வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஜனவரி 1 (January 1)

ஜனவரி 1 (January 1)

ஜனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    கிமு 45 - யூலியன் நாட்காட்டி முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
    630 - முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார்.
    1502 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தான்.
    1600 - ஸ்கொட்லாந்து ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
    1700 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
    1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
    1772 - 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
    1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
    1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
    1804 - எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
    1806 - பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.
    1808 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
    1833 - ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
    1858 - இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
    1861 - போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான்.
    1866 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
    1867 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் "சின்சினாட்டி" நகருக்கும் கென்டக்கியின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
    1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.
    1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.
    1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
    1886 - பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
    1890 - எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
    1893 - ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
    1896 - இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
    1899 - கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது.
    1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
    1905 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1906 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    1911 - வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
    1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
    1919 - ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
    1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
    1927 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
    1927 - துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927ஆக மாற்றப்பட்டது.
    1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.
    1935 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
    1945 - பெல்ஜியத்தின் செனோன் நகரில் 30 ஜேர்மனிய போர்க்கைதிகள் ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
    1947 - இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஜேர்மனியின் பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.
    1948 - பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
    1948 - பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா வழங்க முடியாதென அறிவித்தது.
    1949 - ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
    1956 - சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1958 - இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
    1958 - ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
    1959 - கியூபாவின் அதிபர் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா ஃபிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1960 - கமரூன் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
    1962 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1971 - ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
    1978 - ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.
    1981 - பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
    1983 - அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக (TCP/IP) மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.
    1984 - புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1993 - செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
    1995 - உலக வணிக அமைப்பு உருவாக்கம்.
    1999 - யூரோ நாணயம் அறிமுகம்.
    2008 - கொழும்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் [[இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்

    1894 - சத்தியேந்திர நாத் போசு, இந்தியக் கணிதவியலர் (இ. 1974)
    1902 - பஸ்டர் நூபன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1977)
    1914 - நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ. 1944)
    1919 - ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)
    1925 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)
    1942 - அலசான் வட்டாரா, ஐவோரிய அரசியல்வாதி
    1943 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
    1944 - உமர் அல்-பஷீர், சூடானிய அரசுத்தலைவர்
    1951 - நானா படேகர், இந்திய நடிகர்
    1952 - சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் மன்னர்
    1952 - ஷாஜி என். கருண், இந்தியத் திரைப்பட இயக்குநர்
    1966 - மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)
    1975 - சோனாலி பண்டர், இந்திய நடிகை
    1978 - பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி
    1978 - வித்யா பாலன், இந்திய நடிகை
    1984 - அலோக் கபாலி, வங்காளதேச துடுப்பாளர்
    1986 - சுங்மின், தென்கொரிய நடிகர்

இறப்புகள்

    1894 - ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1857)
    1901 - சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832)
    1955 - சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய அறிவியலாளர் (பி. 1894)
    1992 - கிரேசு ஹாப்பர், அமெரிக்க நிரலாளர் (பி. 1906)
    2008 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1960)

சிறப்பு நாள்

    புத்தாண்டு நாள் (கிரெகொரியின் நாட்காட்டி)
    விடுதலை நாள்:
        கியூபா (1899)
        எயிட்டி (1804)
        சூடான் (1956)
        கமரூன் (1960)
        புரூணை (1984)
        செக் குடியரசு (1993)
        சிலோவாக்கியா (1993)
        தாய்வான் (1912)
    உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)
    உலகக் குடும்ப நாள் (பன்னாட்டு)
    குவான்சா கடைசி நாள் (அமெரிக்க ஐக்கிய நாடு)

வியாழன், 29 டிசம்பர், 2016

டிசம்பர் 31 (December 31)

டிசம்பர் 31 (December 31)
 
டிசம்பர் 31 (December 31) கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.

நிகழ்வுகள்

    1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
    1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
    1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
    1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
    1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
    1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
    1881 - இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
    1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
    1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
    1944 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
    1946 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
    1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
    1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
    1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
    1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
    1986 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் உணவுசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தினால் 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.
    1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
    1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.
    1994 - பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
    1999 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
    1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
    1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
    2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
    2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.

பிறப்புகள்

    1491 - ஜாக் கார்ட்டியே, பிரெஞ்சு நாடுகாண் பயணி (இ. 1557)
    1880 - ஜோர்ஜ் மார்ஷல், நோபல் விருது பெற்ற அமெரிக்கர் (இ. 1959)
    1929 - ச. வே. சுப்பிரமணியன், தமிழறிஞர்
    1937 - அவ்ராம் ஹேர்ஷ்கோ, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
    1955 - தாவூத் இப்ராகிம், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி

இறப்புகள்

    1905 – அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)
    2001 - தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)

டிசம்பர் 30 (December 30)

 டிசம்பர் 30 (December 30)
டிசம்பர் 30 (December 30) கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது

நிகழ்வுகள்

1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
1862 - வட கரொலைனாவில் ஐக்கிய அமெரிக்காவின் மொனிட்டர் என்ற கப்பல் மூழ்கியது.
1870 - ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி ஜோசே ரிசால் மணிலாவில் ஸ்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
1903 - சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் 600 பேர் இறந்தனர்.
1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.
1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
1996 - அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
2000 - பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2004 - ஆர்ஜெண்டீனாவின் புவனஸ் அயரெஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
2006 - நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.
2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

பிறப்புகள்

1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)
1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)
1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்
1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)
1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)
1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)
1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)
1968 - ட்றிகுவே லீ, நோர்வேயின் அரசியல்வாதி (பி. 1896)
1988 - இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937
2013 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (பி. 1938)

சிறப்பு நாள்[
பிலிப்பீன்ஸ் - ரிசால் நாள் (1896)

செவ்வாய், 27 டிசம்பர், 2016

டிசம்பர் 29 (December 29)

டிசம்பர் 29 (December 29)
டிசம்பர் 29 (December 29) கிரிகோரியன் ஆண்டின் 363 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்
1170 - இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கெட் அவரது தேவாலயத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1690 - இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.
1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.
1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.
1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.
1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.
1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
1940 - இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1972 - புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
1975 - நியூயோர்க் நகர விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.
1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ Yury Romanenko பூமி திரும்பினார்.
1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.
1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
1997 - ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
2001 - பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1709 - எலிசவேத்தா பெட்ரோவ்னா (இ. 1762)
1809 - வில்லியம் கிளாட்ஸ்டோன், ஆங்கிலேய அரசியல்வாதி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)
1904 - குவெம்பு, இந்திய எழுத்தாளர் (இ. 1994)
1910 - ரொனால்ட் கோஸ், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கர் (இ. 2013)
1914 - பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1989)
1937 - மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்
1942 - ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர் (இ. 2012)
1949 - சையத் கிர்மானி, இந்தியத் துடுப்பாட்ட வீரர், நடிகர்
1953 - ஆலன் ரஸ்பிரிட்சர், சிம்பாப்வே ஊடகவியலாளர்
1960 - டேவிட் பூன், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், நடுவர்
1965 - சி. ஜெயசங்கர், ஈழத்து எழுத்தாளர்
1971 - பிறட் ஹொட்ஜ், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1974 - டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை

இறப்புகள்

1170 - தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர் (பி. 1118)
1825 - ஜாக்-லூயி டேவிட், பிரெஞ்சு ஓவியர் (பி. 1748)
1926 - ரெய்னர் மரியா ரில்கே, ஆசுத்திரியக் கவிஞர் (பி. 1875)
2012 - டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், ஊடகவியலாளர் (பி. 1946)
2015 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)

சிறப்பு நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

திங்கள், 26 டிசம்பர், 2016

டிசம்பர் 28 (December 28)

டிசம்பர் 28 (December 28)
டிசம்பர் 28 (December 28) கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்
1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது.
1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
1836 - தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
1846 - அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.
1879 - ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
1908 - இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
1929 - நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
1958 - கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.
1989 - அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999 - இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
2005 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2006 - எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பிறப்புகள்

1932 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
1936 - எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (இ. 2014)
1937 - ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர்
1940 - அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
1944 - கேரி முலிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
1945 - பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001)
1947 - நாஞ்சில் நாடன், எழுத்தாளர்
1954 - டென்செல் வாஷிங்டன், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1994 - கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்

டிசம்பர் 27 (December 27)

டிசம்பர் 27 (December 27)
டிசம்பர் 27 (December 27) கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்
537 - ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1836 - இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் கொல்லப்பட்டனர்.
1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1911 - இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.
1915 - யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் "நகுலேசுவரா நூல்நிலையம்" கீரிமலையில் திறக்கப்பட்டது.
1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
1939 - துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 - 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985 - ரோம் மற்றிம் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997 - வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000 - யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2002 - செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2007 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்
1571 – யோகான்னசு கெப்லர், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1630)
1773 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலேயப் பொறியியலாளர், அரசியல்வாதி (இ. 1857)
1822 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய வேதியியலாளர், நுண்ணுயிரியலாளர் (இ. 1895)
1895 – சர்தார் உஜ்ஜல் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 1983)
1901 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
1913 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்டவர் (இ. 1965)
1945 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (இ. 2013)
1948 – செரார்டு தெபர்டியு, பிரான்சிய-உருசிய நடிகர்
1965 – சல்மான் கான், இந்திய நடிகர்

இறப்புகள்

1834 – சார்லஸ் லாம், ஆங்கிலேயக் கட்டுரையாளர் (பி. 1775)
1914 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1863)
1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1832)
1976 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1909)
1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானித்தானின் 2வது அரசுத்தலைவர் (பி. 1929)
1999 – சாரதாம்பாள், இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் (பி. 1970)
2007 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (பி. 1953)

வெள்ளி, 23 டிசம்பர், 2016

டிசம்பர் 26 (December 26)

டிசம்பர் 26 (December 26) 
டிசம்பர் 26 (December 26) கிரிகோரியன் ஆண்டின் 360 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 361 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஐந்து நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்[

1776 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியர் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
1792 - பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
1793 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.
1811 - வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம்ஸ்மித் இறந்தார்.
1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
1862 - ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
1882 - யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின.
1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1925 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.
1944 - ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
1943 - இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் ஜேர்மனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1948 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1976 - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.
1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
1985 - கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபொசி கொல்லப்பட்டார்.
1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).
1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
2003 - தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

பிறப்புகள்

1791 - சார்ள்ஸ் பாபேஜ், ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1871)
1880 - எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (இ. 1949)
1893 - மா சே துங் சீன மக்கள் குடியரசின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (இ. 1976)
1925 - இரா. நல்லக்கண்ணு, இந்தியப் பொதுவுடமைத் தலைவர்

இறப்புகள்

1530 - ஸாகிருதீன் பாபர், இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவன் (பி. 1483)
1972 - ஹரி ட்ரூமன், 33வது அமெரிக்காவின் 33வது அதிபர் (பி. 1884)
1999 - சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918)
1981 - சாவித்திரி, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகை
1985 - டயான் ஃபாசி, கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)
2006 - ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அதிபர் (பி. 1913)

சிறப்பு நாள்

பொதுநலவாய நாடுகள் - பொக்சிங் நாள்
கேரளா - சபரிமலையில் மண்டல பூஜை
குவான்சா - முதல் நாள் விழா

டிசம்பர் 25 (December 25)

டிசம்பர் 25 (December 25)

டிசம்பர் 25 (December 25) கிரிகோரியன் ஆண்டின் 359 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 360 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஆறு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்
800 - சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.
1000 - ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.
1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1643 - கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரிகப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
1741 - ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
1758 - ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.
1868 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1926 - ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தான். அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானான்.
1932 - சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் ~70,000 பேர் இறந்தனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
1947 - சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
1968 - கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழ்வெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1977 - இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
1989 - ருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 - உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1991 - உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
2003 - மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
2004 - காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.

பிறப்புகள்

1642 - (புதிய கிரெகோரியின் நாட்காட்டியில்: சனவரி 4, 1643) ஐசக் நியூட்டன், ஆங்கில இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (இ. 1727)
1876 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)
1899 - ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (இ. 1957)
1906 - ஏர்ணஸ்ட் ருஸ்கா ஜெர்மானிய இயற்பியலாளர், நோபல் விருதாளர் (இ. 1988)
1918 - அன்வர் சதாத், எகிப்திய தலைவர், நோபல் விருதாளர் (இ. 1981)
1919 - நௌஷாத் அலி, இந்திய இசைக்கலைஞர் (இ. 2006)
1924 - அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் இந்தியப் பிரதமர்
1927 - ராம் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞர்
1949 - நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
1974 - நக்மா, இந்திய நடிகை.

இறப்புகள்

1796 - வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
1931 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
1977 - சார்லி சாப்ளின், ஹாலிவுட் நடிகர் (பி. 1889)
1994 - ஜெயில் சிங், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். (பி. 1916)
2006 - தமிழோவியன், இலங்கையின் மலையகத்தின் மூத்த இலக்கியவாதியும் கவிஞரும்
2006 - ஜேம்ஸ் ப்ரௌன், இசையறிஞர் (பி. 1933)

சிறப்பு நாள்

கிறிஸ்துமஸ் - கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை.
பாகிஸ்தான் - தேசிய விடுமுறை (முகமது அலி ஜின்னா பிறந்த நாளை முன்னிட்டு)

வியாழன், 22 டிசம்பர், 2016

டிசம்பர் 24 (December 24)

டிசம்பர் 24 (December 24) 

டிசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்
1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
1715 - சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
1777 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
1851 - வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
1914 - முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1924 - அல்பேனியா குடியரசாகியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.
1951 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.
1953 - நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
1954 - லாவோஸ் விடுதலை பெற்றது.
1966 - தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
1974 - ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1979 - ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.
1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
2005 - யோசப் பரராஜசிங்கம் படுகொலை: இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1818 - ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கில இயற்பியலாளர் (இ. 1889)
1822 - சார்ல்ஸ் ஹெர்மைட், ஒரு பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1901)
1837 - பவேரியாவின் எலிசபெத், ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசி (இ. 1898)
1881 - வான் ரமோன் ஹிமெனெஸ், எசுப்பானியக் கவிஞர், [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு பெற்றவர் (இ. 1958)
1905 - ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கப் பொறியாளர் (இ. 1976)
1924 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
1944 - ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர்
1957 - ஹமித் கர்சாய், ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்
1959 - அனில் கபூர், இந்திய நடிகர்
1969 - எட் மிலிபாண்ட், பிரித்தானிய அரசியல்வாதி
1971 - ரிக்கி மாட்டின், ஸ்பானியப் பாப் பாடகர்

இறப்புகள்

1524 - வாஸ்கோ ட காமா, போர்த்துக்கீச மாலுமி (பி. 1460)
1950 - பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்
1973 - ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)
1987 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர், திரைப்பட நடிகர் (பி. 1917)
1997 - டோஷிரோ மிபூன், யப்பானிய நடிகர் (பி. 1920)
2002 - வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1926)
2005 - ஜோசப் பரராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் (பி. 1934)
2005 - பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
2008 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1930)

சிறப்பு நாள்

லிபியா - விடுதலை நாள் (1951)

டிசம்பர் 23 ( December 23 )

டிசம்பர் 23 ( December 23 )

கிரிகோரியன்
ஆண்டின் 357 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள்
உள்ளன
நிகழ்வுகள்
1783 - ஜோர்ஜ் வாஷிங்டன்
இராணுவத்தளபதி பதவியில் இருந்து
விலகினார்.
1914 - முதலாம் உலகப் போர்:
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப்
படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின்
சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள்
துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற
சமரில் வெற்றி பெற்றனர்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானிய இராணுவம் வேக் தீவைக்
கைப்பற்றியது.
1947 - முதலாவது டிரான்சிஸ்டர்
பெல் ஆய்வுகூடத்தில்
வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948 - பிரதமர் டோஜோ உட்பட ஏழு
ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு
டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டது.
1954 - முதலாவது மனித சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்
மேற்கொள்ளப்பட்டது.
1958 - டோக்கியோ கோபுரம் , உலகின்
மிகப்பெரிய இரும்பினாலான
கோபுரம், திறக்கப்பட்டது.
1972 - நிக்கராகுவா நாட்டின் தலைநகர்
மனாகுவாவில் இடம்பெற்ற
நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர்
இறந்தனர்.
1972 - தென்னமெரிக்காவில்
ஆண்டீஸ் மலைத்தொடரில்
இடம்பெற்ற விமான விபத்தில் உயிர்
தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர்
காப்பாற்றப்பட்டனர்.
1979 - சோவியத் படையினர்
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக்
கைப்பற்றினர்.
1986 - எங்கும் தரையிறங்காமல் முதன்
முதலில் உலகைச் சுற்றி வந்த
வொயேஜர் விமானம், டிக் ரூட்டன்,
ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன்
கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990 - 88% சிலொவேனிய மக்கள்
யூகொஸ்லாவியாவில் இருந்து
பிரிந்து செல்வதற்கு ஆதரவாக
வாக்களித்தனர்.
2004 - தெற்குப் பெருங்கடலில்
உள்ள மக்குவாரி தீவில் 8.1 அளவு
நிலநடுக்கம் ஏற்பட்டது.
2005 - அசர்பைஜான் விமானம்
புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில்
வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர்
கொல்லப்பட்டனர்.
2005 - சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
பிறப்புகள்
1805 – இரண்டாம் யோசப்பு இசுமித்து ,
அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844 )
1807 – அந்தோனி மரிய கிளாரட் ,
ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர்
(இ. 1870 )
1867 – மேடம் சி. ஜே. வாக்கர் ,
அமெரிக்கத் தொழிலதிபர் (இ.
1919 )
1902 – சரண் சிங் , 5வது இந்தியப்
பிரதமர் (இ. 1987 )
1912 – அன்னா ஜேன் ஆரிசன் ,
அமெரிக்க வேதியியலாளர் (இ. 1998 )
1933 – அக்கிகித்தோ, சப்பானியப் பேரரசர்
1938 – பாபு கான் , அமெரிக்கக்
கணினி அறிவியலாளர், பரப்புகை
கட்டுப்பாடு நெறிமுறையைக்
கண்டுபிடித்தவர்
1962 – இசுடீபன் எல், நோபல் பரிசு
பெற்ற உருமேனிய-அமெரிக்க
வேதியியலாளர்
1967 – கார்லா புரூனி, இத்தாலிய-
பிரான்சிய பாடகி
1981 – ராதிகா சிற்சபையீசன் , இலங்கை-
கனடிய அரசியல்வாதி
இறப்புகள்
1834 – தோமஸ் மால்தஸ் , ஆங்கிலேய
பொருளியலாளர் (பி. 1766 )
1907 – பியேர் ஜான்சென்,
பிரான்சிய வானியலாளர் (பி. 1824 )
1952 – சா. தர்மராசு சற்குணர் ,
தமிழகத் தமிழறிஞர் (பி. 1877 )
1959 – இர்வின் பிரபு, பிரித்தானிய
அரசியல்வாதி (பி. 1881 )
1973 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-
அமெரிக்க வானியலாளர், கோள்
அறிவியலாளர் (பி. 1905 )
1981 – பி. கக்கன், இந்திய விடுதலை
போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1908 )
2004 – பி. வி. நரசிம்ம ராவ் , 9வது
இந்தியப் பிரதமர் (பி. 1921 )
2010 – கே. கருணாகரன் , கேரளாவின்
7வது முதலமைச்சர் (பி. 1918 )
2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ் , ஏகே-47
துப்பாக்கியை வடிவமைத்த உருசியப்
பொறியாளர் (பி. 1919 )
2014 – கே. பாலச்சந்தர் , தமிழகத்
திரைப்பட இயக்குனர் (பி. 1930 )
2014 – கூத்தபிரான், தமிழக நாடகக்
கலைஞர் (பி. 1932 )
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் ( தெற்கு சூடான்,
சூடான்)

புதன், 21 டிசம்பர், 2016

டிசம்பர் 22 (December 22)

டிசம்பர் 22 (December 22) 
டிசம்பர் 22 (December 22) கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
1790 - துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
1807 - வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.
1845 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1849 - ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1963 - லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990 - மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.
பிறப்புகள்
1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)
1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)
1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
1887 – இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)
1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)
1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர்
1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
இறப்புகள்
1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)
1942 – பிராண்ஸ் போவாஸ், செருமானிய-அமெரிக்க மானிடவியலாளர், மொழியியலாளர் (பி. 1858)
1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)
2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)
2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)
2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)
சிறப்பு நாள்
அன்னையர் நாள் (இந்தோனேசியா)
தேசியக் கணித நாள் (இந்தியா)
ஆசிரியர் நாள் (கியூபா)

திங்கள், 19 டிசம்பர், 2016

டிசம்பர் 21 (December 21)

 டிசம்பர் 21 (December 21)

டிசம்பர் 21 (December 21) கிரிகோரியன் ஆண்டின் 355 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 356 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    69 - வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
    1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
    1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
    1967 - உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
    1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
    1971 - ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.
    1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
    1979 - ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.
    1988 - ஸ்கொட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
    1991 - கசக்ஸ்தானின் அல்மா-ஆட்டா நகரில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
    1992 - டச்சு விமானம் ஒன்று போர்த்துக்கலில் வீழ்ந்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
    1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    2007 - பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

    1932 - யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (இ. 2014)
    1942 - ஹூ சிங்தாவ், சீன மக்கள் குடியரசின் தலைவர்
    1948 - சாமுவேல் ஜாக்சன், அமெரிக்க திரைப்பட நடிகர்
    1963 - கோவிந்தா, இந்திய நடிகர்

இறப்புகள்

    72 - தோமா (திருத்தூதர்), உரோமைப் புனிதர் (பி. 1)
    1940 - எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1896)
    1988 - நிக்கோ டின்பெர்ஜென், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்கர் (பி. 1907)
    2006 - வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)
    2008 - கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்
    2015 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)

டிசம்பர் 20 (December 20)

டிசம்பர் 20 (December 20)
 
டிசம்பர் 20 (December 20) கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    69 - நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.
    1192 - சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
    1606 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
    1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
    1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
    1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
    1915 - முதலாம் உலகப் போர்: கடைசி அவுஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பியது.
    1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.
    1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
    1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
    1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
    1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
    1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
    1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
    1973 - ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
    1984 - இங்கிலாந்தில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
    1987 - பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர்.
    1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.
    1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
    1995 - அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
    1999 - போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது.

பிறப்புகள்

    1886 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)
    1901 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர், வான் டி கிராப் நிலை மின்னியற்றியைக் கண்டுபிடித்தவர் (இ. 1967)
    1920 – கனகசபை சிவகுருநாதன், இலங்கை எழுத்தாளர், சமூக சேவையாளர் (இ. 2003)
    1937 – வேலா அரசமாணிக்கம், தமிழ்ப் பேச்சாளர், இதழாசிரியர் (இ. 1991)
    1940 – யாமினி கிருஷ்ணமூர்த்தி, பரதநாட்டிய, குச்சிப்புடி நடனக் கலைஞர்
    1941 – பா. ரா. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர்
    1987 – பார்வதி ஓமனகுட்டன், இந்திய, மலையாள நடிகை

இறப்புகள்
    217 – செஃபிரீனுஸ் (திருத்தந்தை)
    1921 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (பி. 1852)
    1969 – ஆர். எஸ். சுபலட்சுமி, பெண்ணியவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1886)
    1993 – வி எட்வர்ட் டெமிங், அமெரிக்க புள்ளிவிபரவியலாளர், நூலாசிரியர் (பி. 1900)
    1994 – சிறில் பொன்னம்பெரும, இலங்கை அறிவியலாளர் (பி. 1923)
    1996 – கார்ல் சேகன், அமெரிக்க வானியற்பியலாளர், அண்டவியலாளர் (பி. 1934)
    2010 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1914)

சிறப்பு நாள்

    அடிமை ஒழிப்பு நாள் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)

வெள்ளி, 16 டிசம்பர், 2016

டிசம்பர் 19 (December 19)

டிசம்பர் 19 (December 19)
டிசம்பர் 19 (December 19) கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
    324 - லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.
    1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.
    1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
    1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
    1877 - யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.
    1907 - பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.
    1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
    1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.
    1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
    1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
    1967 - இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
    1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
    1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
    1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
    1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    1997 - இந்தோனீசியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
    1997 - டைட்டானிக் திரைப்படம் வெளியானது.
    2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

    1901 - ருடால்ப் ஹெல், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
    1906 - லியோனிட் பிரெஷ்னேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (இ. 1982)
    1922 - கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
    1934 - பிரதிபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்
    1974 - ரிக்கி பொன்ரிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

    1111 - அல் கசாலி, இசுலாமிய மெய்யியலாளர் (பி. 1058)
    1848 - எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)
    1927 - ராம் பிரசாத் பிசுமில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)
    2013 - டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)
    2014 - எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

    கோவா - விடுதலை நாள்

டிசம்பர் 18 (December 18)

டிசம்பர் 18 (December 18)  

டிசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    1271 - குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
    1505 - பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
    1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
    1787 - நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
    1911 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
    1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
    1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
    1941 - ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
    1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
    1961 - இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
    1966 - சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
    1973 - சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
    1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
    1990 - ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    1997 - எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது.
    1999 - ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
    2005 - சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
    2012 - தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000 வது கட்டுரை எழுதப்பட்டது.

பிறப்புக்கள்


    1822 - ஆறுமுக நாவலர், ஈழத்தின் ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் முன்னோடி (இ. 1879)
    1856 - ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியலாளர் (இ. 1940)
    1863 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)
    1878 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (இ. 1953)
    1932 - நா. பார்த்தசாரதி, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)
    1946 - நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)
    1948 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

இறப்புகள்

    1843 - தாமஸ் கிரஹாம், லினடொக் பிரபு, இந்தியாவுக்கான பிரித்தானிய வைசிராய் (பி. 1748)

சிறப்பு நாள்

    சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம்
    நைஜர் - குடியரசு தினம் (1958)

வியாழன், 15 டிசம்பர், 2016

டிசம்பர் 17 (December 17)

 டிசம்பர் 17 (December 17)

டிசம்பர் 17 (December 17) கிரிகோரியன் ஆண்டின் 351 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 352 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 14 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    942 - நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான்.
    1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
    1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
    1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
    1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
    1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
    1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.
    1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
    1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
    1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
    1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
    1967 - ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் போர்ட் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
    1970 - போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
    1973 - ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
    1983 - லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
    1986 - போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் பத்திரிகையாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.
    1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

    1908 - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் (இ. 1980)
    1959 - ரஞ்சகுமார், ஈழத்தின் சிறுகதையாசிரியர்
    1972 - ஜோன் ஆபிரகாம், இந்திய நடிகர்
    1975 - சுசந்திகா ஜயசிங்க, இலங்கையின் ஓட்ட வீராங்கனை

இறப்புகள்

    1947 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (பி. 1879)
    1967 - ஹரல்ட் ஹோல்ட், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் (பி. 1908)
    1975 - சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (பி. 1908)
    1979 - சேர் ஒலிவர் குணதிலக்க, இலங்கையின் மகா தேசாதிபதி

சிறப்பு நாள்

    பூட்டான் - தேசிய நாள் (1907)
    ஐக்கிய அமெரிக்கா - றைட் சகோதரர்கள் நாள்
    ஓய்வூதியர் தினம் (இந்தியா)
    பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

டிசம்பர் 16 ( December 16 )

டிசம்பர் 16 ( December 16 )

கிரிகோரியன்
ஆண்டின் 350 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1431 - இங்கிலாந்தின் ஆறாம்
ஹென்றி பிரான்ஸ் மன்னனாக
பாரிசில் முடிசூடினான்.
1497 - வாஸ்கொடகாமா
முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய
முடியாத தென்னாபிரிக்காவின்
அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள
நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1598 - கொரிய, ஜப்பானியக்
கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில்
கொரியா வெற்றி
பெற்றது.
1653 - சேர் ஒலிவர்
குரொம்வெல் இங்கிலாந்து ,
ஸ்கொட்லாந்து , அயர்லாந்து
நாடுகள் அடங்கிய
பொதுநலவாயத்தின்
தலைவரானார்.
1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித்
தடவையாக வெடித்தது.
1773 - அமெரிக்கப் புரட்சி:
பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் -
அமெரிக்கர்கள் பிரித்தானிய
கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி
தேநீர் பெட்டிகளை பாஸ்டன்
துறைமுகத்தில் எறிந்தனர்.
1835 - நியூயோர்க் நகரத்தில்
இடம்பெற்ற பெருந்தீயில் 530
கட்டிடங்கள் சேதமடைந்தன.
1857 - இத்தாலியின் நேப்பில்சில்
இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000
பேரைக் கொன்றது.
1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம்
ஏற்பட்டதில் 200,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1922 - போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல்
நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1925 - இலங்கை வானொலியின்
வானொலி சேவை
கொழும்பில் ஆரம்பம்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக்
கைப்பற்றினர்.
1960 - ஐக்கிய அமெரிக்க விமானம்
நியூ யோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134
பேர் கொல்லப்பட்டனர்.
1971 - வங்காளதேச விடுதலைப் போரில்
பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து
போர் முடிவுக்கு வந்தது.
1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1991 - கசக்ஸ்தான் சோவியத்
ஒன்றியத்திடம் இருந்து விடுதலை
பெற்றது.
பிறப்புகள்
1770 – லுடுவிக் ஃவான் பேத்தோவன்,
செருமானிய மேற்கத்தைய
இசையமைப்பாளர் (இ. 1827)
1775 – ஜேன் ஆஸ்டின், ஆங்கிலேய
எழுத்தாளர் (இ. 1817 )
1866 – வசீலி கண்டீன்ஸ்கி , உருசிய-
பிரான்சிய ஓவியர் (இ. 1944 )
1900 – மயிலை சீனி. வேங்கடசாமி ,
தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1980]])
1917 – ஆர்தர் சி. கிளார்க் , ஆங்கிலேய-
இலங்கை எழுத்தாளர் (இ. 2008)
1930 – லலிதா - திரைப்பட நடிகை (இ. 1982)
1933 – அடையார் கே. லட்சுமணன்,
பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர்
(இ. 2014 )
1957 – எச். டி. குமாரசாமி ,
கருநாடகாவின் 18வது முதலமைச்சர்
1967 – மிராண்டா ஓட்டோ , ஆத்திரேலிய
நடிகை
1969 – ஆடம் இரீசு , நோபல் பரிசு
பெற்ற அமெரிக்க
வானியலாளர், இயற்பியலாளர்
1984 – தியோ ஜேம்ஸ் , ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
1928 – பனகல் அரசர் , தென்னிந்திய
அரசியல்வாதி, சென்னை
மாகாணத்தின் இரண்டாவது
முதலமைச்சர் (பி. 1866 )
2005 – இளையதம்பி தர்சினி , இலங்கை
இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு
உட்படுத்தப்பட்டு, படுகொலை
செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்
பெண் (பி. 1985 )
சிறப்பு நாள்
வங்காளதேச வெற்றி நாள்
குடியரசு நாள் ( கசக்கஸ்தான்)

புதன், 14 டிசம்பர், 2016

டிசம்பர் 15 ( December 15 )

டிசம்பர் 15 ( December 15 )

கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 350
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 16 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1256 - மொங்கோலியப் பேரரசன்
குலாகு கான் அலாமுட்
(இன்றைய ஈரானில்) என்ற
இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
1799 - முற்றிலும் உள்ளூர்
மக்களைக்கொண்ட முதலாவது
ஆங்கில செமினறி கொழும்பில்
அமைக்கப்பட்டது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப்
போர் : அமெரிக்கப் படைகள்
கூட்டமைப்புப் படைகளை
டென்னசியில் முற்றாகத்
தோற்கடித்தனர்.
1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித்
கூடைப்பந்தாட்டத்தை முதன்
முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 - அலெக்சாண்டர்
புஷ்கினின் கலாசாரப்
பழமைகளைப் பேணும்
பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில்
புஷ்கின் மாளிகை
அமைக்கப்பட்டது.
1914 - முதலாம் உலகப் போர்:
சேர்பிய இராணுவம்
பெல்கிரேடை மீண்டும்
கைப்பற்றியது.
1914 - ஜப்பானில் மிட்சுபிஷி
நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட
வெடி விபத்தில் 687 பேர்
கொல்லப்பட்டனர்.
1941 - பெரும் இன அழிப்பு :
உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000
யூதர்கள் நாசிகளினால் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
1960 - மன்னர் மகேந்திரா
நேபாளத்தின் அரசைக் கலைத்து
நாட்டின் முழு அதிகாரத்தையும்
தனதாக்கிக் கொண்டார்.
1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக்
திரைப்படம் வெளியானது.
1967 - ஒகையோவில் ஒகையோ
ஆற்றிற்கு மேலே செல்லும்
வெள்ளிப் பாலம் உடைந்து
வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
1970 - சோவியத் ஒன்றியத்தின்
வெனேரா 7 விண்கலம் வெள்ளி
கோளின் மேற்பரப்பில் மெதுவாக
இறங்கிய முதலாவது கலமாகும்.
இதுவே வேறொரு கோளின் மீது
இறங்கிய முதலாவது
விண்கலமாகும்.
1970 - தென் கொரியப் பயணிகள்
கப்பல் கொரிய நீரிணையில்
மூழ்கியதில் 308 பேர்
கொல்லப்பட்டனர்.
1978 - மக்கள் சீனக் குடியரசை
அங்கீகரிப்பதாகவும்
தாய்வானுடனான உறவுகளைத்
துண்டிப்பதாகவும் அமெரிக்க
அதிபர் ஜிம்மி கார்ட்டர்
அறிவித்தார்.
1994 - இணைய உலாவி
நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0
வெளியிடப்பட்டது.
1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு
தெரிவித்து திருச்சியில்
"அப்துல் ரவூஃப்" என்பவர்
தீக்குளித்து இறந்தார்.
1997 - தஜிகிஸ்தான் விமானம்
ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின்
ஷார்ஜா விமானநிலையத்திற்கு
அருகில் வீழ்ந்து நொருங்கியதில்
85 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - தென் கிழக்கு ஆசியாவை
அணுவாயுதமற்ற பகுதியாக
அறிவிக்கும் உடன்படிக்கை
பாங்கொக்கில்
கையெழுத்திடப்பட்டது.
2001 - பீசாவின் சாயும் கோபுரம்
11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும்
திறக்கப்பட்டது.
2006 - கிழக்குப் பல்கலைக்கழக
உபவேந்தர் கலாநிதி
சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்
கொழும்பில் இனம் தெரியாத
ஆயுததாரிகளினால்
கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
பிறப்புக்கள்
37 – நீரோ , உரோமைப் பேரரசர் (இ.
68 )
1832 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்,
ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த
பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ.
1923 )
1834 – சார்லசு அகத்தசு யங் ,
அமெரிக்கச் சூரியக்
கதிர்நிரலியல் வானியலாளர் (இ.
1908 )
1852 – என்றி பெக்கெரல், நோபல்
பரிசு பெற்ற பிரான்சிய
இயற்பியலாளர் (இ. 1908 )
1860 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்,
நோபல் பரிசு பெற்ற
தென்மார்க்கு மருத்துவர் (இ. 1904 )
[1865]] – ஜான் வுட்ரோஃப் ,
பிரித்தானிய கீழ்த்திசை
மொழிப்புலமையாளர் (இ. 1936 )
1869 – திருப்பாம்புரம்
நடராஜசுந்தரம் பிள்ளை , தமிழக
நாதசுவரக் கலைஞர் (இ. 1938)
1907 – ஒசுக்கார் நிமேயெர் , ஐநா
தலைமையகத்தை வடிவமைத்தவ
பிரேசில் கட்டிடக் கலைஞர் (இ.
2012 )
1908 – இரங்கநாதானந்தர், இந்திய
மதகுரு (இ. 2005 )
1913 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
1933 – பாப்பு, இந்திய இயக்குநர்
(இ. 2014 )
1936 – சோ. ந. கந்தசாமி ,
தமிழறிஞர்
1944 – சிகோ மெண்டிஸ் ,
பிரேசில் தொழிற்சங்கத் தலைவர்
(இ. 1988 )
1945 – வினு சக்ரவர்த்தி தமிழ்
திரைப்பட நடிகர்
1953 – ஈ. சரவணபவன் , இலங்கை
அரசியல்வாதி, ஊடகவியலாளர்
1978 – மாற்கு யான்சேன் , டச்சு
இசைக்கலைஞர்
இறப்புகள்
1675 – யொஹான்னெஸ் வெர்மீர் ,
டச்சு ஓவியர் (பி. 1632 )
1857 – ஜார்ஜ் கேலி , ஆங்கிலப்
பொறியாளர் (பி. 1773 )
1890 – வீற்றிருக்கும் எருது ,
அமெரிக்கப் பழங்குடித் தலைவர்
(பி. 1831 )
1950 – வல்லபாய் பட்டேல், இந்திய
அரசியல்வாதி (பி. 1875)
1965 – மு. பாலசுந்தரம் ,
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
(பி. 1903 )
1966 – வால்ட் டிஸ்னி , அமெரிக்க
இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1901 )
1987 – ப. ராமமூர்த்தி , இந்திய
இடதுசாரி அரசியல்வாதி (பி.
1908 )
2011 – எஸ். வி. ஆர்.
கணபதிப்பிள்ளை, இலங்கை
மெல்லிசை, திரைப்படப்
பின்னணிப் பாடகர்
2011 – கிறித்தபர் ஃகிச்சின்சு ,
ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
(பி. 1949 )
சிறப்பு நாள்
பன்னாட்டுத் தேயிலை நாள்.