சூலை 08 (July 08)
சூலை 8 (July
8) கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1099 - முதலாம்
சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ
போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
1497 - வாஸ்கோ ட
காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
1709 - ரஷ்யாவின்
முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ்
மன்னனைத் தோற்கடித்தான்.
1815 - பதினெட்டாம்
லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு
வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.
1859 - சுவீடன்-நோர்வே
மன்னனாக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினான்.
1889 - வோல் ஸ்ட்ரீட்
ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.
1892 - நியூபவுண்லாந்தின்
சென் ஜோன்ஸ் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1982 - ஈராக் அதிபர்
சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1985 - திம்புப்
பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில்
பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 - ஜெர்மனி
ஆர்ஜென்டீனாவை வென்று 1990
கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
2003 - சூடான்
விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117
பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.
2006 - ம. பொ. சி.,
புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள்
நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
பிறப்புகள்
1895 - ஈகர் தம்,
ரஷ்யா இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1971)
1906 - பிலிப்
ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக்
கலைஞர் (இ. 2005)
1949 - ராஜசேகர
ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் (இ 2009)
1972 - சௌரவ் கங்குலி,
இந்தியத் கிரிக்கெட் துடுப்பாளர்
இறப்புகள்
1695 - கிறிஸ்டியான்
ஹைஜன்ஸ், டச்சு கணிதவியலாளர் (பி.
1629)
1979 - சின்-இட்டீரோ
டொமனாகா, நோபல் பரிசு பெற்றவர்
(பி. 1906)
1979 - ரொபேர்ட்
வூட்வேர்ட், நோபல் பரிசு பெற்றவர்
(பி. 1917)
1989 - வி. வி.
வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின்
முன்னோடி, நடிகமணி (பி. 1924)
1994 - கிம் இல்-சுங்,
வட கொரியத் தலைவர் (பி. 1912)
2007 - சந்திரசேகர்,
11வது இந்தியப் பிரதமர், (பி. 1927)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக