சூலை 5 (July
5)
சூலை 5 (July
5) கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1295 - இங்கிலாந்துக்கு
எதிராக ஸ்கொட்லாந்தும் பிரான்சும் கூட்டை உருவாக்கின.
1594 – போர்த்துக்கீசப்
படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த்
தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர்
1610 - நியூபவுண்ட்லாந்து
தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1687 - ஐசாக்
நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
1770 - ரஷ்யப் பேரரசுக்கும்
ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1811 - வெனிசுவேலா
ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1830 - பிரான்ஸ்
அல்ஜீரியாவினுள் நுழைந்தது.
1865 - இரட்சணிய சேனை
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1884 - ஜெர்மனி கமரூனை
ஆக்கிரமித்தது.
1900 - ஆஸ்திரேலியப்
பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1945 - இரண்டாம்
உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
1950 - கொரியப் போர்:
அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல்
ஆரம்பமானது.
1950 - சியோனிசம்:
யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில்
கொண்டுவரப்பட்டது.
1951 - சந்தி
திரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்.
1954 - பிபிசி தன்
முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
1954 – ஆந்திரப்
பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1962 - பிரான்சிடமிருந்து
அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
1970 - கனடிய விமானம்
ஒன்று டொரொண்டோ விமான நிலையத்தில் மோதியதில் 109 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - ஐக்கிய
அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக்
குறைக்கப்பட்டது.
1975 - போர்த்துக்கல்லிடம்
இருந்து கேப் வேர்ட் விடுதலை பெற்றது.
1977 - பாகிஸ்தானில்
இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர்
சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
1987 - விடுதலைப் புலிகளின்
முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
1992 - இயக்கச்சியில்
வை-8 விமானம் விடுதலைப்
புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 - குளோனிங்
முறையில் முதலாவது பாலூட்டி, டோலி
என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
1998 - செவ்வாய்க்
கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.
2004 - இந்தோனீசியாவில்
முதலாவது அதிபர் தேர்தல் இடம்பெற்றது.
2006 - வட கொரியா
குறைந்தது இரண்டு குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளையும், ஒரு ஸ்கட் ஏவுகணையையும் ஒரு நீண்ட தூரம் பாயும்
ஏவுகணையையும் சோதித்தது.
2009 – சீனாவின்
சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.
2009 – ரொஜர் பெடரர்
விம்பிள்டன் டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கை வென்று 15வது பெருவெற்றித் தொடரைப் பெற்ற் சாதனை புரிந்தார்.
பிறப்புகள்
1653 - தாமஸ் பிட்,
மதராசின் பிரித்தானிய ஆளுநர் (இ. 1726)
1904 – எர்ணஸ்ட்
மாயர், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)
1918 – கே. கருணாகரன்,
இந்திய அரசியல்வாதி (இ. 2010)
1954 – ஜான் ரைட்,
நியூசிலாந்து துடுப்பாட்ட வீர்ரர்
1958 – பில்
வாட்டர்சன், அமெரிக்கக்
கேலிச்சித்திரக்காரர்
1996 - டோலி, முதல் குளோனிங் பாலூட்டி (இ. 2003)
இறப்புகள்[தொகு]
1833 – யோசெப்
நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக்
கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
1987 - கப்டன்
மில்லர், விடுதலைப் புலிகளின்
முதல் கரும்புலி (பி. 1966)
2006 – திருநல்லூர்
கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)
சிறப்பு நாள்
வெனிசுவேலா - விடுதலை
நாள் (1811)
அல்ஜீரியா - விடுதலை
நாள் (1962)
கேப் வேர்ட் -
விடுதலை நாள் (1975).
ஆர்மீனியா -
அரசியலமைப்பு நாள் (1995)
தமிழீழம் -
கரும்புலிகள் நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக