ஜூலை 15 (July 15)
சூலை 15 (July
15) கிரிகோரியன் ஆண்டின் 196 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 197 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1240 – அலெக்சாண்டர்
நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில்
இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
1381 – இங்கிலாந்தில்
உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு
இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
1741 – அலெக்சி
சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு
அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர்
ஆவர்.
1815 – நெப்போலியன்
பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.
1840 – ஆஸ்திரியா,
பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை
ஏற்படுத்தின.
1857 – சிப்பாய்க்
கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
1860 – இலங்கையின்
பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.
1870 – புரூசியாவும்
இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.
1870 – அமெரிக்க
உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க
மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1888 – ஜப்பானின்
பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர்
கொல்லப்பட்டனர்.
1916 – வாஷிங்டன்,
சியாட்டில் நகரில் வில்லியம் போயிங்,
ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான
நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
1954 - இரண்டு வருட
உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.
1955 – அணுவாயுதங்களுக்கு
எதிராக 18 நோபல் விருதாளர்கள்
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
1974 – சைப்பிரஸ்,
நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு
தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை
அதிபராக்கினர்.
1983 – பாரிசில் ஓரி
விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
1991 - ஈழத்து
எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு
கொல்லப்பட்டார்.
2002 -- வோல்
ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக
பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான்
நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2003 – மொசில்லா
நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
1606 – ரெம்பிரான்ட்,
டச்சு ஓவியர் (இ. 1669)
1876 – மறைமலை அடிகள்,
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)
1903 – கே. காமராஜ்,
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)
1926 – கே. ஷங்கர்,
தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 2006)
1976 - சுபா ஜெய்,
மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)
இறப்புகள்
1904 – அன்ரன்
செக்கோவ், ரசிய எழுத்தாளர் (பி. 1860)
1991 – நெல்லை க.
பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
2002 – எம். எச்.
எம். ஷம்ஸ், இலங்கையின்
ஊடகவியலாளர் (பி. 1940)
2003 – என். கே.
பத்மநாதன், ஈழத்தின் பிரபல
நாதசுவரக் கலைஞர் (பி. 1931)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக