சூலை 07 (July 07)
சூலை 7 (July
7) கிரிகோரியன் ஆண்டின் 188 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 189 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 177 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1456 - ஜோன் ஆஃப்
ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
1543 - பிரான்ஸ்
லக்சம்பேர்க்கை முற்றுகையிட்டது.
1799 - பஞ்சாப்
மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
1807 - பிரான்சின்
நெப்போலியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ரஷ்யாவின் டில்சிட் என்ற
இடத்தில் எட்டப்பட்டது.
1865 - ஆபிரகாம்
லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1896 - இந்தியாவில்
முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1898 - ஹவாய் தீவை
ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் முடிவில் அதிபர் வில்லியம் மக்கின்லி
கைச்சாத்திட்டார்.
1917 - ரஷ்யப்
புரட்சி: ரஷ்யாவின் இடைக்கால அரசின் பிரதமர் இளவரசர் கியோர்கி லுவோவ் பதவியைத்
துறந்தார். அலெக்சாண்டர் கெரென்ஸ்கி பிரதமரானார்.
1937 - பசிபிக் போர்:
ஜப்பானியப் படைகள் சீனாவின் பெய்ஜிங் நகரை அடைந்தனர்.
1941 - இரண்டாம்
உலகப் போர்: ஜெர்மனியின் தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஐஸ்லாந்தில்
தரையிறங்கினர்.
1941 - இரண்டாம்
உலகப் போர்: பெய்ரூட் நகரம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
1953 - பொலிவியா ஊடாக
பெரு, நிக்கராகுவா போன்ற
நாடுகளுக்கான தனது பயணத்தை சே குவேரா ஆரம்பித்தார்.
1959 - வெள்ளிக் கோள்
ரெகூலஸ் என்ற விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன்
வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
1967 - பயாபிராவில்
உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1969 - கனடாவில்
பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக
அங்கீகரிக்கப்பட்டது.
1978 - சொலமன்
தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2005 - லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற
தொடர் குண்டுவெடிப்புகளில் 56
பேர் கொல்லப்பட்டனர்.
2006 - சீனாவில்
சுரங்கம் தோண்டுவதற்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - புதிய ஏழு உலக
அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிறப்புகள்
1947 - ஞானேந்திரா,
நேபாளத்தின் கடைசி மன்னர்
1981 - மகேந்திர சிங்
தோனி, இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
1930 - ஆர்தர் கொனன்
டொயில், துப்பறியும் புனைகதை
எழுத்தாளர் (பி. 1859)
2014 - எதுவார்து
செவர்துநாத்சே, ஜார்ஜியாவின்
முன்னாள் அரசுத் தலைவர் (பி. 1928)
சிறப்பு நாள்
சொலமன் தீவுகள் -
விடுதலை நாள் (1978)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக