திங்கள், 13 மார்ச், 2017

மார்ச் 15 (March 15)

மார்ச் 15 (March 15)

மார்ச் 15 (March 15) கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
கிமு 44 - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.
933 - பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் ஜெர்மானிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
1493 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.
1776 - தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.
1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
1815 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.
1848 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
1877 - முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ணில் ஆரம்பமானது.
1917 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் த்சார் மன்னன் முடி துறந்தான்.
1922 - எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானான்.
1943 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியப் படைகள் உக்ரேனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.
1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.
1970 - எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.
1984 - விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.
1985 - முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.
1988 - ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.
1990 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.
1991 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
2004 - சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.
2007 - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1767 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1845)
1830 - பவுல் ஹெயிஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் (இ. 1914)
1854 - எமில் பேஹ்ரிங்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1917)
1915 - அழகு சுப்பிரமணியம் ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
1920 - டொன்னல் தோமஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1930 - அல்ஃவியோரவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர்

இறப்புக்கள்

கிமு 44 - யூலியஸ் சீசர், ரோமன் குடியரசின் மன்னன் (பி. கிமு 100)
1897 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், கணிதவியலர் (பி. 1814)
1962 - ஆர்தர் கொம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1892)
2004 - ஜோன் போப்பில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1925).

சிறப்பு நாள்

ஜப்பான் - ஒவுனென் மட்சுறி, புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா.
உலக நுகர்வோர் நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக