ஜூலை 13 (July 13)
சூலை 13 (July 13) கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1174 - இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம்
இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.
1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில்
என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர்
தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1793 - பிரெஞ்சு எழுத்தாளரும் புரட்சிவாதியுமான ஜான்
போல் மராட் அவரது குளியல் அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
1844 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர்
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை
நிறுவினார்.
1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில்
முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
1878 - பெர்லின் உடன்படிக்கை: சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில்
இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.
1878: ஹாலிவுட் குறியீடு
1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள
மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில்
இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள்
உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக
முதலாவது கோலைப் போட்டார்.
1931 - காஷ்மீர், ஸ்ரீநகரில்
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள்
அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1971 - மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப்
புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக
விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1989 - இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ.
அமிர்தலிங்கம், மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள்
கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
2005 - பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று
தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1841 - ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்
கலைஞர் (இ. 1918)
1934 - வோல் சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற
நைஜீரிய எழுத்தாளர்.
1953 - வைரமுத்து, தமிழ்த் திரைப்பட
பாடலாசிரியர், கவிஞர்.
இறப்புகள்
1989 - அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் (பி. 1927)
2014 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல்
பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக