மார்ச் 20 ( March 20 )
மார்ச் 20 ( March 20 ) கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 44 - ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
1616 - சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார்.
1739 - நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
1760 - பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும்
தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
1815 - எல்பா தீவில் இருந்து தப்பிய
நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.
1861 - மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
1934 - ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.
1942 - போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1942 - மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000
யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.
1948 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1956 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
1974 - லண்டன் , பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1988 - எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
1995 - டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால்
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
கிமு 43 – ஆவிட் , உரோமைப் புலவர் (இ.
17 )
1615 – தாரா சிக்கோ , முகலாய இளவரசர் (இ. 1659 )
1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832 )
1828 – ஹென்ரிக் இப்சன் , நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906 )
1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (இ. 1988 )
1921 – பி. சி. அலெக்சாண்டர் , இந்திய அரசியல்வாதி (இ. 2011 )
1940 – புலவர் அரசு , தமிழக எழுத்தாளர்
1940 – சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்
1942 – காமினி திசாநாயக்கா , இலங்கை அரசியல்வாதி (இ. 1994 )
1944 – எர்வின் நேயெர் , நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்
1957 – இசுப்பைக் லீ , அமெரிக்க நடிகர், இயக்குநர்
1966 – ஆல்கா யாக்னிக் , இந்தியப் பாடகி
1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை
இறப்புகள்
1351 – முகம்மது பின் துக்ளக் , தில்லி சுல்தான் (பி. 1300 )
1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642 )
1858 – ராணி அவந்திபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை
1925 – கர்சன் பிரபு , பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859 )
1977 – சார்ல்ஸ் லிட்டில்டன் , நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909 )
2008 – சோபன் பாபு , தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937 )
2010 – கிரிஜா பிரசாத் கொய்ராலா , நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924 )
2013 – சில்லூர் இரகுமான் , வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929 )
2014 – குஷ்வந்த் சிங் , இந்திய எழுத்தாளர் (பி. 1915 )
2015 – மால்கம் பிரேசர் , ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி.
1930 )
சிறப்பு நாள்
பன்னாட்டு சோதிட நாள்
உலகக் கதை படிக்கும் நாள்
விடுதலை நாள் ( தூனிசியா , 1956)
பன்னாட்டு பிரான்கோபோனி நாள்
உலக சிட்டுக்குருவிகள் நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக