னெல் ஹேமன்ஸ், நோபல் பரிசு பெற்றவர்.
1974 - எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (பி: ஜூலை 3 1918)
2012 - ராஜேஷ் கன்னா, இந்தி திரைப்பட நடிகர், (பி. 1942)
2013 - வாலி, கவிஞர் (பி. 1931)
சிறப்பு நாள்
உருகுவே - அரசியலமைப்பு நாள் (1830)
நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)

சூலை 17 (July 17)


சூலை 17 (July 17) 
சூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1203 - நான்காம் சிலுவைப் படைகள் கொன்ஸ்டண்டீனபோல் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினான்.
1755 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.
1762 - உருசியாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கேத்தரீன் அரசியானார்.
1771 - இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியன் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டு மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.
1791 - பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1815 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.
1816 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
1841 - முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.
1856 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1911 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.
1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாசும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
1918 - டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய "கர்பாத்தியா" என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
1936 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.
1944 - இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.
1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.
1955 - கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.
1967 - நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.
1968 - ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.
1973 - ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.
1975 - அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.
1976 - கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.
1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.
1979 - நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.
1981 - மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1996 - நியூ யோர்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.
2006 - இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.
2014 - ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1894 - ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (இ. 1966)
1941 - பாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர்
1954 - அங்கெலா மேர்கெல், செருமானிய அரசியல்வாதி, 8வது அரசுத்தலைவர்
1971 - சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)
1977 - மாதங்கி அருள்பிரகாசம், ராப் இசைப் பாடகி
இறப்புகள்[தொகு]
1762 - உருசியாவின் மூன்றாம் பீட்டர் (பி. 1728)
1790 - ஆடம் சிமித், ஸ்கொட்ட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723)
1918 - உருசிய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் (பி. 1868) குடும்பம்
அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (பி. 1872)
ஒல்கா, இளவரசி (பி. 1895)
தத்தியானா, இளவரசி (பி. 1897)
மரீயா, இளவரசி (பி. 1899)
அனஸ்தாசியா, இளவரசன் (பி. 1901)
அலெக்சி, இளவரசன் (பி. 1904)
1972 - எமிலியானுஸ் பிள்ளை, யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் ஆயர், (பி. 1901)
2012 - மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)
2014 - சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)
சிறப்பு நாள்
தென் கொரியா - அரசியலமைப்பு நாள்

ஜூலை 16 (July 16)


ஜூலை 16  (July 16)
சூலை 16 (July 16) கிரிகோரியன் ஆண்டின் 197 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 198 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
622 - முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.
1661 - ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.
1769 - சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.
1930 - எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்.
1942 - பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
1945 - மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.
1948 - இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
1950 - உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
1955 - டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.
1965 - பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
1969 - அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
1979 - ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.
1989 - புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 - பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995 - காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
1999 - ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.
2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1896 - ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968)
1942 - முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்
1968 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.
1984 - கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை
இறப்புகள்
1989 - உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்
2009 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)

வெள்ளி, 8 ஜூலை, 2016

ஜூலை 15 (July 15)

ஜூலை 15  (July 15) 
சூலை 15 (July 15) கிரிகோரியன் ஆண்டின் 196 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 197 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1240 – அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
1741 – அலெக்சி சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.
1815 – நெப்போலியன் பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.
1840 – ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.
1870 – புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1888 – ஜப்பானின் பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
1916 – வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1954 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.
1955 – அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
1974 – சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.
1983 – பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
2002 -- வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2003 – மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)
1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)
1903 – கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)
1926 – கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 2006)
1976 - சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)
இறப்புகள்
1904 – அன்ரன் செக்கோவ், ரசிய எழுத்தாளர் (பி. 1860)
1991 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
2002 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)

2003 – என். கே. பத்மநாதன், ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் (பி. 1931)

ஜூலை 14 (July 14)


ஜூலை 14 (July 14)
சூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
1865 - எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.
1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
1933 - ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
1948 - இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.
1958 - ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.
1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
1966 - குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1976 - கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது..
1989 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995 - MP3 பெயரிடப்பட்டது.
1995 - இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.
2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
பிறப்புகள்
1929 - வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர்.
1943 - ரோகண விஜயவீர, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், புரட்சியாளர் (இ. 1989)
இறப்புகள்
1827 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)
1998 - டிக் மக்டொனால்ட், மக்டொனால்ட் நிறுவன தாபகர் (பி. 1909)
2008 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)
சிறப்பு நாள்
பிரான்ஸ் - பாஸ்டில் நாள் (1789).

ஜூலை 13 (July 13)


ஜூலை  13 (July 13)
சூலை 13 (July 13) கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1174 - இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.
1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1793 - பிரெஞ்சு எழுத்தாளரும் புரட்சிவாதியுமான ஜான் போல் மராட் அவரது குளியல் அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
1844 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
1878 - பெர்லின் உடன்படிக்கை: சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.

1878: ஹாலிவுட் குறியீடு
1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
1931 - காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1971 - மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1989 - இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
2005 - பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1841 - ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக் கலைஞர் (இ. 1918)
1934 - வோல் சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்.
1953 - வைரமுத்து, தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர்.
இறப்புகள்
1989 - அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் (பி. 1927)
2014 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923).


ஜூலை 12 (July 12)


ஜூலை  12 (July 12)
சூலை 12 (July 12) கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1641 - போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.
1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.
1799 - ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
1806 - 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1892 - மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1898 - செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1918 - ஜப்பானின் "கவாச்சி" என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.
1932 - நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1975 - சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 - கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1993 - ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
2007 - வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
பிறப்புகள்
கிமு 100 - ஜூலியஸ் சீசர், ரோமானியத் தலைவன்
1854 - ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஒளிப்படச்சுருளைக் கண்டுபிடித்தவர் (இ. 1932)
1904 - பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிக் கவிஞர் (இ. 1973)
இறப்புகள்  
1536 - எராஸ்முஸ், டச்சு எழுத்தாளர், மெய்யியலாளர், (பி. 1466)
2006 - உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
2012 - மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் (பி. பெப்ரவரி 3 1930)
சிறப்பு நாள்

கிரிபட்டி- விடுதலை நாள் (1979).