மார்ச் 19 ( March 19 )
மார்ச் 19 ( March 19 ) கிரிகோரியன் ஆண்டின் 78 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 79 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1279 - யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன்
சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.
1861 - நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.
1915 - புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
1918 - நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர் : நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1982 - போக்லாந்து போர் :
ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை
அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
2002 - ஐக்கிய அமெரிக்காவின்
ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
2004 - தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.
பிறப்புகள்
1871 - இசுக்கோஃபீல்ட் ஹை , ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1921 )
1906 - அடோல்வ் ஏச்மென் , செருமானிய
சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962 )
1922 - ஹிரூ ஒனோடா , சப்பானிய இராணுவ வீரர் (இ. 2014 )
1928 - விக்கிரமன் , பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015 )
1943 - மார்யோ மோன்டி , இத்தாலிய அரசியல்வாதி, இத்தாலியப் பிரதமர்
1948 - வின்சென்ட் வேன் டெர் பைல் , தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1979 - ஹேதோ துர்க்கொக்லு , துருக்கிய கூடைப்பந்து வீரர்
1984 - தனுஸ்ரீ தத்தா , இந்திய நடிகை
இறப்புக்கள்
1406 - இப்னு கல்தூன் , துனீசிய வரலாற்றாளர் (பி. 1332 )
1950 - எட்கர் ரைசு பர்ரோசு , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1875 )
1982 - ஆச்சார்ய கிருபளானி , இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888 )
1998 - எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட், இந்திய அரசியல்வாதி, 1வது கேரள முதல்வர் (பி. 1909 )
2008 - ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917 )
2008 - ரகுவரன் , தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக