திங்கள், 13 மார்ச், 2017

மார்ச் 14 (March 14)

மார்ச் 14 (March 14)

மார்ச் 14 (March 14) கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1489 - சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.
1794 - எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1898 - டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1926 - கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
1939 - செக்கோசிலோவாக்கியாவின் பொகேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.
1951 - கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
1978 - இசுரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.
1979 - சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.
1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.
1995 - ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.
1998 - தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

பிறப்புகள்
1835 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)
1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)
1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)
1908 – சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1918 – கே. வி. மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001),
1958 – இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்
1960 – எய்தி ஏம்மல், அமெரிக்க வானியலாளர்
1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்
1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1986 – ஜேமி பெல், ஆங்கிலேய நடிகர்.

இறப்புகள்

1883 – காரல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)
1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)
1973 – அவார்டு அயிக்கன், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)
1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)
2010 – விந்தா கரண்டிகர், மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918).

சிறப்பு நாள்

மாவீரர் நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்)
தாய்மொழி நாள் (எசுத்தோனியா)
பை நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக