வியாழன், 16 மார்ச், 2017

மார்ச் 16 ( March 16 )

மார்ச் 16 ( March 16 )

மார்ச் 16 ( March 16 ) கிரிகோரியன் ஆண்டின் 75 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 76 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 290 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 597 - பாபிலோனியர்கள்
ஜெருசலேமைக் கைப்பற்றினர்.
1190 - சிலுவைப் படையினர் (Crusaders)
யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
1521 - மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.
1792 - சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.
1926 - முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும்
ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.
1939 - பிராக் அரண்மனையில் இருந்து
ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை
ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
1945 - இரண்டாம் உலகப் போர் : இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின்
வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
1962 - மேற்கு பசிபிக் பெருங்கடலில்
அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
1963 - பாலியில் ஆகூங்க் மலை
நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
1966 - ஜெமினி 8 , நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.
1968 - வியட்நாம் போர் : மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள்
அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1969 - வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
1985 - அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4 ,
1991 இல் விடுதலை ஆனார்.
1988 - ஈராக்கில் குருதிய நகரான
ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2006 - மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

பிறப்புகள்

1693 – மல்கர் ராவ் ஓல்கர் , மராட்டியப் பேரரசர் (இ. 1766 )
1750 – கரோலின் எர்ழ்செல் , செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848 )
1751 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ.
1836 )
1774 – மேத்தியூ பிலிண்டர்சு , ஆங்கிலேய நிலப்படவியலாளர் (இ. 1814 )
1789 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1854 )
1799 – அன்னா அட்கின்சு , ஆங்கிலேய தாவரவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1871 )
1839 – சல்லி புருதோம் , நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (இ. 1907 )
1859 – அலெக்சாண்டர் பப்போவ் , உருசிய இயற்பியலாளர் (இ. 1906 )
1888 – எம். ஆர். சேதுரத்தினம் , தமிழக அரசியல்வாதி
1901 – பொட்டி சிறீராமுலு , இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ.
1952 )
1910 – இப்திகார் அலி கான் படோடி , இந்திய-ஆங்கிலேய துடுப்பாளர், 8வது
பட்டோடி நவாப் (இ. 1952 )
1916 – சுடோமு யாமகுச்சி , சப்பானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2010 )
1918 – எஸ். ஏ. நடராஜன் , தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
1926 – ஜெர்ரி லுவிஸ் , அமெரிக்க நடிகர்
1927 – விளாடிமிர் கொமரோவ் , உருசிய விண்வெளி வீரர் (இ. 1967 )
1929 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர் (இ. 1993 )
1929 – இரா. திருமுருகன் , தமிழகத் தமிழறிஞர்
1940 – இராஜேஸ்வரி சண்முகம் , இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (இ. 2012 )
1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன் , அமெரிக்கக் கணினி அறிவியலாளர்
1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன் , கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.
1954 – அருண் விஜயராணி , ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2015 )
1959 – இயென்சு சுடோல்ட்டென்பர்க் , நோர்வேயின் 47வது பிரதமர்
1959 – விஜயதாச ராஜபக்ச , இலங்கை அரசியல்வாதி.

இறப்புகள்

1940 – செல்மா லோவிசா லேகர்லாவ் ,
நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1858 )
1974 – கோ. சாரங்கபாணி , தமிழக ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் (பி. 1903 )
1978 – மணியம்மையார் , திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர்,
பெரியாரின் 2வது மனைவி (பி. 1920 )
1989 – அழ. வள்ளியப்பா , தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞர் (பி. 1922
2003 – இரேச்சல் கோரீ, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1979 )
2008 – அனுரா பண்டாரநாயக்கா , இலங்கை அரசியல்வாதி (பி. 1949 )
2014 – அமலெந்து டே , இந்திய வரலாற்றாசிரியர் (பி. 1929 )
2016 – அலி அகமது உசேன் கான் , இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1939 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக