வியாழன், 16 மார்ச், 2017

மார்ச் 17 ( March 17 )

மார்ச் 17 ( March 17 )

மார்ச் 17 ( March 17 ) கிரிகோரியன் ஆண்டின் 76 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1776 - அமெரிக்கப் புரட்சி :
பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின்
பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.
1805 - நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு ,
இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
1845 - இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.
1861 - இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.
1886 - மிசிசிப்பியில் 20 ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
1891 - பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.
1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி
சென்னை வந்தார்.
1942 - மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு
போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1950 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது
தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 - ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1
செய்மதியை ஏவியது.
1959 - டென்சின் கியாட்சோ , 14வது
தலாய் லாமா , திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
1966 - ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின்
ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.
1969 - கோல்டா மெயர் ( Golda Meir)
இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.
1970 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
1988 - கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1988 - எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் (EPLF)
எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1992 - ஆர்ஜெண்டீனாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
1996 - இலங்கை அணி
ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து
துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
2000 - உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1834 – காட்லீப் டைம்லர் , செருமானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1900 )
1919 – நாட் கிங் கோல் , அமெரிக்கப் பாடகர் (இ. 1965 )
1920 – சேக் முஜிபுர் ரகுமான் , வங்காள தேசத்தின் 1வது அரசுத்தலைவர் ரி. 1975 )
1926 – கே. சங்கர் , தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2006 )
1939 – பங்காரு லட்சுமண் , இந்திய அரசியல்வாதி (இ. 2014 )
1940 – எம். எச். எம். ஷம்ஸ் , இலங்கை ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் (இ.
2002 )
1955 – சிந்தியா மெக்கினி , அமெரிக்க அரசியல்வாதி
1962 – கல்பனா சாவ்லா , இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை (இ.
2003 )
1964 – ராப் லோ , அமெரிக்க நடிகர்
1990 – சாய்னா நேவால் , இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை

இறப்புகள்

1782 – டேனியல் பெர்னூலி , டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700 )
1853 – கிறிஸ்டியன் டாப்ளர் , ஆத்திரிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1803 )
1956 – ஐரீன் ஜோலியட் கியூரி , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1897 )
1957 – ரமன் மக்சேசே , பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (பி. 1907 )
2011 – கியார்கிய் ஏ.கிராசின்சுகி , உருசிய வானியலாளர் (பி. 1939 )

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் , ( வங்காளதேசம்)
தேசிய முவாய் போர நாள் ( தாய்லாந்து )
புனித பேட்ரிக்கின் நாள் ( அயர்லாந்து )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக