ஜூலை 16 (July 16)
சூலை 16 (July 16) கிரிகோரியன் ஆண்டின் 197 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 198 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
622 - முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.
1661 - ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.
1769 - சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.
1930 - எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்.
1942 - பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
1945 - மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.
1948 - இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
1950 - உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
1955 - டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.
1965 - பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
1969 - அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
1979 - ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.
1989 - புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 - பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995 - காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
1999 - ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.
2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1896 - ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968)
1942 - முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்
1968 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.
1984 - கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை
இறப்புகள்
1989 - உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்
2009 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக