சூலை 09 (July 09)
சூலை 9 (July
9) கிரிகோரியன் ஆண்டின் 190 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 191 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 175 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
455 - அவிட்டஸ்
மேற்கு ரோமப் பேரரசின் மன்னனானான்.
1357 - புனித ரோமப்
பேரரசர் நான்காம் சார்ல்ஸ் பிராகா நகரத்தில் சார்லஸ் பாலத்திற்கு அடித்தளம்
நாட்டினார்.
1755 - பென்சில்வேனியாவில்
பிரெஞ்சு மற்றும் குடியேற்ற துணை இராணுவக் குழு பிரித்தானியப் படைகளைத்
தோற்கடித்தனர்.
1790 - பால்ட்டிக்
கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் ரஷ்யக் கப்பல்களை பெரும்
எண்ணிக்கையில் கைப்பற்றினர்.
1810 - ஒல்லாந்து
நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.
1816 - ஆர்ஜென்டீனா
ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1863 - அமெரிக்க
உள்நாட்டுப் போர்: ஹட்சன் துறைமுகம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது.
1868 - அனைத்து
ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய
அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1900 - ஆஸ்திரேலிய
கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப்
பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.
1903 - யாழ்ப்பாணத்தில்
இந்து இளைஞர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.
1918 - டென்னசியில்
நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் கொல்லப்பட்டு 171 பேர் படுகாயமடைந்தனர்.
1943 - இரண்டாம்
உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1948 - பாகிஸ்தான்
தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
1956 - யாழ்ப்பாணத்தில்
நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை
சிவன் கோவில், பெருமாள் கோயில்
ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.[2]
1982 - ஐக்கிய
அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.
1991 - 30 ஆண்டுகளின்
பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக்
கொள்ளப்பட்டது.
1995 - யாழ்ப்பாணம்
வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டது.
1995 - யாழ்ப்பாணத்தில்
நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத்
தாக்குதலில் குழந்தைகள், பெண்கள்
உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2002 - ஆபிரிக்க
ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி
இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
2006 - சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று
வீழ்ந்ததில் 122 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - 2006 உலகக் கிண்ணக்
காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது
தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
2006 - அக்னி III
ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன்
இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.
பிறப்புகள்
1930 - கே.
பாலச்சந்தர், தமிழ் திரைப்பட
இயக்குநர், (இ. 2014)
1956 - டொம் ஹாங்க்ஸ்,
அமெரிக்க ஹாலிவுட் நடிகர்
இறப்புகள்
2009 - சி. ஆர்.
கண்ணன், தமிழக எழுத்தாளர்
சிறப்பு நாள்
ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக