மார்ச் 10 (March 10)
மார்ச் 10 (March 10) கிரிகோரியன் ஆண்டின் 69 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1535 - பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.
1629 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1735 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.
1801 - பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1804 - லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1814 - பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
1893 - ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
1902 - போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியப் படைகளுடனான கடைசிச் சமரில் வெற்றி பெற்றனர். 200 பிரித்தானியப் படைகள் கைப்பற்றப்பட்டனர்.
1902 - அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1902 - துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.
1906 - வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1911 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.
1933 - கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.
1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1952 - கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.
1959 - திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை சீன இராணுவத்தினரால் செய்யப்பட்டனர்.
1970 - வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.
1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.
1990 - ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் பலி.
பிறப்புக்கள்
1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசியத்தந்தை, (இ. 1995)
1933 - பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய உணர்வாளர்
1957 - ஒசாமா பின் லாடன், இசுலாமியப் போராளி
இறப்புக்கள்
1966 - ஃபிரிட்ஸ் சேர்னிக்கே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)
2001 - சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)
2006 - சி. புஷ்பராஜா, ஈழத்தில் மாணவர், இளைஞர் பேரவைகளில் முக்கிய பங்காற்றிய போராளி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக