டிசம்பர் 15 ( December 15 )
கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 350
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 16 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1256 - மொங்கோலியப் பேரரசன்
குலாகு கான் அலாமுட்
(இன்றைய ஈரானில்) என்ற
இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
1799 - முற்றிலும் உள்ளூர்
மக்களைக்கொண்ட முதலாவது
ஆங்கில செமினறி கொழும்பில்
அமைக்கப்பட்டது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப்
போர் : அமெரிக்கப் படைகள்
கூட்டமைப்புப் படைகளை
டென்னசியில் முற்றாகத்
தோற்கடித்தனர்.
1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித்
கூடைப்பந்தாட்டத்தை முதன்
முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 - அலெக்சாண்டர்
புஷ்கினின் கலாசாரப்
பழமைகளைப் பேணும்
பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில்
புஷ்கின் மாளிகை
அமைக்கப்பட்டது.
1914 - முதலாம் உலகப் போர்:
சேர்பிய இராணுவம்
பெல்கிரேடை மீண்டும்
கைப்பற்றியது.
1914 - ஜப்பானில் மிட்சுபிஷி
நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட
வெடி விபத்தில் 687 பேர்
கொல்லப்பட்டனர்.
1941 - பெரும் இன அழிப்பு :
உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000
யூதர்கள் நாசிகளினால் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
1960 - மன்னர் மகேந்திரா
நேபாளத்தின் அரசைக் கலைத்து
நாட்டின் முழு அதிகாரத்தையும்
தனதாக்கிக் கொண்டார்.
1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக்
திரைப்படம் வெளியானது.
1967 - ஒகையோவில் ஒகையோ
ஆற்றிற்கு மேலே செல்லும்
வெள்ளிப் பாலம் உடைந்து
வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
1970 - சோவியத் ஒன்றியத்தின்
வெனேரா 7 விண்கலம் வெள்ளி
கோளின் மேற்பரப்பில் மெதுவாக
இறங்கிய முதலாவது கலமாகும்.
இதுவே வேறொரு கோளின் மீது
இறங்கிய முதலாவது
விண்கலமாகும்.
1970 - தென் கொரியப் பயணிகள்
கப்பல் கொரிய நீரிணையில்
மூழ்கியதில் 308 பேர்
கொல்லப்பட்டனர்.
1978 - மக்கள் சீனக் குடியரசை
அங்கீகரிப்பதாகவும்
தாய்வானுடனான உறவுகளைத்
துண்டிப்பதாகவும் அமெரிக்க
அதிபர் ஜிம்மி கார்ட்டர்
அறிவித்தார்.
1994 - இணைய உலாவி
நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0
வெளியிடப்பட்டது.
1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு
தெரிவித்து திருச்சியில்
"அப்துல் ரவூஃப்" என்பவர்
தீக்குளித்து இறந்தார்.
1997 - தஜிகிஸ்தான் விமானம்
ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின்
ஷார்ஜா விமானநிலையத்திற்கு
அருகில் வீழ்ந்து நொருங்கியதில்
85 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - தென் கிழக்கு ஆசியாவை
அணுவாயுதமற்ற பகுதியாக
அறிவிக்கும் உடன்படிக்கை
பாங்கொக்கில்
கையெழுத்திடப்பட்டது.
2001 - பீசாவின் சாயும் கோபுரம்
11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும்
திறக்கப்பட்டது.
2006 - கிழக்குப் பல்கலைக்கழக
உபவேந்தர் கலாநிதி
சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்
கொழும்பில் இனம் தெரியாத
ஆயுததாரிகளினால்
கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
பிறப்புக்கள்
37 – நீரோ , உரோமைப் பேரரசர் (இ.
68 )
1832 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்,
ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த
பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ.
1923 )
1834 – சார்லசு அகத்தசு யங் ,
அமெரிக்கச் சூரியக்
கதிர்நிரலியல் வானியலாளர் (இ.
1908 )
1852 – என்றி பெக்கெரல், நோபல்
பரிசு பெற்ற பிரான்சிய
இயற்பியலாளர் (இ. 1908 )
1860 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்,
நோபல் பரிசு பெற்ற
தென்மார்க்கு மருத்துவர் (இ. 1904 )
[1865]] – ஜான் வுட்ரோஃப் ,
பிரித்தானிய கீழ்த்திசை
மொழிப்புலமையாளர் (இ. 1936 )
1869 – திருப்பாம்புரம்
நடராஜசுந்தரம் பிள்ளை , தமிழக
நாதசுவரக் கலைஞர் (இ. 1938)
1907 – ஒசுக்கார் நிமேயெர் , ஐநா
தலைமையகத்தை வடிவமைத்தவ
பிரேசில் கட்டிடக் கலைஞர் (இ.
2012 )
1908 – இரங்கநாதானந்தர், இந்திய
மதகுரு (இ. 2005 )
1913 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
1933 – பாப்பு, இந்திய இயக்குநர்
(இ. 2014 )
1936 – சோ. ந. கந்தசாமி ,
தமிழறிஞர்
1944 – சிகோ மெண்டிஸ் ,
பிரேசில் தொழிற்சங்கத் தலைவர்
(இ. 1988 )
1945 – வினு சக்ரவர்த்தி தமிழ்
திரைப்பட நடிகர்
1953 – ஈ. சரவணபவன் , இலங்கை
அரசியல்வாதி, ஊடகவியலாளர்
1978 – மாற்கு யான்சேன் , டச்சு
இசைக்கலைஞர்
இறப்புகள்
1675 – யொஹான்னெஸ் வெர்மீர் ,
டச்சு ஓவியர் (பி. 1632 )
1857 – ஜார்ஜ் கேலி , ஆங்கிலப்
பொறியாளர் (பி. 1773 )
1890 – வீற்றிருக்கும் எருது ,
அமெரிக்கப் பழங்குடித் தலைவர்
(பி. 1831 )
1950 – வல்லபாய் பட்டேல், இந்திய
அரசியல்வாதி (பி. 1875)
1965 – மு. பாலசுந்தரம் ,
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
(பி. 1903 )
1966 – வால்ட் டிஸ்னி , அமெரிக்க
இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1901 )
1987 – ப. ராமமூர்த்தி , இந்திய
இடதுசாரி அரசியல்வாதி (பி.
1908 )
2011 – எஸ். வி. ஆர்.
கணபதிப்பிள்ளை, இலங்கை
மெல்லிசை, திரைப்படப்
பின்னணிப் பாடகர்
2011 – கிறித்தபர் ஃகிச்சின்சு ,
ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
(பி. 1949 )
சிறப்பு நாள்
பன்னாட்டுத் தேயிலை நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக