ஜூலை 12 (July 12)
சூலை 12 (July 12) கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1641 - போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும்
இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள்
போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.
1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள்
அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.
1799 - ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
1806 - 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில்
இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1892 - மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று
பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1898 - செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1918 - ஜப்பானின் "கவாச்சி" என்ற
போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.
1932 - நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக்
கொண்டது.
1975 - சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1979 - கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை
பெற்றது.
1993 - ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா
இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில்
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
2007 - வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர்
வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
பிறப்புகள்
கிமு 100 - ஜூலியஸ் சீசர், ரோமானியத் தலைவன்
1854 - ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஒளிப்படச்சுருளைக்
கண்டுபிடித்தவர் (இ. 1932)
1904 - பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற
சிலிக் கவிஞர் (இ. 1973)
இறப்புகள்
1536 - எராஸ்முஸ், டச்சு எழுத்தாளர், மெய்யியலாளர், (பி. 1466)
2006 - உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த
பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
2012 - மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் (பி. பெப்ரவரி 3 1930)
சிறப்பு நாள்
கிரிபட்டி- விடுதலை
நாள் (1979).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக