வெள்ளி, 10 மார்ச், 2017

மார்ச் 13 (March 13)

மார்ச் 13 (March 13) 

மார்ச் 13 (March 13) கிரிகோரியன் ஆண்டின் 72 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 73 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 293 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1639 - ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.
1781 - வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.
1811 - பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
1881 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).
1900 - பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.
1908 - நெல்லை க்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.
1921 - மொங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
1943 - ஜேர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
1954 - வியட்நாம் போர்: வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
1957 - கியூபா அதிபர் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1969 - அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1979 - கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1996 - ஸ்கொட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
1997 - அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.
2003 - இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகாள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
2007 - 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.

பிறப்புக்கள்

1733 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர் (இ. 1804)
1839 - ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
1843 - டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (இ. 1909)

இறப்புக்கள்

1936 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (பி. 1876)
1975 - ஐவோ ஆண்டிரிக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக