செவ்வாய், 5 ஜூலை, 2016

சூலை 06 (July0 6)


சூலை 06 (July0 6)
சூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1044 - புனித ரோமப் பேரரசின் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தான்.
1189 - முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1484 - போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டான்.
1535 - சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.
1560 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1785 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.
1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
1892 - தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1893 - அயோவாவின் பொமெரோய் நகரில் நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1908 - ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.
1935 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
1944 - கனெக்டிகட்டில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் கொல்லப்பட்டனர்.
1947 - சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.
1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
1964 - மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1966 - மலாவி குடியரசாகியது.
1967 - நைஜீரியப் படையினர் பயாஃப்ராவினுள் நுழைந்து போரை ஆரம்பித்தனர்.
1975 - கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1988 - வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 167 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
2005 - லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2006 - 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
பிறப்புகள்
1832 - முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோவின் மன்னர் (இ. 1864)
1870 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
1937 - மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (இ. 2014)
1946 - ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஐக்கிய அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி
1946 - சில்வெஸ்ரர் ஸ்ரலோன், அமெரிக்கத் திரைப்பட நடிகர்
1980 - பாவ் கசோல், எசுப்பானிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1893 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1850)
1991 - என். ஆர். சின்னராசா, ஈழத்தின் தவில் மேதை (பி. 1934)
2002 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)
2005 - கிளோட் சைமன், நோபல் பரிசு பெற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1913)
சிறப்பு நாள்
மலாவி - விடுதலை நாள் (1964)
மலாவி - குடியரசு நாள் (1966)

கொமொரோஸ் - விடுதலை நாள் (1975)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக