வியாழன், 30 மார்ச், 2017

ஏப்ரல் 1 ( April 1 )

ஏப்ரல் 1 ( April 1 )

ஏப்ரல் 1 ( April 1 ) கிரிகோரியன் ஆண்டின் 91 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 92 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1793 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த
நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
1826 - சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1873 - அட்லாண்டிக் என்ற
பிரித்தானியாவின் நீராவிக் கப்பல்
கனடாவில் நோவா ஸ்கோஷேயில் மூழ்கியதில் 547 கொல்லப்பட்டனர்.
1891 - சிக்காகோவில் றிக்லி நிறுவனம் ( Wrigley Company ) ஆரம்பிக்கப்பட்டது.
1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.
1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1937 - யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1939 - எசுபானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் : ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின்
ஒக்கிநாவா தீவுகளில் இறங்கினர்.
1946 - அலூஷன் தீவுகளில் நிகழ்ந்த 7.8 அளவு நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் கொல்லப்பட்டனர்.
1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.
1948 - பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
1949 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.
1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ் , Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
1979 - ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர்
இஸ்லாமியக் குடியரசாகியது.
1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
2001 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
2001 - நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.
2006 - ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1815 - ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் ,
ஜேர்மனிய அரசியலாளர் (இ. 1898 )
1865 - ரிச்சார்ட் சிக்மோண்டி , நோபல் பரிசு பெற்றவர் (இ. 1929 )
1875 - எட்கார் வாலஸ் , ஆங்கில எழுத்தாளர் (இ. 1932 )
1878 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958 )
1919 - ஜோசப் மறி , நோபல் பரிசு பெற்றவர்
1929 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011 )
1933 - குளோட் கொஹென்-டனூட்ஜி ,
நோபல் பரிசு பெற்றவர்
1940 - வங்காரி மாதாய் , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1981 - ஜெயஸ்ரீமகேந்திரன் ,எழுததாளர் .

இறப்புகள்

1960 - துங்கு அப்துல் ரகுமான்,
மலேசியாவின் மன்னர் (பி. 1895 )
1968 - லேவ் லண்டாவு, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)
1976 - மக்ஸ் ஏர்ண்ஸ்ட் , ஜெர்மனிய ஓவியர் (பி. 1891 )
2007 - தி. வே. கோபாலையர் , தமிழறிஞர் (பி. 1926 )

சிறப்பு நாள்

ஏப்ரல் முட்டாள்கள் நாள் .

மலேசிய தொலைக்காட்சி வானொலி நிலையம் தோற்றுவிக்கப்பட்ட நாள்

மார்ச் 31 ( March 31 )

மார்ச் 31 ( March 31 )

மார்ச் 31 ( March 31 ) கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1866 - சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885 - இலங்கையில் தமிழ் , சிங்கள,
இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.
1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1909 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை
சேர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 - ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து
அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1931 - நிக்கரகுவாவின் தலைநகரமான
மனாகுவாவில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை
பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1951 - யூனிவாக் 1 என்ற முதலாவது
ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 - திபெத்தின் 14வது தலாய் லாமா , டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து
இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.
1966 - சோவியத்தின் லூனா 10 விண்கலம்
சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 - 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1
புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1979 - கடைசி பிரித்தானியப் படையினர்
மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.
1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.
2007 - முதலாவது புவி மணி நிகழ்வு
சிட்னியில் இடம்பெற்றது.

பிறப்புகள்

1504 – குரு அங்கது தேவ் , சீக்கிய குரு (இ. 1552 )
1596 – ரெனே டேக்கார்ட் , பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650 )
1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750 )
1732 – ஜோசப் ஹேடன் , ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809 )
1865 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (இ. 1887 )
1884 – அதிரியான் வான் மானன் , டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1946 )
1890 – வில்லியம் லாரன்ஸ் பிராக் , நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1971 )
1898 – சா. ஜே. வே. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977 )
1908 – பிலிப் சைல்ட்சு கீனான் , அமெரிக்க வானியலாளர் (இ. 2000 )
1912 – ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர், இலங்கை அரசியல்வாதி
1914 – ஒக்டாவியோ பாஸ் , நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (இ. 1998 )
1928 – இராம. அரங்கண்ணல் , தமிழக எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி
1934 – கமலா தாஸ், மலையாள கவிஞர் (இ.
2009 )
1938 – சீலா தீக்சித் , கேரளத்தின் 22வது
ஆளுநர்
1948 – ஆல் கோர், அமெரிக்காவின் 45வது
துணை அரசுத்தலைவர் , நோபல் பரிசு பெற்றவர்
1950 – ஹல்தர் நாக் , இந்தியக் கவிஞர்
1962 – ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

இறப்புகள்

1751 – பிரெடரிக், வேல்சு இளவரசர் (பி.
1707
1861 – என்றி மார்ட்டின் , ஈழத் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் போதகர்
1917 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்,
நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. 1854 )
1965 – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் , தமிழகத் தமிழறிஞர் (பி.
1904 )
1972 – மீனாகுமாரி , இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1932 )
1980 – ஜெசி ஓவென்ஸ் , அமெரிக்க தடகள வீரர் (பி. 1913 )
1981 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கை அரசியல்வாதி (பி. 1924 )
1995 – செலெனா, அமெரிக்கப் பாடகி (பி.
1971 )
1997 – இலைமன் சுட்டிராங் சுபிட்சர் , அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914 )

சிறப்பு நாள்

விடுதலை நாள் ( மால்ட்டா )

புதன், 29 மார்ச், 2017

மார்ச் 30 ( March 30 )

மார்ச் 30 ( March 30 )

மார்ச் 30 ( March 30 ) கிரிகோரியன் ஆண்டின் 89 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 90 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து
யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1814 - நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர்.
1822 - ஐக்கிய அமெரிக்காவில்
புளோரிடா உருவாக்கப்பட்டது.
1831 - யாழ்ப்பாணம் , மானிப்பாயில்
அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
1842 - அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1851 - ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1858 - அழிப்பானுடன் கூடிய
எழுதுகோலுக்கான காப்புரிமம்
ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
1867 - அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு , 2 சதம் /ஏக்கர் ($4.19/ கிமீ²),
ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார்.
1945 - இரண்டாம் உலகப் போர் : சோவியத் படைகள் ஆஸ்திரியாவினுள் நுழைந்து
வியன்னா நகரைக் கைப்பற்றினர்.
1949 - ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரெய்க்ஜாவிக் நகரில் கலவரம் இடம்பெற்றது.
1965 - வியட்நாம் போர் : சாய்கோன் நகரில்
அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால்
தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1981 - அதிபர் றொனால்ட் றேகன்
வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.

பிறப்புகள்

1432 – இரண்டாம் முகமது , உதுமானிய சுல்தான் (இ. 1481 )
1566 – கார்லோ கேசுவால்தோ , இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1613 )
1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில்
நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761 )
1746 – பிரான்சிஸ்கோ கோயா , எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (இ. 1828 )
1853 – வின்சென்ட் வான் கோ , டச்சு-பிரான்சிய ஓவியர் (இ. 1890 )
1861 – சுவாமி யோகானந்தர் , சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1899 )
1889 – க. சொர்ணலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 1982 )
1894 – நிக்கொலாய் பரபாசொவ் , சோவியத், உருசிய வானியலாளர் (இ. 1971 )
1908 – தேவிகா ராணி , இந்தியத் திரைப்பட நடிகை (இ. 1994 )
1925 – தி. க. சிவசங்கரன், தமிழக மார்க்சியத் திறனாய்வாளர் (இ. 2014 )
1930 – கே. ஆர். சோமசுந்தரம் , மலேசிய-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்,
1945 – எரிக் கிளாப்டன் , ஆங்கிலேய இசைக்கலைஞர், பாடகர்

இறப்புகள்

1664 – குரு அர் கிருசன் , சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குரு (பி. 1656 )
1951 – நா. பொன்னையா , ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (பி. 1892 )
2005 – பிரெட் கோரெமாட்சு , அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1919 )
2005 – ஒ. வே. விஜயன் , மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930 )

செவ்வாய், 28 மார்ச், 2017

மார்ச் 29 ( March 29 )

மார்ச் 29 ( March 29 )

மார்ச் 29 ( March 29 ) கிரிகோரியன் ஆண்டின் 88 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1632 - கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.
1792 - 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட
சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான்.
1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான
சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர்
ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.
1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.
1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய்
பிரித்தானிய ஆட்சிக்கெதிராக
கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
1867 - கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை
பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
1879 - ஆங்கிலோ-சூலு போர் :
தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000
சூலுக்களை வென்றனர்.
1886 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
1945 - இரண்டாம் உலகப் போர் : வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக
இங்கிலாந்தைத் தாக்கியது.
1971 - மை லாய் படுகொலைகள்:
அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
1973 - வியட்நாம் போர் : அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம்
புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
2004 - பல்கேரியா , எஸ்தோனியா ,
லாத்வியா , லித்துவேனியா,
ருமேனியா , சிலவாக்கியா,
சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.
2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

பிறப்புகள்.

1869 – எட்வின் லூட்டியன்சு , பிரித்தானிய கட்டிடக் கலைஞர் (இ. 1944 )
1885 – பா. தாவூத் ஷா , தமிழக இதழாசிரியர், எழுத்தாளர்; சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர் (இ.
1969 )
1918 – சாம் வோல்ற்றன் , வோல் மார்ட்டை நிறுவிய அமெரிக்கத் தொழிலதிபர் (இ.
1992 )
1930 – அனெரூட் ஜக்நாத், மொரீசியசின் 4வது குடியரசுத் தலைவர்
1946 – ராபர்ட் ஷில்லர் , அமெரிக்க பொருளாதார வல்லுனர், எழுத்தாளர்.

இறப்புகள்

கிமு 87 – ஆனின் பேரரசர் வு , சீனப் பேரரச்ர் (பி. கிமு 156 )
1629 – இரண்டாம் ஜேகப் டி கெயின் , டச்சு ஓவியர் (பி. 1565 )
1891 – யோர்ச் சோரா , பிரான்சிய ஓவியர் (பி. 1859 )
1909 – டபிள்யூ. ஜி. ரொக்வூட் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1843 )
1971 – பாலூர் து. கண்ணப்பர் , தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், உரையாசிரியர் (பி. 1908 )
1977 – யூஜீன் வூசுட்டர், ஆத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (பி.
1898 )
1985 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக் , அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1897 )
2000 – சி. கே. சரஸ்வதி , தமிழ்த் திரைப்பட நடிகை
2007 – சுப்புடு , தமிழக இசை, நடன விமர்சகர்.

சிறப்பு நாள்

1947 கிளர்ச்சி நினைவு நாள் ( மடகாசுகர் )
இளைஞர் நாள் ( சீனக் குடியரசு )

திங்கள், 27 மார்ச், 2017

மார்ச் 28 ( March 28 )

மார்ச் 28 ( March 28 )

மார்ச் 28 ( March 28 ) கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
193 - ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான்.
845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.
1802 - ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற
சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809 - மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது.
1879 - ஆங்கிலோ-சூலு போர் :
பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1930 - கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1939 - ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.
1979 ஐக்கிய அமெரிக்காவில்
பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
1994 - தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில்
ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
2005 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு
நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

623 – முதலாம் மர்வான் , உமையா காலிபா (இ. 685 )
661 – இரண்டாம் முஆவியா , உமையா காலிபா (இ. 684 )
1483 – ராபியேல் சான்சியோ , இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520 )
1515 – அவிலாவின் புனித தெரேசா , எசுப்பானியப் புனிதர் (இ. 1582 )
1801 – கார்ல் பிரீட்ரிக் நோர் , உருசிய வானியலாளர் (இ. 1883]])
1863 – சில்வா லெவி , பிரான்சிய கீழைத்தேசவியலாளர், இந்தியவியலாளர் (இ. 1935 )
1868 – மாக்சிம் கார்க்கி , உருசியப் புதின, நாடக எழுத்தாளர் (இ. 1936 )
1874 – சாபுர்சி சக்லத்வாலா , இந்திய-பிரித்தானிய அரசியல்வாதி (இ. 1936 )
1899 – ஹன்டி பேரின்பநாயகம் , இலங்கை சமூக சேவையாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1977 )
1904 – வி. நாகையா , தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் (இ. 1973 )
1919 – டி. கே. பட்டம்மாள் , தமிழக கருநாடக இசைப் பாடகி (இ. 2009 )
1922 – பா. நேமிநாதன் , இலங்கை அரசியல்வாதி
1933 – மாஸ்டர் சிவலிங்கம், ஈழத்தின் சிறுவர் எழுத்தாளர், கதைசொல்லி
1936 – மாரியோ பார்க்காசு யோசா ,
நோபல் பரிசு பெற்ற பெரு எழுத்தாளர்
1940 – எஸ். ஜெபநேசன் , தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்ட ஆயர்
1942 – டானியல் டெனற் , அமெரிக்க மெய்யியலாளர்
1943 – தர்மசேனா பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர்
1945 – ரொட்ரிகோ துதெர்த்தெ , பிலிப்பீன்சின் 16வது அரசுத்தலைவர்
1969 – பிரெட் ரட்னர் , அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
1970 – வின்ஸ் வுகஹன் , அமெரிக்க நடிகர்
1982 – சோனியா அகர்வால் , இந்தியத் திரைப்பட நடிகை
1985 – ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா , சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர்
1986 – லேடி காகா , அமெரிக்கப் பாடகி, நடிகை.

இறப்புகள்

1552 – குரு அங்கது தேவ் , சீக்கிய குரு (பி. 1504 )
1584 – உருசியாவின் நான்காம் இவான் , உருசியப் பேரரசர் (பி. 1530 )
1899 – சுவாமி யோகானந்தர் , இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1861 )
1941 – வெர்ஜீனியா வூல்ஃப் , ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1882 )
1943 – சத்தியமூர்த்தி, இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1887 )
1944 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர் (பி. 1884 )
1947 – இவான் இவானோவிச் செகால்கின் , உருசியக் கணிதவியலாளர் (பி. 1869]])
1969 – டுவைட் டி. ஐசனாவர் , அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (பி. 1890 )
1971 – பரலி சு. நெல்லையப்பர் , தமிழக எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1889 )
1991 – எச். வேங்கடராமன் , தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1919 )
2006 – வேதாத்திரி மகரிசி , இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1911 )

சிறப்பு நாள்.

ஆசிரியர் நாள் ( செக் குடியரசு ,
சிலோவாக்கியா )

ஞாயிறு, 26 மார்ச், 2017

மார்ச் 27 ( March 27 )

மார்ச் 27 ( March 27 )

மார்ச் 27 ( March 27 ) கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1513 - நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் ( புளோரிடா ) கண்ணுற்றார்.
1625 - முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து ,
ஸ்கொட்லாந்து , மற்றும் அயர்லந்து மன்னராக முடி சூடினார். அத்துடன்
பிரான்ஸ் மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.
1854 - கிரிமியாப் போர் : ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது.
1890 - கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
1918 - மல்தோவா , பெசராபியா ஆகியன
ருமேனியாவுடன் இணைந்தன.
1941 - இரண்டாம் உலகப் போர் :
யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
1958 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார்.
1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம்
அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம்
செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1970 - கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
1977 - இரண்டு பயணிகள் விமானங்கள்
கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.
1980 - நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.
1994 - அலபாமாவில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

347 – ஜெரோம் , உரோமை ஆயர், இறையியலாளர், மொழிபெயர்ப்பாளர் (இ.
420 )
1845 – வில்லெம் ரோண்ட்கன் , நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1923 )
1886 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ , செருமானிய-அமெரிகக் கட்டிடக் கலைஞர் (இ. 1969 )
1892 – சுவாமி விபுலாநந்தர் , யாழ் நூல் எழுதிய ஈழத்து எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர் (இ. 1947 )
1910 – அய் ஜிங், சீனக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996 )
1948 – எம். கே. முருகானந்தன், ஈழத்து எழுத்தாளர்
1955 – மாரியானோ ரஜோய் , எசுப்பானியாவின் பிரதமர்
1955 – முல்லையூரான் , ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006 )
1963 – குவெண்டின் டேரண்டினோ , அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
1985 – ராம் சரண் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

இறப்புகள்

1378 – பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1336 )
1898 – சையது அகமது கான் , இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1817 )
1968 – யூரி ககாரின் , உருசிய விண்வெளி வீரர் (பி. 1934 )

சிறப்பு நாள்

உலக திரையரங்கு நாள்.